Published:Updated:

`இந்தியப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவும் சீராகவும் உள்ளன!' - RBI சர்வே கூறுவது என்ன?

நாட்டின் பொருளாதார நிலை கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது, ஜூலை மாதத்தில் -69 புள்ளிகளாக இருந்த இதன் நிலை, செப்டம்பரில் -57-ஆக அதிகரித்திருக்கிறது.

அண்மையில் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மீது மக்களுக்கு இருந்த அவநம்பிக்கை குறைந்திருப்பதாகவும், மக்களுடைய நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்திருப்பதாகவும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு குறித்து மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதையும், வருமானம் ஈட்டுவதிலும் மற்றும் செலவு செய்வதிலும் மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆர்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது.

Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das
Photo: AP / Rajanish Kakade
பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் சுப்பிரமணியன்; விலகலுக்கு இதுதான் காரணமா?

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் தடைபட்டிருந்தன. ஆனால், தற்போது அனைத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முன்பைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. இரண்டாம் அலைக்குப் பிறகு, மூன்றாம் அலை வரக்கூடும் என்று சொல்லப்பட்ட விஷயங்கள் வீரியமற்று போயிருக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் பொருளாதார நடவடிக்கை சீராகி வருவதற்கான நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.

ஆர்.பி.ஐ சொல்லியிருப்பதுபோல, நாட்டின் பொருளாதார நிலை கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் அதிகரித்திருக்கிறது. அதாவது, ஜூலை மாதத்தில் -69 புள்ளிகளாக இருந்த இதன் நிலை, செப்டம்பரில் -57-ஆக அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பு -68-லிருந்து -58-ஆகவும், வருமானம் -59-லிருந்து -48-ஆகவும், நுகர்வு 31-லிருந்து 42-ஆகவும் அதிகரித்திருக்கிறது.

வாடிக்கையாளரின் நம்பிக்கைக் குறியீடு (Consumer confidence Index) 49-லிருந்து 58-ஆக அதிகரித்திருக்கிறது. அதே போல, எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புக் குறியீடு (Future expectations Index )104-லிருந்து 107-ஆக அதிகரித்துள்ளது. இந்தக் குறியீடு 100-க்குமேல் இருப்பது, மக்கள் நல்ல நம்பிக்கையுடன் இருப்பதைக் காட்டுவதாகும்.

பொருளாதாரம்
பொருளாதாரம்
அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30

பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாகவும், சீராகவும் இருப்பதால், நடப்பு 2021 - 22 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவிகிதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ கணித்துள்ளது. 2022-23-ம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 17.2 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு