Election bannerElection banner
Published:Updated:

டெல்லி, மும்பையில் கட்டப்படும் `ட்ரம்ப் பங்களாக்கள்...' என்ன நடக்கிறது?

Donald Trump  - அமெரிக்கா
Donald Trump - அமெரிக்கா ( AP / Alex Brandon )

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரில் ஆடம்பர குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பதவி ஏற்ற நாளில் இருந்து அதிரடியாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அவரது அதிரடியான நடவடிக்கையால் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டார். ஆனாலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அவரால் இரண்டாவது முறையாக ஜெயிக்க முடியவில்லை.

ட்ரம்ப் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்று தற்போது அவரது பெயரில் ஆடம்பர குடியிருப்புகள், பங்களாக்கள் மற்றும் அலுவலகங்களைக் கட்டி வருகிறது. இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரிபெகா என்ற அந்நிறுவனம் டொனால்டு ட்ரம்ப்புக்குச் சொந்தமான குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து, ட்ரம்ப் பெயரில் இந்த ஆடம்பர பங்களாக்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலங்களைக் கட்டி வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி ட்ரம்ப் பெயரில் சர்வதேச அளவில் பல இடங்களிலும் குடியிருப்புகள் கட்ட டிரிபெகா நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

ஆடம்பர பங்களா
ஆடம்பர பங்களா

இது குறித்து டிரிபெகா நிறுவனத்தின் நிறுவனர் கல்பேஷ் மேத்தா கூறுகையில், ``ட்ரம்ப் போன்ற பிரபலங்கள் பெயரில் கட்டப்படும் ஆடம்பரக் குடியிருப்புக்களுக்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது. எனவேதான், இந்த ஆண்டு மேலும் ட்ரம்ப் பெயரில் ஆடம்பரக் குடியிருப்புகள் கட்டத் திட்டமிட்டு கட்டி வருகிறோம்.

மும்பை, புனே, ஹைதராபாத், நொய்டா போன்ற பகுதிகளிலும் ட்ரம்ப் பெயரில் வீடுகள் கட்டப்படவிருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. நகரங்களுக்குள் ட்ரம்ப் பெயரில் ஆடம்பர அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு வெளியில் ஆடம்பர பங்களாக்களும் கட்டப்பட இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ட்ரம்ப் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

புனேயில் கட்டப்பட்டு வந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. மும்பையில் லோதா நிறுவனத்துடன் சேர்ந்து கட்டப்பட்டுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தற்போது முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

Trump | ட்ரம்ப்
Trump | ட்ரம்ப்
Alex Brandon / AP

குர்காவ் மற்றும் கொல்கத்தாவிலும் இதற்காகத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். டிரிபெகா நிறுவனத்துக்குச் சொந்தமாக நிலம் இல்லை. அந்நிறுவனம் வேறு நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

ட்ரம்ப்புக்கு அரசியலில் வரவேற்பு இல்லை என்றாலும் அவர் பெயரில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு என்னவோ ஏக மவுசுதான்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு