Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வு... ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த மத்திய அரசு! பரபர மக்கள் கருத்து...

பெட்ரோல் விலை
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் விலை

I N T E R A C T I O N

பெட்ரோல் விலை உயர்வு... ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த மத்திய அரசு! பரபர மக்கள் கருத்து...

I N T E R A C T I O N

Published:Updated:
பெட்ரோல் விலை
பிரீமியம் ஸ்டோரி
பெட்ரோல் விலை

"எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத் துக்காக பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவதாக மத்திய அரசின் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. இது பற்றி உங்களின் கருத்து என்ன?” என்ற கொஞ்சம் சீரியஸான கேள்வியை நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் சொன்ன கமென்ட் ஃபயர் ரகம்.

“கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவில் அம்பானிகிட்ட மட்டும்தான் இருக்கு குஜராத்ல. அப்போ ஏறித்தான ஆகணும். கார்ப்பரேட்டுக்கு வரித் தள்ளுபடி பண்ணியாச்சு. கஜானா காலி ஆயிடுச்சு. அரசாங்கம் நடத்தப் பணம் வேணும். அதுக்கு பெட்ரோல் விலைய ஏத்தினா ஒரே பொருள்ல கொள்ளை லாபம். பைசா கணக்குல ஏத்துனா யாரும் கேட்கப் போறதில்லை.

எரிபொருள் விலை ஏத்தினாலே போதும். எல்லாப் பொருளுக்கும் விலை ஏறிடும். அதுக்கும் வரி இஷ்டத்துக்கு போட்டுக்கலாம். இப்படி அரசுக்கு ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்குற விஷயம்தான் பெட்ரோல் விலை உயர்வு”னு சொல்லிருக்காரு ஶ்ரீனிவாசன். அடேங்கப்பா... பகல் கொள்ளையா இருக்கே!

“எரிவாயு விலையேற்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கையில் உள்ளது. மத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றினால், மாநில அரசு கலால் வரியை உயர்த்துகின்றன. இரு அரசுகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மத்திய அரசு விலை குறைப்பதாக இல்லை. மாநில அரசும் அவர்களுக்கு சளைத்த வர்கள் இல்லை என்று வரியைக் குறைக்கவில்லை. இதற்கிடையில் வாழ்வா சாவா என்பதுதான் மக்களின் இன்றைய நிலை. பெட்ரோல் மத்திய அரசின் வரி 20% மற்றும் டீசல் 21%. மாநில அரசின் வரி பெட்ரோல் 34% மற்றும் டீசல் 25%” என்று ஆதங்கப்பட்டு கமென்ட் பண்ணிருக்காரு மாரிமுத்து. சார், நீங்க புள்ளிவிவரப் புலி...

“கவர்மென்ட் கிட்ட காசு இல்லை. இன்னும் 20 வருஷம்தான் பெட்ரோல், டீசல் கிடைக்கும். அதுவரைக்கும் எரியுற வீட்டுல பிடுங்குறது மிச்சம்னு நம்மகிட்ட பிடிங்கிக்கிட்டேதான் இருப்பாங்க. இனி மாற்று எரிபொருள் தேவைக்கு நாமதான் மாறணும்”னு சொல்லிருக்காரு மோகன் பாபு. அதுவும் சரிதான்!

“எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றால் அதன் விலையைக் குறைக்க வேண்டும். இங்கு எதிர்மறையாக பெட்ரோல், டீசல் விலை அல்லவா உயர்ந்துகொண்டே உள்ளது? என்ன கணக்கோ புரியவில்லை?”னு சொல்லிருக்காரு பத்மநாபன் சௌந்தரராஜன். இதெல்லாம் அரசியல் தந்திரம் சார்!

பெட்ரோல் விலை உயர்வு... ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த மத்திய அரசு!  பரபர மக்கள் கருத்து...

“பெரும்பாலும் திரைப்படங்களில் வில்லன்களின் டயலாக் ‘அரசுகிட்டே வாங்கிக்க, விசுவாசத்தை மட்டும் என்கிட்டே காட்டு’ என்பார்கள். அந்த வசனத்தின்படி, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்கிறார் நம்ம மோடி. ஒன்றா, இரண்டா 20 லட்சம் கோடியை வாரி வழங்கிவிட்டு, ஊழலே இல்லாத அரசு என்று மார்த்தட்டிக் கொள்வது!”என்று சற்று காட்டமாகவே பதிவிட்டிருக் கிறார் ஜெயச்சந்திரன்.

“எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்க குறைந்தது 10 ஆண்டுகளாகிவிடும். மத்தியஅரசு உலக வங்கியில் கடன் வாங்கித்தான் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும். அப்படிச் செய்தால் அது நம் வருங்கால சந்ததியினரை நிதிச்சுமை பாதிக்கும். அதைத் தவிர்க்கவே விலை உயர்வு செய்து இப்போதே அரசு வரிவசூல் செய்கிறது!”னு சொல்லிருக்காரு ஹரிஷ்நாராயண். இந்த லாஜிக்கை ஏத்துக்கிறீங்களா மக்களே?

“இந்தக் குற்றச்சாட்டு தவறானது. மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கிவருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நாட்டு மக்கள் அனைவருக்கும் கடந்த வருடம் முதல் இலவசமாக ரேஷன் பொருள்களை வழங்கிவருகிறது. இந்தச் செலவுகளுக்கான நிதியைத்தான் பெட்ரோல் விலையை உயர்த்தி சமாளித்து வருகிறது மத்திய அரசு”னு சொல்லிருக்காரு கிருஷ்ணகுமார். ஒஹோ, இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க முடியுமா?

“பெட்ரோலை ஒரு பாட்டிலில் அடைத்துக்கூட எடுத்துப்போகலாம். கரன்ட்டை எடுத்துப்போக முடியுமா? காஸ் விலையும்தான் விண்ணை முட்டுது. அதற்காக விறகு அடுப்புக்கு மாற முடியுமா? கரன்ட் பில்லை ஏத்துவதற்கு இப்போதே அச்சாரம்போடுவதாகத்தான் தெரிகிறது”னு சொல்லியிருக்காரு கண்ணன். ரைட்டு!

“எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையைக் குறைக்க மானியம் வழங்கி விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும். எலெக்ட்ரிக் வண்டியின் விலை சாதாரண மக்கள் வாங்கக்கூடியதாகவும், சரக்கு வாகனப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் இல்லை. அதற்கு என்ன தீர்வு? சரக்கு வாகன எரிபொருள் விலை ஏற்றமே பெரிய பிரச்னை... அதற்கு என்ன தீர்வு? எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் வேலையா அல்லது மக்களை ஏமாற்றும் வேலையா?’’ என்று கேட்டுருக்காரு மதியழகன் முத்து. அப்படி கேளுங்கய்யா!

“இன்று சினிமா தியேட்டர்கள் கல்யாண மண்டபமாகி தியேட்டரில் சினிமா பார்க்கும் பழக்கம் குறைந்ததுபோல, பெட்ரோல் பங்குகள் இடித்துத் தள்ளப்பட்டு பவர் ஸ்டேஷன் களாக மாறிவிடும். 2023 முதல் இந்த மாற்றம் வந்துவிடும். முடிவு மக்கள் கையில்”னு கமென்ட் பண்ணிருக்காரு குமர சிவாச் சாரியார். சார், உங்க ஜோசியம் சூப்பர்!

“அரசியல்வாதிகள், தொழிலதி பர்கள், பெரும் பணக்காரர்கள் கூடியவரை தேவையைக் குறைத்து மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழலாம்”னு சொல்லிருக்காங்க வளர்மதி ராஜசெல்வன். வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல!

“உயர்ந்து வரும் புகைமாசு வால ஏற்படும் ஆபத்தைக் குறைக்க வேண்டும் என்பது உலக நாடுகள் முதல் அனைவரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணையை தொடர்ந்து வாங்கி அதைச் சுத்திகரித்து எரிபொருளாக்கி வாகனங்கள் மூலம் அதைப் புகை மாசாக்க வேண்டும் என்பது கட்டாயாமா என்ன..? அரபு நாடுகளுக்கு வேண்டுமானால் ஒரு பெரும் தொகை லாபமாகத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், ஆனால் நமக்கு அதனால் எந்த நன்மையும் கிடையாது புகை மாசைத் தவிர...”னு சொல்லிருக்காரு கிருபாகரன் நல்லசாமி. சாமியோவ், இது உலக அரசியல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism