Published:Updated:

8 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டம்... முடிவுக்கு வராத பி.ஏ.சி.எல் விவகாரம்!

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

போராட்டம்

8 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டம்... முடிவுக்கு வராத பி.ஏ.சி.எல் விவகாரம்!

போராட்டம்

Published:Updated:
போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
போராட்டம்

இந்தியா முழுக்க ஐந்து கோடிக்கும் அதிகமான நபர்களிடமிருந்து ரூ.48,000 கோடி நிதி திரட்டி நிலம் தருவதாக ஏமாற்றிய பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் விவகாரம் எட்டு ஆண்டுகளாகியும் முடியாமல் தொடர்கிறது. இந்த நிறுவனத்தில் பணத்தைக் கட்டி ஏமார்ந்த வர்கள் அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை அன்றும் பி.ஏ.சி.எல் மோசடியில் சிக்கி பாதிப்புக்குள்ளானவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தியது தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் சார்பில் நம்மிடம் பேசிய வடிவேலு, “2014-ல் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் மோசடிகள் அம்பலமாயின. பி.ஏ.சி.எல் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து செபி நடவடிக்கை எடுத்து நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கியது. அத்துடன், பி.ஏ.சி.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளையும் கைப்பற்றி செபியிடம் ஒப்படைத்தது. இந்தச் சொத்துகளை விற்று பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர் களுக்குத் தருவோம் என்று சொன்னார்கள். இதுதொடர்பான நடவடிக்கைகளைத் திட்டமிட லோதா கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை.

8 ஆண்டுகளாகத் தொடரும் போராட்டம்... முடிவுக்கு வராத பி.ஏ.சி.எல் விவகாரம்!

செபியிடம் இருக்கும் பி.ஏ.சி.எல் நிறுவன சொத்துகளை விற்று மக்களுக்குப் பணத்தைத் தருவதில் என்ன பிரச்னை என்று புரியவில்லை. முதலீடு செய்தவர்களில் பலர் இறந்துவிட்டனர். இப்போது அவர்களுடைய குடும்பத்தினர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படியே தலைமுறை தலைமுறையாக வந்து நாங்கள் போராடித்தான் ஆக வேண்டுமா? மத்திய அரசும் செபியும் விரைவில் நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணம் எங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் அடுத்தடுத்து தீவிரமான போராட் டங்களை முன்னெடுப்போம்” என்றார்.

தமிழகம் முழுக்க பல ஊர்களில் நடந்துவரும் மோசடித் திட்டங்களில் சிக்காமல் தப்பிக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும்!