Published:Updated:

விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்கலாம்..? வாசகர்களின் அசத்தல் கமென்ட்ஸ்

விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

I N T E R A C T I O N

விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்கலாம்..? வாசகர்களின் அசத்தல் கமென்ட்ஸ்

I N T E R A C T I O N

Published:Updated:
விலைவாசி உயர்வு
பிரீமியம் ஸ்டோரி
விலைவாசி உயர்வு

கடந்த சில மாதங்களாகவே விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பல பொருள்களின் விலை 50 - 75% அதிகரித்திருக்கிறது. இந்த விலைவாசி உயர்வை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றிய உங்கள் யோசனைகளைச் சொன்னால், அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமே!” என்று நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்களும் தங்களது ஐடியாக்களை பரபரவென பகிர்ந்திருந்தார்கள்.

“அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆடம்பரச் செலவுகளைக் குறைக்க வேண்டும்”னு சொல்லிருக் காரு பிரபாகரன். மை டியர் மக்கள்ஸ் நோட் திஸ் பாயின்ட்.

“கொரோனாவுக்கு பயந்து பலர் வீடுகளில் வேலைக்காரர்களை அனுமதிப்பதில்லை. கொரோனா முடியும் வரை வீட்டிலிருக்கும் பெண்கள், பாத்திரம் கழுவுதல், குப்பை கூட்டித் துடைத்தல் போன்ற வேலைகளைத் தாங்களே செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தலாம். ஆண்கள் வொர்க் ஃபரம் ஹோம் எனில், காலையில் இந்த வேலைகளை மனைவியுடன் சேர்ந்து செய்ய வேண்டும்”னு சொல்லிருக்காரு கிருஷ்ணகுமார். அடடே..!

விலைவாசி உயர்வை எப்படிச் 
சமாளிக்கலாம்..? வாசகர்களின் அசத்தல் கமென்ட்ஸ்

“அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்லப் பழகினால் பெட்ரோல் செலவு மிச்சமாகும். காய்கறி, பழங்கள், மளிகையை மொத்த விலைக் கடைகளில் வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம். மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி மின்கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இப்படி சிக்கனமாக இருந்தே விலைவாசியைச் சமாளித்துவிடலாம்” அசத்தல் ஐடியா கொடுத்துருக்காரு ஹரிஷ் நாராயண். சூப்பர் சார்!

“ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். காய்கறிகளை வாரத்துக்கு மொத்தமாக வாங்கலாம். முடிந்த அளவு வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மிக முக்கியமாக, பட்ஜெட் போட்டு செலவு செய்யலாம். குறைந்த விலை யில் பொருள்கள் எங்கு கிடைக்கிறது என்று தேடி வாங்கலாம்”னு சொல்லிருக்காரு தர் சாரதி. ஓகே, பட்ஜெட் பத்மநாபன் சார்.

“விவசாயப் பொருள்களின் விலை நிர்ணயம் போல, ஆலை உற்பத்தி பொருள்களின் விலை நிர்ணயம் அரசிடம் வர வேண்டும்”னு கமென்ட் பண்ணிருக்காரு வெங்கடேசன்.

“கார்ப்பரேட் கம்பெனிகளின் வரிகள் இரு மடங்கு ஆக்கப்பட வேண்டும். பெட்ரோல் விலை பாதியாகக் குறைக்க வேண்டும்” என்று கோபத்துடன் கமென்ட் போட்டிருக்கிறார் அக்பர்.

“ஒரு மாதத்துக்கு என்ன தேவையோ அதை முதலில் சரியான அளவில் வாங்கினாலே போதும். இந்தியாவில் தேவை இல்லாமல் வாங்கும் பழக்கம் அதிக அளவில் உள்ளது”னு சொல்லி ருக்காரு சத்யநாராயண். சத்யமான வார்த்தை ஜி...

“உற்பத்தி அதிகரித்து கன்ஸம்சன் இண்டெக்ஸ் குறைந்தால்தான் விலை குறையும்”னு பொருளாதாரப் புலி மாதிரி சொல்லிருக்கிறார் நிரஞ்சயன்.

“வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். பெட்ரோல் மிச்சமாகும். ஃபாஸ்ட் ஃபுட் தவிர்க்கவும். கூழ், கஞ்சி, ரசம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும். ஆரோக்கியம் மேம்படும்’’னு சொல்லிருக்காரு உதயகுமார். ரைட்டு!

“மீண்டும் பழைய காலத்துக்குச் செல்ல வேண்டும்”னு சொல்லிருக்காரு சிவராஜ் ராமசாமி. வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்லை!

“முதலில் வீட்டுக்கு ஒரு சைக்கிள் வாங்கவும். பெட்ரோல், டீசலுக்குதான் நிறையச் செலவு செய்ய வேண்டியிருக்கு”னு கமென்ட் பண்ணிருக்காரு சுடர்வண்ணன். நைஸ் ஐடியா சார்!

“பெட்ரோல், டீசல் போடாமல் எல்லாரும் ஸ்ட்ரைக் பண்ணணும்”னு ஐடியா கொடுத்துருக்காரு சரவணப் பெருமாள். அட, இது புது போராட்டமா இருக்கே!