Election bannerElection banner
Published:Updated:

ரூ1.41 லட்சம் கோடி என்னும் உச்சம் தொட்ட ஜி.எஸ்.டி வசூல்... உண்மை நிலை என்ன?

GST
GST

ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, `நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீண்டுவருகிறது' என மத்திய அரசாங்கம் சொல்லியிருப்பதை பலரும் விமர்சித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது.

கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்தது. அந்த மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் வெறும் ரூ.32,172 கோடி மட்டுமே. 2020-ம் ஆண்டின் ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டபிறகு, அக்டோபர் மாதத்திலிருந்து மாதம்தோறும் ஜி.எஸ்.டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலாகிறது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

அந்த வகையில், ஜி.எஸ்.டி வரி வசூல் கடந்த மார்ச் மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.1.41 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வருவாயை மத்திய அரசாங்கம் ஈட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து, ஏழாது மாதமாக வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.

இந்த மத்திய ஜி.எஸ்.டி வரியில், ரூ.27,837 கோடியும் மாநில ஜி.எ.ஸ்டி வரியாக ரூ.35,621 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியாக ரூ.68,421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9,445 கோடி வசூலானது.

ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்டபின், 2021-ம் ஆண்டின் மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலான தொகைதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ஏப்ரல் மாத வசூல் முறியடித்துள்ளது.

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி
vikatan

ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, `நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீண்டுவருகிறது' என மத்திய அரசாங்கம் சொல்லியிருப்பதைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள்.

நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், அனைத்துப் பரிவர்த்தனைகளையும் முடிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதால், வரி வசூல் அதிகரித்திருக்கலாம் என்றும் அதே சமயம், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருவதால், இந்த மாதம் உண்மையான சவால் காத்திருப்பதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனி அடுத்துவரும் மூன்று மாதங்களில் ஜி.எஸ்.டி வரி வருமானம் எவ்வளவாக இருக்கும் என்பது முக்கியமான விஷயமாகும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு