Published:Updated:

`பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்!' - நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman ( Photo: PIB India / Twitter )

``உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெயை விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளிலும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகவே பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாள்களில் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது."

`பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம்!' - நிர்மலா சீதாராமன்

``உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெயை விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளிலும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகவே பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாள்களில் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது."

Published:Updated:
Nirmala Sitharaman ( Photo: PIB India / Twitter )

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் (யுபிஏ) காரணம் என குற்றம் சாட்டியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ராஜ்யசபாவில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உக்ரைனில் நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது; ஆனால், இப்போதுதான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய நிர்மலா சீதாராமன், ``உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெயை விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளிலும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகவே பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாள்களில் வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பாண்டுகளை வழங்கியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், பா.ஜ.க அரசே முதன்முதலில் 1999 -2004 காலகட்டத்தில் எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டதாகக் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ``யுபிஏ ஆட்சியில் வெளியிட்ட ரூ. 2 லட்சம் கோடி எண்ணெய் பத்திரங்களை ஒப்பிடும்போது, வாஜ்பாயின் அரசாங்கம் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களையே வெளியிட்டது. இவை இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சர்வதேச எண்ணெய் விலை வாஜ்பாய் அரசாங்கத்தின்போது பீப்பாய் ஒன்றுக்கு, 30 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தது. அதுவே யுபிஏ ஆட்சியின்போது 147 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இதற்கு எண்ணெய் பத்திரங்கள் வடிவில் அதிக மானிய ஆதரவு தேவைப்பட்டது.

பெட்ரோல்
பெட்ரோல்

இன்றைக்கு வரி செலுத்துவோர் எண்ணெய் பத்திரங்கள் என்ற பெயரில் பத்தாண்டுக்கு முன்னர் நுகர்வோருக்கு வழங்கப்பட்ட மானியத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பத்திரங்களை மீட்க 2026-ம் ஆண்டு வரை ஆகும் என்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர்ந்து மானியத்துக்காக வரி செலுத்துவார்கள் பத்திரங்களை மீட்பதற்கான மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி" எனப் பேசியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism