பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தனிநபர் கடன்... என்னென்ன சாதகங்கள், பாதகங்கள்... ஏன் தவிர்க்க வேண்டும்..?

தனிநபர் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
தனிநபர் கடன்

P E R S O N A L L O A N

இராம.பழனியப்பன்

தனிநபர் கடன் பெற நீங்கள் எந்த ஜாமீனும் கொடுக்கத் தேவையில்லை. வங்கி களுக்குத் திரும்பி வராத தனிநபர் கடன்களை வசூலிக்க எந்தவொரு பாதுகாப்பும் இல்லை. அவர்கள் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும். இதனால், தனிநபர் கடன்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வங்கிகள் வசூலிக்கின்றன. தனிநபர் கடனுக்கான சராசரி வட்டி விகிதம் 14 சதவிகிதத்துக்கு மேல்.

இராம.பழனியப்பன்
இராம.பழனியப்பன்

மேற்கத்திய நாடுகளில், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் கிரெடிட் ஸ்கோர் பெரும் பங்கு வகிக்கிறது. கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், வட்டி விகிதம் குறையும். வங்கிகளின் பார்வையில், அதிக கிரெடிட் ஸ்கோர் என்பது நிறைந்த பாதுகாப்பைக் குறிக்கிறது.

இந்தியாவில், வங்கிகள் கிரெடிட் ஸ்கோரை ஓர் அளவுகோலாக மட்டுமே பயன்படுத்துகின்றன. இது வட்டி விகிதங்களைப் பாதிக்காது. மாறாக, கடன் வாங்குபவர் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு மலிவான ஒன்றைக் தேர்ந்தெடுக்க முடியும்.

பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள தனிநபர் கடன் வாங்குகிறார்கள். திருமணச் செலவுகள், அவசரத் தேவைகள், வெளிநாட்டுச் சுற்றுலா, மருத்துவச் செலவுகள், மற்றொரு கடனைத் திருப்பிச் செலுத்த மற்றும் மகப்பேறு செலவுகள் ஆகியவற்றுக்காக தனிநபர் கடன்கள் வாங்கப் படுகின்றன.

மிக எளிதில் கிடைப்பதால், தனிநபர் கடன்கள் மக்கள் மத்தியில் பிரபலமான தேர்வாக உள்ளது. பெரிய கட்டடங்களின் வாசலில் பலர் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதை நீங்கள் கவனித் திருப்பீர்கள். உங்களுக்குத் தனிநபர் கடன் தேவையா என்று கேட்டு, தொலைபேசி அழைப்புகளும் வந்திருக்கும். மாதச் சம்பளம் வாங்குவோருக்கு தனிநபர் கடன் தர வங்கிகள் தயாராகவே உள்ளன. ஏனெனில், மாதச் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை வங்கிக் கணக்கில் கிடைக்கப் பெறுகிறார்கள்.

கடனை வழங்கும் வங்கிகள் அந்த வங்கிக் கணக்கில் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இ.சி.எஸ்) வழியாக தங்கள் மாதத் தவணையை எளிதில் திரும்பப் பெறுகின்றன.

தனிநபர் கடன்... என்னென்ன சாதகங்கள், பாதகங்கள்... ஏன் தவிர்க்க வேண்டும்..?

தனிநபர் கடன்களின் நன்மைகள்...

1. நீங்கள் எந்தச் சொத்துப் பாதுகாப்பையும் வழங்கத் தேவையில்லை.

2. தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் கிரெடிட் கார்டு விகிதங்களைவிடக் குறைவு.

3. எந்தவொரு தேவைக்கும் நீங்கள் தனிநபர் கடன்களை வாங்கலாம். அதற்கான காரணத்தை நீங்கள் வங்கியில் கூறத் தேவையில்லை.

4. தனிநபர் கடன்கள் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கக்கூடியவை. சில மணி நேரங்களில்கூட கடன் தொகையை நீங்கள் வாங்கிவிட முடியும்.

தனிநபர் கடன்களின் பாதகங்கள்...

1. தனிநபர் கடன் ஜாமீன் இல்லா கடன் என்பதால் வங்கிகள் அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கின்றன.

2. கடனைத் திரும்ப செலுத்து வதற்கான கால அவகாசத்தை குறைக்க, அதிகரிக்க வழி இல்லை.

3. மற்ற கடன்களைப்போல தனிநபர் கடன்களை முன்கூட்டியே திரும்பச் செலுத்தி வட்டிச் சுமையைக் குறைக்கும் வசதி பெரும்பாலான வங்கிகளில் இல்லை.

4. இது எளிதில் கிடைப்பதாலும், விரைவாகப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாலும், தனிநபர் கடனை எடுப்பதற்கான முடிவும் விரைவாகவே எடுக்கப்படுகிறது.

அதிக வட்டி செலுத்தக்கூடிய வகையிலான தனிநபர் கடன்களை வெறுமனே எந்தவிதக் காரணங்களும் இல்லாமல் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவினங் களைச் சமாளிக்கும் வகையில் நாம் எப்போதும் தயாராக இருப்பதுதான் தனிநபர் கடனைத் தவிர்ப்பதற்கான ஒரே வழியாகும்.