Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவுக்குப் பின்தான் மருத்துவ காப்பீடே எடுத்தோம்!' - புதிய சர்வே முடிவுகள் சொல்வது என்ன?

financial products
financial products

இதில் கலந்துகொண்ட பாதிக்கு மேற்பட்டோர் ஆயுள் காப்பீடு பற்றிய தங்கள் எண்ணம் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு, மாறி இருப்பதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் மக்களிடம் காப்பீடு குறித்தான விழிப்புணர்வு மிக அதிக அளவில் ஏற்பட்டிருப்பதாக டாட்டா ஏ.ஐ.ஏ நிறுவன சர்வே முடிவு தெரிவிக்கின்றது.

இந்த சர்வேயை டாட்டா ஏ.ஐ.ஏ நிறுவனத்துக்காக நீல்சன் ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது. இந்த சர்வே இந்தியா முழுக்க எடுக்கப்பட்டுள்ளது. 25 - 55 வயதுடையவர்கள் இந்த சர்வேயில் கலந்துகொண்டுள்ளனர். இந்த சர்வேயில் வேலைக்குச் செல்பவர்கள், தொழில் முனைவோர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வேயில் இருந்து பின்வரும் தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.

Insurance (Representational Image)
Insurance (Representational Image)

1. இதில் கலந்துகொண்ட 51% நபர்கள் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். 48% நபர்கள் மருத்துவ காப்பீடு எடுத்திருக்கிறார்கள்.

2. இதில் கலந்துகொண்ட பாதிக்கு மேற்பட்டோர் ஆயுள் காப்பீடு பற்றிய தங்கள் எண்ணம் கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு மாறி இருப்பதாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.

3. 30% மேற்பட்டோர் புதிதாகக் கடந்த ஆண்டில்தான் ஆயுள் காப்பீடு எடுத்திருப்பதாகவும், 26% பேர் புதிதாக மருத்துவ காப்பீடு எடுத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். சோதனைக் காலத்தில் தம்மையும் தமது குடும்பத்தையும் காப்பதற்கு காப்பீடுதான் முதல் நிதி ஆவணமாக இருக்கும் என்பதால் தாங்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

4. காப்பீடு எடுக்காத பெரும்பான்மையானவர்கள் இன்னும் 6 மாத காலத்துக்குள் காப்பீடு எடுக்க இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

5. 62% நபர்கள் அவசர கால மருத்துவ செலவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான தங்களின் முதல் நிதி ஆவணமாக காப்பீடு இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

6. 84% நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாகத் தாங்கள் இன்னும் அச்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்து உள்ளனர்.

7. 61% நபர்கள் கொரோனா ஊரடங்குக் காரணமாகப் பொருளாதார வளர்ச்சியின் தேக்க நிலை தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

8. 50% மக்கள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அதிக வேலைப்பளு காரணமாகத் தங்களது மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் கலந்துகொண்ட பெண்களில் 55% பேர் அதிக வேலைப் பளுவால் தங்கள் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Insurance
Insurance

9. காப்பீடு எடுத்தவர்களில் 41% பேர் காப்பீடு நிறுவனங்களின் வலைதளத்தில் ஏஜென்ட் உதவி இல்லாமல் நேரடியாக எடுத்துள்ளதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

10. முதலீடுகள் தொடர்பான கேள்விகளுக்கு 33% பேர் வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்வதாகவும், 30% நபர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 24% நபர்கள் நேரடி பங்குகளிலும், 17% நபர்கள் தங்கத்தில் நேரடியாகவும், கோல்ட் இடிஎப் திட்டங்கள் வாயிலாகவும் முதலீடு செய்துள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையான மக்கள் காப்பீட்டுத் திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுவது இக்கட்டான பேரிடர் காலத்தில் உடல் நலமும் மன நலமும் முக்கியம் என்று கருதுவதால்தான்.

இந்த சர்வே முடிவுகள், மக்களின் முதலீட்டு ஆர்வத்தில் கொரோனாவுக்கு முன்பும் பின்புமான சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்துகொள்ள உதவுவதாக உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு