Published:Updated:

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: 3 மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு அமல்படுத்த திட்டம்

ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் கடைசியாக வாங்கிய மாத ஊதியத்தில் அதிகபட்சம் பாதியளவு தொகை கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுவந்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் 2003 டிசம்பர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: 3 மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு அமல்படுத்த திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் கடைசியாக வாங்கிய மாத ஊதியத்தில் அதிகபட்சம் பாதியளவு தொகை கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுவந்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் 2003 டிசம்பர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.

Published:Updated:
ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத்தைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர்கள் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு மாதாமாதம் அவர்கள் கடைசியாக வாங்கிய மாத ஊதியத்தில் அதிகபட்சம் பாதியளவு தொகை கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதியத் திட்டம் 2003 டிசம்பர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்
சித்தரிப்பு படம்

அதையடுத்து புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டு 2004 ஏப்ரலில் அமல்படுத்தப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதியில் சேமிக்கப்படும். ஓய்வுபெறும்போது மொத்தமாக தொகுப்பு நிதியாக வழங்கப்படும்.

இந்நிலையில் தொடர்ச்சியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்களிடையே எழுந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தின. தற்போது நான்காவது மாநிலமாக பஞ்சாப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் விரைவில் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்
ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுகளுக்கு அது பெரும் நிதிச் சிக்கலைக் கொண்டுவரும் என்பது ஒரு பிரச்னையாக ஒருபக்கம் முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுவதோடு, சில மாநிலங்களும் அதை ஏற்று செயல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.