Published:Updated:

கச்சா எண்ணெய் விலையேற்றம்... பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலையேற்றம்... பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கச்சா எண்ணெய்

Published:Updated:
கச்சா எண்ணெய்
பிரீமியம் ஸ்டோரி
கச்சா எண்ணெய்

ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 102 டாலரைத் தொட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 - 8 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது எனச் சொல்லப் படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31-ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது, தற்போது (வியாழன் மதியம்) பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 102 டாலரில் வர்த்தகமாகிறது. போர்ச் சூழல் தொடரும்பட்சத்தில், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 150 டாலர் வரைகூட உயர வாய்ப்பிருப்பதாக ஜே.பி.மார்கன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையேற்றம்...
பெட்ரோல், டீசல் விலை உயருமா?

கச்சா எண்ணெய் விலை உயர்வு பற்றி கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

‘‘எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பும் அதிகம். ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றத்தால் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி தடைபடும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டால், அது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும். கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் உருவாகும்போது, நிச்சயமாக டிமாண்டு அதிகரிக்கும். டிமாண்டு அதிகரிக்கும்போது விலையும் உயரவே செய்யும்.

மேலும், 2020-ம் ஆண்டில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது கச்சா எண்ணெயின் விலை பெரும் சரிவை சந்தித்து மைனஸ் விலையில் வர்த்தகமானது. அப்போது அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியைக் குறைத்தன. பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் ஆலைகளை முழுவதுமாக மூடின.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

ஏனெனில், ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு குறைந்தபட்சம் 60 டாலர் கிடைத்தால்தான் அந்த நிறுவனத்தால் லாபம் பார்க்க முடியும். அதற்குகீழ் விலை குறையும்போது கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதற்கான செலவுக்குக்கூட போதாது என்பதால், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்கும், மூடும் நிலைக்கும் பெரும் பாலான எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப் பட்டன. அப்படியான நிறுவனங்கள் தற்போதைய விலை உயர்வை காரண மாக வைத்து, லாபம் பார்க்கும் நோக்கத்தில் மூடிய ஆலைகளைத் திறந்து எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் குறைந்தால் தவிர, கச்சா எண்ணெய் விலை இப்போது குறையும் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்று பேசி முடித்தார் அவர்.

உ.பி உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் காரண மாக நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கிறது. வருகிற மார்ச் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபின், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப் படலாம் என்பதே இப்போதுள்ள நிலை. மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism