Published:Updated:

“கிரிப்டோகரன்சிகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்!” கோரிக்கை வைக்கும் அமெரிக்கத் தமிழர்!

C R Y P T O C U R R E N C Y

பிரீமியம் ஸ்டோரி

பிட்காயின்களைப் பற்றித் தினமும் கவனித்து வருபவர் களுக்கு காயின்பேஸ் (Coinbase) என்ற அமெரிக்கா வின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் பற்றித் தெரியாமல் இருக்க முடியாது. சமீபத்தில் டைரக்ட் லிஸ்ட்டிங் (Direct Listing) முறையில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களும் பெரும் கவனத்தைப் பெற்றது காயின்பேஸ். இதன் முதல் சி.டி.ஓ அமெரிக்கத் தமிழரான பாலாஜி ஶ்ரீநிவாசன். இன்றைக்கு கிரிப்டோகரன்சி தொடர்பான விஷயங்களில் ஒட்டு மொத்த அமெரிக்காவும் இவரைக் கூர்ந்து கவனித்து வருகிறது.

பாலாஜி ஶ்ரீநிவாசன்
பாலாஜி ஶ்ரீநிவாசன்

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில், மின் பொறியியலில் முனைவர் பட்டமும், வேதிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 2007-ல் மரபணு பரிசோதனை சார்ந்த கவுன்சில் (Counsyl) என்ற ஸ்டார்ட் அப்பை தன் சகோதரருடன் இணைந்து தொடங்கினார். அந்த நிறுவனத்தை 2018-ல் மைரியட் ஜெனிடிக்ஸ் நிறுவனம் 325 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. 2014-ல் டெலிபோர்ட் என்ற நிறுவனத் துணை நிறுவனராகவும் இருந்திருக் கிறார். இதற்கு இடையில் 2013-ல் 21.co என்ற பிட்காயின் மைனிங் நிறுவனம் ஒன்றுக்கும் துணை நிறுவனரானார். பிட்காயின் மைனிங்கில் அந்த நிறுவனத்தால் வெற்றி பெற முடியாமல் போக, பின்னர் அது Earn.com-ஆக உருமாற்றம் அடைந்தது.

Earn.com-ஐ 2018-ல் காயின்பேஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. Earn.com-ன் சி.இ.ஓ-வாக இருந்த பாலாஜி நிவாசன், காயின்பேஸில் சி.இ.ஓ-வுக்கு அடுத்த இடமான சி.டி.ஓ-வாக (Chief Technology Officer) நியமிக்கப்பட்டார். பின்னர், ஒரு வருடத்திலேயே காயின்பேஸின் சி.டி.ஓ பதவியில் இருந்தும் காயின் பேஸில் இருந்தும் விலகினார்.

கிரிப்டோகரன்சிகளை அதன் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ஆதரித்துவரும் முதலீட்டாளர்களில் இவரும் ஒருவர். பிட்காயின் மற்றும் எத்திரியம் ஆகிய கிரிப்டோ கரன்சி களில் நிறைய முதலீடுகளையும் செய்திருக்கும் பாலாஜி நிவாசன். கிரிப்டோகரன்சிகளை இந்திய அரசு ஏன் சட்டபூர்வமாக்க வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருகிறார்.

‘‘கிரிப்டோகரன்சி வர்த்தகம் இன்று ட்ரில்லியன் டாலர் துறையாக வளர்ந்து நிற்கிறது. இதை முழுமை யாகத் தடை செய்வதைப் பற்றி யோசிக்காமல் அதை ஒழுங்குபடுத்த முயற்சி செய்யலாம். தினமும் நாம் பயன்படுத்தும் பணத்துக்கான மாற்றாக டிஜிட்டல் கரன்சியாகவே கிரிப்டோகரன்சிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. ஆனால், தற்போது நிறைய மக்கள் அதை முதலீடாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்வதைத் தவிர்த்து, அதைப் பாதுகாப்பான முறையில் எப்படி சட்டபூர்வமாக ஆக்கலாம் என்பதைப் பற்றி இந்திய அரசு சிந்திக்கலாம்’’ என்பது பாலாஜி நிவாசன் முன்வைக்கும் வாதம்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பாலாஜி நிவாசன், கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்திருக்கிறார். ‘‘அமெரிக்கா வுக்கு வந்தால் பெரிதாக ஏதாவது செய்து பில்லியன் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று நினைக் காதீர்கள்’’ என சிங்கப்பூரில் தொழில் முனைவர்களிடம் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

கணித மேஜை ராமனுஜம் மிகவும் வித்தியாசமான நம்பர் என்று நினைத்தது 1729 என்கிற எண்ணை. எனவே, 1729.காம் என்கிற பெயரில் கணிதப்புதிர் போட்டியை நடத்து கிறார். இந்தப் போட்டியில் ஜெயிப்ப வர்களுக்கு பிட்காயின்களைப் பரிசாகவும் தருகிறார். நம் நாட்டைச் சேர்ந்தவர் உலகின் கவனம் பெற்றிருப்பது நமக்கு மகிழ்ச்சியே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு