Published:Updated:

நிலுவையில் உள்ள அகவிலைப்படி... கிடைக்கும் பணப்பலன்! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அகவிலைப்படி
பிரீமியம் ஸ்டோரி
அகவிலைப்படி

Dearness allowance

நிலுவையில் உள்ள அகவிலைப்படி... கிடைக்கும் பணப்பலன்! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

Dearness allowance

Published:Updated:
அகவிலைப்படி
பிரீமியம் ஸ்டோரி
அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்கள், தமிழக அரசு ஊழியர்கள், ரயில்வே, அஞ்சல் துறை, மின் வாரியம் மற்றும் அரசுத் துறையினருக்கு இணையாக ஊதியம் பெறும் பொதுத்துறை ஊழியர்கள் எனப் பல லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜூலை மாதத்தைப் பெருத்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். காரணம், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூன்று தவணை அகவிலைப்படி திரும்பக் கிடைக்கும் என்பதுதான்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

கொரோனா தாக்கம் காரணமாக ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணை அகவிலைப்படியை ஒத்திவைத்த மத்திய அரசு, ‘ஒத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியானது ஜூலை 2021-க்கான அகவிலைப்படி அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பித் தரப்படும்; கடந்துபோன 18 மாதங்களுக்கு நிலுவை வழங்கப்பட மாட்டாது’ எனத் தெரிவித்திருந்தது. விலைவாசிப் புள்ளி அடிப்படையில் ஜனவரி 2020 முதல் 4%, ஜூலை 2020-லிருந்து மேலும் 3%, ஜனவரி 2021-ல் இன்னும் 4% சேர்ந்து தற்போதைய நிலையில் (4+3+4) 11% அகவிலைப்படி திருப்பித் தரப்படக்கூடும்.

‘இதற்காகவா இத்தனை எதிர்பார்ப்பு’ என யாரும் நினைக்க வேண்டாம். காரணம், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப் படி, ஊழியரின் 100% சம்பளத்துடன் அவர் பெற்றுவந்த 125% அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளமாகக் கருதப்பட்டது. இந்த (100+125) 225% அடிப்படைச் சம்பளத்துக்கு மேலும் ஒரு 14% சம்பள உயர்வு அனுமதிக்கப் பட்டது. (225X14=32%). இதன் காரணமாக 100 ரூபாய் என்றிருந்த அடிப்படைச் சம்பளம் (100+125+ 32) 257 ரூபாய் என உயர்ந்தது. அதாவது, 31.12.2015 அன்று 20,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கொண்டிருந்த ஊழியரின் அடிப்படைச் சம்பளம், 01.01.2006-ல் 51,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். சம்பள கமிஷன் அமலாக்கம் பெற்று ஐந்து வருடங்களான நிலையில், வருடாந்தர ஊதிய உயர்வு மூலம் இவரது தற்போதைய அடிப்படைச் சம்பளம் 60,000 ரூபாயைத் தாண்டக்கூடும்.

ஓய்வூதியத்துக்கும் இதே கணக்கீடுதான். அதாவது, சம்பளம் 20,000 ரூபாய் என்று இருந்திருந்தால், 11% அகவிலைப்படி உயர்வு மூலம் இந்த ஊழியரின் சம்பளம் 2,200 ரூபாய் மட்டுமே அதிகமாகி இருக்கும். சம்பள கமிஷன் பரிந்துரையைத் தொடர்ந்து அடிப்படை சம்பளம் 60,000 என்றாகிவிட்ட நிலையில் 11% அகவிலைப் படி உயர்வு இவரது சம்பளத்தில் 6,600 ரூபாயை அதிகரித்துவிடும்.

அது மட்டுமல்ல, ஜூன் 2021 வரையான அகவிலைப்படி உயர்வுதான் 11%. ஜூலை 2021-க்கு எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி 4 சதவிகிதமாக உள்ளது. இதன்படி பார்த்தால், ஜூலை 2021-க்குப் பிறகு அகவிலைப்படி உயர்வு 15 சதவிகிதமாகக் கூடும். அதாவது, 6,600 ரூபாய் என்பது 9,000 ரூபாயாக உயரும். எனவேதான், இத்தனை எதிர்பார்ப்பு! 

நிலுவையில் உள்ள அகவிலைப்படி... கிடைக்கும் பணப்பலன்! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

ஓய்வு பெற்றவர்களுக்கும்...

01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021-ல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள மூன்று தவணை அகவிலைப்படியும் கருத்தியலாக ஏற்கப்பட்டு, ஜூலை 2021 சம்பளம் தொடங்கி ரொக்கமாகக் கிடைக்கும். கருத்தியலாக வழங்கப்படும் பணப்பலன் பணியில் உள்ளவர்களுக்கு ரொக்கப்பலன் தராது. எனவே, தான் மேற்கண்ட 18 மாதங்களுக்கு நிலுவை கிடைக்காது.

ஆனால், ஓய்வு பெற்றவர் களைப் பொறுத்தவரை, கருத்திய லாக ஏற்பளிக்கப்படும் எந்த ஒரு பணப்பலனும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரொக்கப் பலன் தரும். அதாவது, மாதாந்தர ஓய்வூதியம் ஊழியர் கடைசி யாகப் பெற்ற அடிப்படைச் சம்பளம், தனி சம்பளம் (Personal pay) மற்றும் சிறப்பு சம்பளம் (special pay) ஆகியவற்றின் அடிப் படையிலேயே நிர்ணயிக்கப் படுகிறது. அகவிலைப்படி சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்யப் படுவதில்லை. ஆனால், ஓய்வு பெறும்போது தரப்படும் பணிக் கொடை மற்றும் இறுதி விடுப்பு ஒப்படை இரண்டுக்கும் அடிப்படை சம்பளத்துடன் ஓய்வு பெறும்போது அமலில் உள்ள அகவிலைப்படியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதிகபட்ச பணிக்கொடை 16.5 மாத சம்பளமாகவும், அதிகபட்ச விடுப்பு ஒப்படை 11 மாத சம்பளமாகவும் உள்ளது.

நிலுவையில் உள்ள அகவிலைப்படி... கிடைக்கும் பணப்பலன்! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

நிலுவைத் தொகை...

01.01.2020 முதல் 30.06.2021 வரை ஓய்வு பெற்ற அனை வருக்குமே 17% அகவிலைப்படி கணக்கீட்டின் அடிப்படையில் தான் பணிக்கொடை மற்றும் விடுப்பு ஒப்படை சம்பளம் ஆகிய இரண்டுக்கும் ரொக்கம் தரப்பட்டிருக்கும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மீட்சி செய்யப்படும்பட்சத்தில், பணிக் கொடை மற்றும் விடுப்பு சம்பளம் மறு கணக்கீடு செய்யப் படக்கூடும். அதாவது, 01.01.2020 முதல் 30.06.2020 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 21% அகவிலைப் படியும், 01.07.2020 முதல் 31.12.2020 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 24% அகவிலைப்படியும், 01.01.2021 முதல் 30.06.2021 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 28% அகவிலைப்படியும் சேர்த்து பணிக் கொடையும், விடுப்பு சம்பளமும் மறு கணக்கீடு செய்யப்பட்டு, நிலுவைத் தொகை வழங்கப்படக்கூடும். ஆனால், மேற்கண்ட கால இடைவெளியில் பெற்ற மாத ஓய்வூதியத்துக்கு நிலுவை கிடையாது.

மேற்கண்ட கணக்கீடுகள் அனைத்தும் ஏற்கெனவே மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை கடைப் பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையின் அடிப்படையில் அமைந்தவை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படிக்கு நிலுவை தரப்படும் என்று இதுவரை எந்த அறிவிப்பும் கிடையாது. இம்மாதம் 26–ம் தேதி அரசுத் தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு பங்குபெறும் கூட்டுக் குழுக் கூட்டத்தில் நிலுவை அறிவிக்கப்பட்டால், ரூ.60,000 அடிப்படை சம்பளதாரர் ரூ.79,200 நிலுவை பெறுவார்.

என்ன நடக்கும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism