Published:Updated:

ராமநாதபுரம் To மலேசியா, துபாய்... உலகம் முழுக்க செல்லும் `கீழக்கரை துதல்’...

கீழக்கரை துதல் ( படம்: உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இந்த துதல் அல்வா மிகவும் பிரபலம். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், அந்நியச் செலாவணி ஈட்டி கொடுப்பதிலும் ‘கீழக்கரை துதல்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

ராமநாதபுரம் To மலேசியா, துபாய்... உலகம் முழுக்க செல்லும் `கீழக்கரை துதல்’...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இந்த துதல் அல்வா மிகவும் பிரபலம். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், அந்நியச் செலாவணி ஈட்டி கொடுப்பதிலும் ‘கீழக்கரை துதல்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

Published:Updated:
கீழக்கரை துதல் ( படம்: உ.பாண்டி )

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இனிப்பு, கார வகை பலகாரங்கள் ஃபேமஸ். திருநெல்வேலி அல்வா முதல் சாத்தூர் காராசேவு, கோவில்பட்டி கடலை மிட்டாய், மதுரை ஜிகர்தண்டா, விருதுநகர் பரோட்டா, சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கும்பகோணம் டிகிரி காபி, ஆம்பூர் பிரியாணி, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மக்ரோன்ஸ்... என பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அடையாளம் எனில், ‘கீழக்கரை துதல்’ அல்வா என்றே சொல்லலாம்.

துதல்
துதல்
உ.பாண்டி

மறக்கமுடியாத துதல்...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் இந்த துதல் அல்வா மிகவும் பிரபலம். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகமாக வாங்கி செல்வதோடு, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், அந்நியச் செலாவணி ஈட்டி கொடுப்பதிலும் ‘கீழக்கரை துதல்’ முக்கிய பங்கு வகிக்கிறது.

தென் மாவட்டங்களில் கீழக்கரை, மரைக்காயர் பட்டிணம், காயல் பட்டிணம், அதிராமப் பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் வர்த்தக ரீதியாக இலங்கைக்குச் சென்று வந்தபோது, அங்கு புழக்கத்தில் இருந்த பல வகையான உணவு வகைகளைத் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதில் இந்த துதல் முக்கியமான இனிப்புப் பலகாரமாகவும், வர்த்தக ரீதியாகவும் இன்றுவரை கீழக்கரை மக்களுக்குக் கைகொடுத்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராமநாதபுரத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கீழக்கரையில் ஒரு கிலோ துதல் ரூ.350 வரையிலும் விற்கப்படுகிறது.

கிலோ ரூ.350...

ராமநாதபுரம் பனைமரங்கள் அதிகம் உள்ள மாவட்டம் ஆகும். அதிலிருந்து கிடைக்கும் கருப்பட்டியைக் கொண்டுதான் துதலைத் தயாரிக்கின்றனர். இதனால்தான் அதன் சுவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர் துதல் தயாரிப்பாளர்கள்.

கீழக்கரையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் துதலைத் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கீழக்கரையில் ஒரு கிலோ துதல் ரூ.350 வரையிலும் விற்கப்படுகிறது. கீழக்கரையில் தயார் செய்யப்படும் துதல், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி, தெருவோர டீக்கடை மற்றும் சாதாரண பெட்டிக்கடை வரை விற்பனை செய்யப்படுவதைக் காணலாம்.

துதல்
துதல்
உ.பாண்டி

200 ஆண்டுகளைத் தாண்டி...

இந்தத் துதல் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தயார் செய்வது கிடையாது. கீழக்கரையில் பலரும் இந்தத் துதல் அல்வாவைத் தயார் செய்து வருகின்றனர். அதற்கான காரணம் என்ன, துதல் பற்றிய சிறப்புகள் குறித்து துதல் தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டறிந்தோம், ஒவ்வொருவரும் ஒரு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

‘‘இலங்கையில் வியாபாரம் செய்த எங்களது முன்னோர்கள் இந்தத் துதலை இங்கு அறிமுகம் செய்தார்கள். கீழக்கரையில் நாங்கள் பல தலைமுறைகளாக 200 ஆண்டுகளைத் தாண்டி, இதை தயாரித்து விற்கிறோம். ஒரு நிறுவனத்தை சார்ந்த தயாரிப்பாக இதனை நாங்கள் அனுமதிக்கவில்லை. அதற்குக் காரணம், இதன் தரம், கருப்பட்டி சீசன் உள்ளபோதுதான் துதலைத் தயார் செய்வோம். கருப்பட்டி கிடைக்காதபோது அதன் தயாரிப்பை நிறுத்திக்கொள்வோம். நிறுவனம் சார்ந்து துதல் தயாரிப்பு செய்யப்பட்டால், அவர்கள் லாப நோக்குடன் அதன் தரத்தை கெடுத்துவிடுவார்கள் என்பதால், நாங்கள் அனுமதிக்கவில்லை. கீழக்கரை துதல் என்பதுதான் எங்களது பிராண்டு.

இந்தத் துதல் 20 நாள்கள் வரை கெடாது; தேவைப்பட்டால், சூடுபடுத்தி சாப்பிடலாம்.

சுடச்சுட கிடைக்கும் துதல்...

இந்தப் பகுதி இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும்போது, துதல் அதில் முக்கியமான பங்கு வகிக்கும். கீழக்கரையில் காலையில் தயார் செய்து ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரிகள் மற்றும் டீக்கடைகளுக்கு மாலை 4 மணிக்குக் கொண்டு செல்வோம். ரயில், பஸ்களில் வெளியூர் செல்பவர்கள் காத்திருந்து துதலை சுடச்சுட வாங்கிச் செல்வார்கள்.

துதல்
துதல்

மேலும், சுத்தமான கருப்பட்டியில் தயார் செய்யப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு துதலை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர்.

‘துதல்’ தயாரிப்பாளர்களிடம் வியாபாரிகள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து, வாங்கிச் சென்று மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்குள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களில் கீழக்கரை துதலுக்கென்றே தனி வாடிக்கையாளர்கள் உள்ளதாக அங்கிருந்து வருபவர்கள் கூறுவதைக் கேட்டு பெருமை கொள்வோம்.

அதே போல, ராமநாதபுரத்திற்கு வரும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறக்காமல் துதலை வாங்கி செல்வார்கள் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர். இந்தத் ``துதல் 20 நாள்கள் வரை கெடாது; தேவைப்பட்டால், சூடுபடுத்தி சாப்பிடலாம்’’.

கீழக்கரைக்கு வந்தாலே போதும், தெருக்களில் துதலின் வாசம் அனைவரையும் வசீகரிக்கும் என மெய்சிலிர்த்தனர் இதைத் தயாரிப்பவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் முக்கியமான விருந்தாளிகளுக்கு ராமேஸ்வரம் வலம்புரி சங்கு மற்றும் ‘கீழக்கரை துதல்’ கொடுப்பதைத் தங்களின் கௌரவமாக கருதுகின்றனர்.

துதல்
துதல்
உ.பாண்டி

துதல் தயாரிக்கும் முறை...

துதல் தயாரிப்பு முறை குறித்தும் கேட்டறிந்தோம்..

“தேங்காய்ப்பாலை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தி, அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து காய்ச்சி, பின்பு சிறிதளவு சீனி, நாட்டுக் கருப்பட்டி மற்றும் நீரில் கரைத்த மைதா மாவு சேர்த்து, அடிப் பிடிக்காமல், மூன்று மணி நேரம் கிளறினால், ஜெல்லி போன்ற பதத்திற்கு வரும். அப்போது, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், ஏலக்காய் பொடி மற்றும் முந்திரிப் பருப்பு சேர்த்து இறக்கினால், துதல் அல்வா தயாராகி விடும்.

தேங்காய்ப் பால், நாட்டுக் கருப்பட்டி மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய் என, உடலுக்கு ஊட்டம் தரும் பொருள்களில் தயாரிப்பதால், அனைவரும் சாப்பிடலாம். இதன் தித்திப்பான சுவை, சாப்பிட்டவர்கள் அடிக்கடி சாப்பிட நினைப்பார்கள் என சிலாகித்து கூறினர்.

இந்தத் துதலைப் பார்த்த உடனே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதா? புறப்படுங்கள் ராமநாதபுரத்துக்கு.