Published:Updated:

கல்வி... தொழில்... சமூகம்... வெற்றியாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

விருது பெற்றவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
விருது பெற்றவர்கள்

விருது விழா

கல்வி... தொழில்... சமூகம்... வெற்றியாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

விருது விழா

Published:Updated:
விருது பெற்றவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
விருது பெற்றவர்கள்

கல்வி, தொழில், சமூகம் ஆகிய துறைகளில் உன்னத செயல் புரிந்து வருபவர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு ‘பின்னாகில்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா கடந்த வாரம் சென்னையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் தெலங்கானாவின் ஆளுநரும் புதுவையின் துணைநிலை ஆளுநருமான மேதகு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

கல்வி... தொழில்... சமூகம்...
வெற்றியாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்!

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை வழங்கினார் விகடன் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். அவரைத் தொடர்ந்து சிறப்புரையாற்றினார் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

அவர் பேசும்போது, “மு.மேத்தாவின் கவிதை ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். ‘சில பேரிடம் உள்ள ரூபாய் நோட்டுகள்கூட பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. ஆனால், என்னிடம் உள்ள சில்லறைகளுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது.’

இந்தக் கவிதையில் கூறியுள்ளதுபோல, நீங்கள் உங்கள் பணத்தைப் பெட்டிக்குள் பூட்டி வைக்காமல், புதிய முயற்சிகளுக்காக சிறகடித்துப் பறக்க விட்டவர்கள். தொழில் முனைவோராக இருப்பது எளிதான காரியம் அல்ல. எல்லா நேரத்திலும், எல்லா சூழலிலும் மனம் தளராமல் போராட வேண்டும். தொழிலில் சிறிய பின்னடைவுகள் வந்தாலும், மீண்டும் தொழிலில் ஈடுபட மிகுந்த நம்பிக்கை யுடன் நீங்கள் இருக்க வேண்டும். கொரோனா பேரிடர் நேரத்தில் இயற்கை நம்மை முடக்க நினைத்தாலும், தடைகளை உடைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தொழில்துறையில் செய்திருப்பது சாதனை களின் உச்சக்கட்டம். உங்களுக்கு விருதுகள் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி” என்று முகமலர்ச்சியுடன் குறிப்பிட்டவர், சாதனையாளர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.

விருது பெற்றவர்கள்
விருது பெற்றவர்கள்

சிறந்த ஆபரணங்கள் வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனத்துக்கான விருது சல்லானி நிறுவனத்தின் நிறுவனர் ஜெயந்திலால் சல்லானிக்கும், சிறந்த இளைய பல்கலைக்கழக வேந்தர் விருது பிரிஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் நாகேஸ்வரனுக்கும், சிறந்த மொபைல் ரீடெய்லர் மற்றும் வாடிக்கையாளர் சேவைக் கான விருது பூர்விகா மொபைல் நிறுவனத்துக் கும் அளிக்கப்பட்டது.

சிறந்த இளம் தொழில்முனைவோர் விருது எஸ்.பி.கே நிறுவன குழுமத் தலைவர் ஏ.எஸ். பிரபுவுக்கும், சிறந்த தொழில்முனைவோர் கட்டுமானத்துறை விருது ARSK பாலிமார்பிள் ஷீட் நிறுவனத்தின் தலைவர் A.S. ரியாஸுக்கும், சிறந்த தொழிலதிபர் - தகவல் தொழில்நுட்பம் விருது K7 கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் கேசவர்த்தனுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த கட்டுமான நிறுவனத்துக்கான விருது DAC டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சதீஷ்குமாருக்கும், சிறந்த டிராவல் நிறுவனத்துக் கான விருது ஜி.டி ஹாலிடேஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் கார்த்திக் எம்.மணிகண்டனுக்கும், சிறந்த கிராமப்புறக் கல்வி மேம்பாட்டுக்கான சேவை விருது ஆற்றல் ஃபவுண்டேஷனின் தலைவர் ஆற்றல் அசோக்குமாருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த ஏற்றுமதிப் பயிற்சி நிறுவனத்துக்கான விருது மாயா எக்ஸ்போர்ட் டிரெய்னிங் அகாடமி நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஆர்.அசோக்குக்கும், சிறந்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனத்துக்கான விருது அறம் ஐ.ஏ.எஸ் அகாடமிக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த சேவை - தொழில்நுட்பம் மற்றும் புதுமை விருது ECI Systems நிர்வாக இயக்குநர் செந்தில்குமார் தேவதாஸுக்கும், சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது IVDP அமைப்பின் குழந்தை ஃபிரான்சிஸுக்கும், சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாளர் விருது பரமகுரு ஃபிட்னஸ் நிறுவனத்தின் நிறுவனர் பரமகுருவுக்கும் வழங்கப்பட்டது.

விருதாளர்களுக்கு இந்த உச்ச அங்கீகாரம் உற்சாகம் தருவதாக அமைந்திருந்ததை அவர் களின் மகிழ்ச்சியான முகங்கள் தெளிவாகத் தெரிவித்தன.

கல்வி... தொழில்... சமூகம்...
வெற்றியாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்!