பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பணமதிப்பு நீக்கம்... கடந்த ஆறு ஆண்டுகளில் சாதித்தது என்ன?

பணமதிப்பு நீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணமதிப்பு நீக்கம்

பணமதிப்பு நீக்கம்

நவம்பர் மாதம் 2016-ம் ஆண்டு 8-ம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த ஆறு ஆண்டுகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

ரொக்கப் பரிவர்த்தனையும் டிஜிட்டல்மயமாக்கமும்...

‘`ரொக்கப் பரிவர்த்தனை யைக் குறைத்து `டிஜிட்டல் மயமாக்கவே இந்த நடவடிக்கை’’ என்று மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்த சில நாள்களில் சொன்னது. இந்த நடவடிக் கைக்குப் பிறகு, பரிவர்த் தனையானது குறிப்பிடத் தகுந்த அளவு டிஜிட்டல்மயமாகி இருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு அறிமுகப் படுத்தப்பட்ட யு.பி.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, ரொக்கப் பணத்தின் புழக்க மும் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 21-ம் தேதி நிலவரப்படி, பொதுவெளியில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு சுமார் ரூ.30.88 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு அறிவிக் கப்படுவதற்கு முன் அதாவது, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி இருந்த பணப் புழக்கம் சுமார் ரூ.17.7 லட்சம் கோடி. அதாவது, அப்போ திருந்த பணப்புழக்கத் தைவிட இப்போதுள்ள பணப்புழக்கம் 71.84% அதிக மாகும்.

பணமதிப்பு நீக்கம்... கடந்த ஆறு ஆண்டுகளில் சாதித்தது என்ன?

கறுப்புப்பணம் ஒழிந்ததா?

பணமதிப்பு நீக்க நடவடிக் கையின் மூலம் சுமார் ரூ.5 லட்சம் கோடி அல்லது பணமதிப்பு நீக்கம் செய்த ரூபாயில் சுமார் 20% புழக்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப் பட்டுவிடும் என அரசாங்கம் கணித்தது. ஆனால், 2018-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, பணமதிப்பிழப்பு செய் யப்பட்ட ரூபாய் நோட்டு களில் 99.3% அதாவது, 15.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன. வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாத நோட்டுகளின் மதிப்பு ரூ.10,702 கோடி மட்டுமே!

இதற்கு முக்கியமான காரணம், கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பெரும் பணக் காரர்கள் வங்கி அதிகாரி களுக்குப் பெருமளவில் லஞ்சம் தந்து, புதிய பணமாக மாற்றியதுதான். பல லட்சம் ரூபாய் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், புத்தம் புதிய ரூபாயாக மாறியது. இது பற்றி எந்த விசாரணை யும் இதுவரை நடத்தப்பட வில்லை.

தீவிரவாதத்துக்கு நிதி உதவி குறைந்ததா..?

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, தீவிரவாதிகளுக்குப் நிதி உதவி செல்வது கட்டுப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், தீவிரவாதத்துக்கான நிதி உதவி பெருமளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறா இல்லையா என்பது விவாதத்துகுரிய விஷயமாகவே இருக்கிறது.

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க...

மத்திய அரசின் இந்தத் திடீர் நடவடிக்கையால் பெரும்பாலான துறைகள் பல சிரமங்களையே சந்தித்தன. முறைசாரா தொழில் துறைகளில் வேலை பார்த்து வந்த பல லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். தொழில்துறை உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளானது; உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது சில சதவிகிதங்கள் குறைந்தன.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களும் பெரும் பாதிப்புக்குள்ளானது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி 2016-17-ம் ஆண்டு ரூ.7,900 கோடி செலவிட்டது. அதற்கு முந்தைய ஆண்டு (2015-16 ஜூலை முதல் ஜூன் வரை) செலவிட்ட தொகை ரூ.3,400 கோடி மட்டுமே.

திட்டமிட்டு செய்திருக்கலாம்...

ஆக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக தனிமனிதர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் வாழ்க்கை தலைகீழாக மாறியது உண்மை என்றாலும், பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்ட வகையில் செயல்படத் தேவையான அடித்தளத்தை ஏற்படுத்த இந்த நடவடிக்கை உதவுவதாக இருந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி வரி முறை நடைமுறைக்கு வந்ததாலும் கறுப்புப்பணம் உருவாவது குறைந்து, அரசின் வரி வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நமது பொருளாதாரத்தின் மதிப்பு வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பொறுத்தவரை இன்னும் திட்டமிட்டு செய்திருந்தால், சாதாரண மக்கள் பாதிப்படையாமல், பொருளாதாரத்துக்கு இன்னும் பல நன்மைகள் கிடைத்திருக்கும்!