Published:Updated:

இன்று முதல் அமலுக்கு வந்த Positive Pay System... இதனால் யாருக்கு என்ன நன்மை?

வங்கிக் காசோலை

பாசிட்டிவ் பே சிஸ்டம்படி, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான். நீங்கள் ஒருவருக்குக் காசோலை கொடுத்தால் வங்கிக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்...

இன்று முதல் அமலுக்கு வந்த Positive Pay System... இதனால் யாருக்கு என்ன நன்மை?

பாசிட்டிவ் பே சிஸ்டம்படி, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான். நீங்கள் ஒருவருக்குக் காசோலை கொடுத்தால் வங்கிக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்...

Published:Updated:
வங்கிக் காசோலை

வங்கிக் காசோலைகளுக்கு 2021-ல் அறிமுகம் செய்யப்பட்ட பாசிட்டிவ் பே சிஸ்டம் (Positive Pay System) இன்று முதல் ஆகஸ்ட் 1 2022 முதல் கட்டாயமாகி இருக்கிறது. பாசிட்டிவ் பே சிஸ்டம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

நாம் பிறருக்கு வழங்கும் மதிப்புமிக்க காசோலையின் தகவலை வங்கிக்குத் தெரிவிப்பதே பாசிட்டிவ் பே சிஸ்டம். நீங்கள் ஒருவருக்குக் காசோலை கொடுத்தால், அதன் விவரங்களை உங்கள் வங்கிக்குச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் தான் காசோலை பெற்றவருக்கு பணத்தை உங்கள் வங்கி தரும்.

காசோலை
காசோலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் உங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.1,000 அல்லது ரூ.10,000 தந்தால், நீங்கள் யாருக்குப் பணம் தருகிறீர்கள் என்பதை சொல்லத் தேவையில்ல. ஆனால், ரூ.5,00,000-க்கு மேற்பட்ட தொகைக்குக் காசோலை தருகிறீர்கள் எனில், நீங்கள் யாருக்குத் தருகிறீர்கள் என்கிற தகவலை வங்கிக்க்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இந்தத் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். பிராந்திய மொழிகளைத் தெரிவு செய்யும் வசதி இப்போதைக்கு வழங்கப்படவில்லை.

இந்தத் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். பிராந்திய மொழிகளைத் தெரிவு செய்யும் வசதி இப்போதைக்கு வழங்கப்படவில்லை. இந்தத் தகவலைப் பல வழிகளில் நீங்கள் தெரிவிக்கலாம். வங்கிக்கு நேரடியாகச் சென்று தெரிவிக்கலாம். அல்லது பேங்கிங் ஆப் அல்லது நெட்பேங்கிங் வழியாக வங்கிக்குத் தெரிவிக்கலாம். வங்கிக் கணக்குடன் ஏற்கெனவே இணைத்த மின்மடல் முகவரியிலிருந்து (Registered Email ID) மின்மடல் (Email) அனுப்பலாம்.

காசோலை
காசோலை

நெட்பேங்கிங் வழியே தெரிவிப்பது எனில், உங்கள் கணக்கில் உள்நுழைந்த பின் Request அல்லது Enquire என்ற பிரிவுக்குள் செல்ல வேண்டும். அதற்குள் Positive Pay என்ற Link-யைத் தேர்ந்தெடுத்து, காசோலை குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.

இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் தகவல் தெரிவிக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கின் எண், காசோலையின் எண், காசோலையின் தேதி, தொகை, யாருக்கு காசோலை வழங்கப்பட்டது, MICR Code ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

இந்தத் தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். பிராந்திய மொழிகளைத் தெரிவு செய்யும் வசதி இப்போதைக்கு வழங்கப்படவில்லை. இப்படி மெனக்கெடுவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு என்ன சாதகம் என்று பார்ப்போம்.

காசோலை அளிப்பவர் வங்கிக்குக் காசோலை குறித்தத் தகவல்களை அளிப்பதன் மூலம் காசோலை மோசடிகள் குறையும். ரூ.1 லட்சத்துக்கு நீங்கள் வழங்கும் காசோலையில் ஒரு பூஜ்யம் சேர்த்து ரூ.10 லட்சமாக ஆக்க முடியாது. நீங்கள் எழுதிக் கொடுத்த தேதியையோ, பயனர் பெயரையோ மாற்றி பணம் பெற முடியாது.

ஆனால், இதில் சில பாதகங்களும் உண்டு. முதலாவது பாதகம், இதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும். காசோலை கொடுத்தவுடன், வங்கிக்கு அதைத் தெரிவிக்க வேண்டும். மின்மடல் அனுப்பினால் அது வங்கியைச் சென்றடைந்ததா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இப்படி பல விஷயங்களை உங்கள் பிசியான நேரத்தில் பல நிமிடங்களை ஒதுக்கியாக வேண்டும்.

காசோலை
காசோலை

பாசிட்டிவ் பே சிஸ்டம்படி, நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான். நீங்கள் ஒருவருக்குக் காசோலை கொடுத்தால் வங்கிக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் வேறு யாரிடமிருந்தாவது காசோலை பெற்றால் அதை வங்கியில் செலுத்தும் முன் அதைத் தருபவர் அவருடைய வங்கிக்குத் தெரித்துவிட்டாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் வேலையை செய்ய மறந்திருந்தால், நீங்கள் செலுத்தும் காசோலை திரும்ப அனுப்பப்படும்.

இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டாமல் இருக்க, நீங்கள் காசோலைக்குப் பதிலாக வரைவோலையாக (Demand Draft) கேட்டுப் பெறலாம். ஆனால், இந்த வரையோலைக்குக் கட்டணம் இருக்கிறது. அந்தக் கட்டணத்தை உங்களுக்குப் பணம் தருகிறவர் கட்டத் தயாராக இருக்க வேண்டும். அல்லது அந்தக் கட்டணத்தை உங்கள் தலை மீது எழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த மாதிரி பிரச்னைகளைத் தவிர்க்க NEFT / RTGS வழியே பணத்தை அனுப்பிவிடுவது உத்தமம். இப்படி பணம் அனுப்புவதற்கும் கொஞ்சம் பணத்தைக் கட்டணமாக நீங்கள் செலுத்தித்தான் ஆக வேண்டும்.

ரிசர்வ் பேங்க்
ரிசர்வ் பேங்க்

பணம் கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை, வேலை மிச்சமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் வரையோலை மற்றும் NEFT / RTGS வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பணத்தை மிச்சப்படுத்த நினைப்பவர்கள் வங்கிகளிடம் உரிய தகவல்களை நல்ல பிள்ளையாகத் தெரிவிக்கலாம். உங்கள் வசதி எப்படி என்பதைப் பார்த்து நீங்கள் முடிவெடுக்கலாம்!