Published:Updated:

பிஎஃப்: நேற்று வரை வட்டிக்கு மட்டுமே வரம்பு... இனி ஊழியரின் சந்தாவுக்கும் வரம்பு!

பிஎஃப் ( PF )

புதிய விதிமுறையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் மாதாந்தர சந்தா + நிலுவைச் சந்தா (Arrear Subscription) ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கடந்த 11.10.2022-ல் ஆணை பிறப்பித்துள்ளது மத்திய அரசின் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அமைச்சகம்.

பிஎஃப்: நேற்று வரை வட்டிக்கு மட்டுமே வரம்பு... இனி ஊழியரின் சந்தாவுக்கும் வரம்பு!

புதிய விதிமுறையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் மாதாந்தர சந்தா + நிலுவைச் சந்தா (Arrear Subscription) ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கடந்த 11.10.2022-ல் ஆணை பிறப்பித்துள்ளது மத்திய அரசின் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அமைச்சகம்.

Published:Updated:
பிஎஃப் ( PF )

அரசு ஊழியர்கள் மற்றும் அரசுத்துறை அல்லாத இதர ஊழியர்கள்அனைவரும் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட  சதவிகிதத் துக்குக் குறையாத தொகையைத் தங்களது  பிராவிடெண்ட் ஃபண்ட் கணக்கில் செலுத்துவது கட்டாயம்.  அதிகபட்சமாகத் தனது சம்பளம் முழுவதையுமேகூட செலுத்தி  விடலாம். சந்தாவுக்கும் வட்டிக்கும் வரம்பும் இல்லை வரியும்  இல்லை என்று இருந்தது விதிமுறை.

மத்திய அரசின் 2021-22  நிதியாண்டுக்கான பட்ஜெட்டில்,  சம்பளதாரர்களில் இ.பி.எஃப் பங்களிப்பு சந்தாதாரர்கள் ஓராண்டு முழுவதும் செலுத்தும் சந்தா தொகை 2.5 லட்சத்துக்கு  அதிகமானாலும், பங்களிப்பு இல்லாத அரசு ஊழியர்கள்  செலுத்தும் சந்தா ஓராண்டில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமானாலும் வட்டி உண்டு. ஆனால், வரம்புக்கு மீறிய சந்தாவுக்குக் கிடைக்கும்  வட்டிக்கு வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறை அமலாக்கம்  பெற்றது. 

பிஎஃப்  ரகசியம்
பிஎஃப் ரகசியம்

இதன்படி மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சமாக, தனது  அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில்  6% தொகையைக் கட்டாய சந்தாவாகச் செலுத்த வேண்டும். சம்பளம் முழுவதையும் வேண்டுமானாலும் தனது ஜி.பி.எஃப். கணக்கில் செலுத்தலாம். ஆனால் ரூ.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்படும் சந்தாவுக்கு 7.1% வீதம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட  வேண்டும்.

புதிய விதிமுறை..!

தற்போது அமலாக்கம் பெற்றுள்ள புதிய விதிமுறையின்படி,  மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் மாதாந்தர சந்தா + நிலுவை சந்தா (Arrear Subscription) ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டே இருக்க  வேண்டும் என்று கடந்த 11.10.2022-ல் ஆணை பிறப்பித்துள்ளது  மத்திய அரசின் ஊழியர் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான  அமைச்சகம். இந்தப் புதிய விதி 2022-23 நிதியாண்டு முதல்  அமலாக்கம் பெறுகிறது என்பதால் கீழ்க்கண்ட அம்சங்கள்  கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளன.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்

  • பழைய பென்ஷன் உள்ளவர்கள் மட்டுமே ஜி.பி.எஃப்.  சந்தாதாரராக இருக்க முடியும். காலப்போக்கில் பென்ஷனில் என்ன மாறுதல் வந்தாலும் நமது சொந்த முதலீடான ஜி.பி.எஃப்கைகொடுக்கும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான  ஊழியர்கள் தன்னால் இயன்ற வரை அதிகபட்ச தொகையை ஜி.பி.எஃப்பில் செலுத்தி வந்தனர். காரணம், ஓய்வுக்காலத்தில் தற்போதைய வாழ்க்கை வசதியில் குறைவு இருக்கக் கூடாது  என்ற எண்ணம். 

பிஎஃப்
பிஎஃப்
  • ஜி.பி.எஃப் தொகையை ஊழியர் தன் கணவருக்கு பட்ட  கடனுக்காக நீதிமன்ற ஆணை மூலம் பெற முடியாது. 

  • ஒரு பெண் ஊழியர் தனது ஜி.பி.எஃப்பில் பாத்தியதை  இல்லாமல் செய்துகொள்ள முடியும். ஆண் ஊழியரும்  மனைவியின் பாத்தியதையைத் தவிர்க்க முடியும். அப்படி  ஒரு பாதுகாப்பு.

வரம்பு மீற வாய்ப்பு

  • ஜி.பி.எஃப் வரம்பு ரூ.5 லட்சம் என்பது 2022-23 நிதியாண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது எனில் நடப்பு நிதியாண்டில், அதிக சம்பளம் பெறும் ஒரு மத்திய அரசு  ஊழியர், அதிகபட்சமாக மாதம் ரூ.70,000 ரூபாய் செலுத்தி  வந்திருந்தால் கடந்த 7 மாத சந்தாவே ரூ.4,90,000 ஆகி  இருக்கும். மீதி உள்ள 5 மாதங்களுக்கு சந்தா பிடித்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து தெளிவுரை வந்தால்தான்   தெளிவு பிறக்கும். 

  • தற்போதைய அதிகபட்ச சம்பளம் ரூ. 2.5 லட்சம்+அகவிலைப் படி ரூ 95,000 = ரூ.3,45,000 மாதச்சம்பளம் என்ற நிலையில் இத்தகைய ஊழியர் தனது சம்பளத்தில் 12% க்கு மேல்  செலுத்த முடியாது. மாற்று முதலீடுகளைப் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

பிஎஃப்
பிஎஃப்

சி.பி.எஃப்  

மேற்கண்ட 5 லட்சம் சந்தா வரம்பு, மத்திய அரசின் சி.பி.எஃப் (Contributory Provident Fund) சந்தாதாரர்களுக்குப் பொருந்தாது  என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

தமிழக அரசு ஊழியர் ஜி.பி.எஃப்

தமிழக அரசின் ஜி.பி.எஃப் சந்தாதாரர்களைப் பொறுத்தவரை  இவர்கள் தனது அடிப்படை சம்பளம் + தனி சம்பளம்+ சிறப்பு  சம்பளம்+ அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் குறைந்த பட்சம் 12% தொகையைத் தங்களது ஜி.பி.எஃப் கணக்கில்  செலுத்துவது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் தனது முழு  சம்பளத்தையேகூட ஜி.பி.எஃப்பில் செலுத்தலாம். இப்போது வரை  வரம்பு இல்லை. ரூ.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும்  சந்தாவுக்குக் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்டினால் போதும்.

இ.பி.எஃப்

இ.பி.எஃப் (Employees Provident Fund) ஐ பொறுத்தவரை  ஊழியர்கள். தனது சம்பளம் + அகவிலைப்படியில் 12% தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்துவது கட்டாயம். சம்பளம்  மொத்தத்தையும்கூட சந்தாவாகச் செலுத்திவிடலாம். ரூ.2.5  லட்சத்துக்கு மேற்பட்ட சந்தாவுக்குக் கிடைக்கும் வட்டி வரிக்கு  உட்படும். 

பிஎஃப் வாடிக்கையாளர்கள்
பிஎஃப் வாடிக்கையாளர்கள்
PF members

இ.பி.எஃப் சந்தாதாரர்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனம்  (Employer) செலுத்தும் பங்களிப்பு தொகைக்கு 7.5 லட்சம் வரம்பாக உள்ளது.

என்.பி.எஸ்

என்.பி.எஸ் திட்டம் சார்ந்த ஊழியர் 10% சம்பளம் மட்டுமே  பென்ஷன் திட்ட சந்தாவாகச் செலுத்த முடியும். ஆனால், அரசு  அல்லது நிறுவனம் ஊழியர் கணக்கில் செலுத்தும் சந்தாவுக்கு  வரம்பு ரூ.7.5 லட்சம்.

பிஎஃப்
பிஎஃப்

பி.பி.எஃப்

பி.பி.எஃப் வரம்பும் சமீப காலமாக ரூ.1.5 லட்சம் என்ற அளவிலேயே தொடர்கிறது. காரணம், பொதுமக்கள், ஊழியர்களிடம்  இருந்து பெறும் பி.எ.ஃப் முதலானவற்றின் மூலம் அரசுக்கு  கிடைக்கும் வட்டி வருமானத்தைவிட கொடுக்க வேண்டிய  வட்டியின் அளவு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணமாக இருக்க முடியும்.