Published:Updated:

இந்தியாவில் முதலீட்டை குவிக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்... காரணம் என்ன தெரியுமா?

Corporate companies

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் அதிக முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம் உள்ளது. இந்நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. புதிய பிசினஸ்களும், தொழில்நுட்பம் பிசினஸ்களும் அதிகளவில் தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன.

இந்தியாவில் முதலீட்டை குவிக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள்... காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் அதிக முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம் உள்ளது. இந்நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. புதிய பிசினஸ்களும், தொழில்நுட்பம் பிசினஸ்களும் அதிகளவில் தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன.

Published:Updated:
Corporate companies

இந்தியா கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய மாற்றங்கள் ஒருபக்கம், கொரோனா போன்ற பேரிடர் உண்டாக்கிய மாற்றங்கள் மறுபக்கம் என இந்தியப் பொருளதாரம் பல மாற்றங்களைக் கண்டுவருகிறது.

இந்தியப் பொருளதாரம்
இந்தியப் பொருளதாரம்

ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற சர்வதேச காரணிகளும் நாட்டின் பொருளாதாரத்தைப் பதம் பார்த்தது. இதற்கிடையில் ரூபாய் மதிப்பிழப்பும் இந்தியாவின் நிலையை மோசமான நிலைக்கு உள்ளாக்கியது. இத்தனை மாற்றங்களைக் கண்ட போதிலும் இந்தியாவின் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையவே இல்லை எனலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காரணம் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மூலமாக தனியார் பங்கு முதலீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு குவித்துள்ளார்கள். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 27.6 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

ஒருபக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ முதலீடு வெளியேறிக் கொண்டிருந்தாலும் இந்தியத் தொழில் வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து 29 பில்லியன் டாலர் முதலீட்டை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் விற்று வெளியே எடுத்துள்ளனர்.

ஆனால் இதை சமன்செய்யும் விதமாக அந்நிய நேரடி முதலீடு மூலமாக, தனியார் பங்கு மூலதனமாகவும், வென்சர் கேபிடலாகவும் 27.6 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளனர்.

இது இந்தியாவின் மீது முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை தீர்க்கமாக உறுதி செய்கிறது. பல்வேறு குறுகிய கால நெருக்கடிகள் வந்தாலும் நீண்டகால அடிப்படையில் இந்தியா வளர்ச்சியின் பாதையில் இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ப நாட்டின் நிதி நிலையையும் பொருளாதாரத்தையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து எடுத்து வருகின்றன. இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் இந்தியத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் மாறியுள்ளன.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இதனால் போர்ட்ஃபோலியோ முதலீட்டை காட்டிலும் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் அதிகமாக குவிந்து கொண்டிருக்கிறது. இந்த முதலீடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 15.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 526 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 713 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதேசமயம் போர்ட்ஃபோலியோ முதலீட்டையும், அந்நிய நேரடி முதலீட்டையும் ஒப்பிட முடியாது என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் உலகம் முழுவதுமே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் நிதி சார் முதலீடுகள் குறைந்துள்ளன. எனவே தனியார் பங்கு முதலீடு, வென்சர் கேப்பிட்டல் முதலீடு அதிகரித்துள்ளன என்கின்றனர்.

வெளியேறும்  எஃப்.ஐ.ஐ
வெளியேறும் எஃப்.ஐ.ஐ

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் அதிக முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம் உள்ளது. இந்நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. புதிய பிசினஸ் மாடல்களும், தொழில்நுட்பம் சார்ந்த பிசினஸ்களும் அதிகளவில் தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன. ஆசியாவின் பிற நாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த முதலீடுகள் இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளன. ஆசியாவிலேயே அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்த முதலீடுகள் அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான அடித்தளம் என்றே சொல்லலாம்.