Published:Updated:

சொத்துகளைப் பிரிக்கும் முன்... இந்த விஷயங்களைக் கவனியுங்கள்!

சொத்துப் பிரிவினை

பிரீமியம் ஸ்டோரி

சொத்துகளை வாங்கிச் சேர்ப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், அவற்றை முறையாக ஆவணப் படுத்துவது அதைவிட அவசியமானது. அப்போதுதான், அந்தச் சொத்துகள் சென்றடைய வேண்டியவரை சிக்கல் இல்லாமல் எளிதாகச் சென்றடையும். சொத்துகளை முறையாக ஆவணப்படுத்துவது எப்படி, சொத்துகளைப் பிரிக்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது பற்றி விளக்குகிறார் வழக்கறிஞர் அழகுராமன்.

அழகுராமன்
அழகுராமன்

“பாகப்பிரிவினைக்கு உட்படுத்தப் படும் சொத்து மூதாதையர் சொத்து அல்லது பொதுச் சொத்தாக இருக்க வேண்டும். அந்தப் பொதுச் சொத்து வேறு எந்த வில்லங்க விவகாரத்துக்கும் உட்படாத வகையில் இருக்கும் பட்சத்தில், அதைப் பாகப்பிரிவினைக்கு எளிதில் உட்படுத்திவிட முடியும்.

பாகப்பிரிவினைக்கு உட்படுத்தப்படும்போது சொத்தை வாங்கியவரின் பெயரில்தான் குறிப்பிட்ட சொத்து இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியம்.

ஒரு சொத்தை வாங்கிய காலம் தொடங்கி, பாகப்பிரிவினைக்கு உட்படுத்தும் காலம் வரை எத்தனை வருடங்களாக கையிருப்பில் அந்தச் சொத்து இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தச் சொத்தின் மீது வில்லங்க விவகாரம் இல்லாததை உறுதிசெய்ய வில்லங்கச் சான்றிதழைப் பெற வேண்டும்.

அந்தச் சான்றிதழைப் பெற குறிப்பிட்ட சொத்துக்கு சம்பந்தப்பட்ட வரையறைக்கு உட்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இடைப் பட்ட காலத்தில் ஏதாவது வில்லங்க விவகாரம் இருந்தாலோ, கட்ட வேண்டிய தொகை ஏதாவது இருந்தாலோ, அப்போது தெரிந்து விடும். அதில் சிக்கல்கள் இருந்தால், அதை நிவர்த்தி செய்தபின் பாகப் பிரிவினை செய்யும் வேலையில் இறங்கலாம்.

அடமானம் வைக்கப்பட்டிருக்கும் சொத்தைப் பாகப்பிரிவினைக்கு உட்படுத்த முடியாது. அடமானத்தில் இருக்கும் சொத்தைப் பாகப்பிரிவினைக்கு உட்படுத்த நினைத்தால், அடமானக் கடன் எவ்வளவு என்பதையும் கணக்கில் குறிப்பிட வேண்டியது அவசியம்.

பாகப்பிரிவினை செய்யப்படவிருக்கும் சொத்தில் உள்ள வில்லங்கத்தைச் சரி செய்ய மூல ஆவணங்கள் அவசியம் தேவை. அதனால் சொத்தின் மூல ஆவணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சொத்துகளைப் பிரிக்கும் முன்...
இந்த விஷயங்களைக் கவனியுங்கள்!

வில்லங்க விவகாரங்கள் சரி செய்யப் பட்டபின், ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பாகப்பிரிவினைக்கு உள்ளாகும் சொத்து முறையாகப் பிரிக்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும். பிரிக்கப்படும் சொத்து குறித்த மூல ஆவணங்கள் யாருடைய சுவாதீனத்தில் (பொறுப்பில்) உள்ளன என்பதைப் பாகப் பிரிவினைப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படித் தெளிவாகக் குறிப்பிட்டால், வருங்காலத்தில் அந்தச் சொத்தை விருப்பத்துக் கேற்ப விற்பதில் தடைகள் இல்லாமல் இருக்கும்.

பாகப்பிரிவினைக்கு உட்படுத்தப்படும் சொத்து யாருடைய சுவாதீனத்தில் என்ன நிலையில் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். குத்தகைதாரரின் கண்காணிப்பில் சொத்து இருக்கும்பட்சத்தில் அவரிடமிருந்து உரிமையை எப்படி மாற்றுவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட சொத்து வீடாக இருந்தால், வாடகைதாரர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட வாடகை ஒப்பந்தம் எவ்வளவு காலத்துக்கானது என்பதைக் கண்டறிய வேண்டும்; அட்வான்ஸாக எவ்வளவு தொகை தரப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

சொத்தின் தன்மை, வங்கிகளில் கட்ட வேண்டிய தொகை, அதன்மீது இதர உரிமைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுப்படையில், குடும்பத்துக்காகக் கடன்கள் ஏதாவது பெறப் பட்டிருக்கின்றனவா, சொத்து அடமானம் ஏதும் இருக்கிறதா என்பன போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாகப்பிரிவினைக்கு உட்படுத்தப்படும் சொத்தின் மீதான வருவாய்த்துறை ஆவணங் கள் சரியாக உள்ளனவா என்பதையும் கவனிப் பது அவசியம். பாகப்பிரிவினைக்கு உட்படுத் தப்படும் சொத்து விவசாய நிலம் எனும்பட்சத் தில், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்கள் கையிருப்பில் உள்ளதா என்பதைப் பார்ப்பதும் முக்கியம். பாகப் பிரிவினைக்கு உட்படுத்தப்படும் நாள் வரையிலான வரி வகையறாக்கள் முறையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா, ஏதும் பாக்கி இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பாகப்பிரிவினைக்கு உட்படுத்தப்படும் சொத்து, நகர்ப்புறங்களிலோ, மற்ற இடங் களிலோ நிலமாக இல்லாமல் வீடாக இருக்கிறது எனில், சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் தனி வரிகள் யார் பெயரிலிருந்து பிரிகிறதோ, அவர் பெயரிலிருந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படிச் செய்யும்பட்சத்தில், பிரித்துத் தரப்பட்ட சொத்தால் வருங்காலங் களில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்” என்றார் வழக்கறிஞர் அழகுராமன்.

சொத்துப் பிரிவினை செய்ய நினைப்பவர்கள் இந்த விஷயங்களை மனதில் கொண்டு செயல் பட்டால், கடைசிக்கட்ட பரபரப்பு இல்லாமல் நிம்மதியாகச் செய்து முடிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு