Published:Updated:

நான்கு மாநிலங்களில் ஜியோவின் இலவச ஆஃபர்... சென்னையைப் புறக்கணிக்கிறதா ரிலையன்ஸ்?

ரிலையன்ஸ் அம்பானி ( reliance ambani )

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச ஆஃபர் திட்டத்தின் கீழ் 5ஜி சேவையைப் பெறும் மாநிலத்தின் பயனாளர்களுக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்ட 5ஜிபி இன்டர்நெட் டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது.

நான்கு மாநிலங்களில் ஜியோவின் இலவச ஆஃபர்... சென்னையைப் புறக்கணிக்கிறதா ரிலையன்ஸ்?

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச ஆஃபர் திட்டத்தின் கீழ் 5ஜி சேவையைப் பெறும் மாநிலத்தின் பயனாளர்களுக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்ட 5ஜிபி இன்டர்நெட் டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது.

Published:Updated:
ரிலையன்ஸ் அம்பானி ( reliance ambani )

இந்தியா அடுத்தகட்ட டிஜிட்டல் புரட்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இன்று மொபைல் யாரிடம்தான் இல்லை. எனவே, எல்லோருக்கும் விஷயம் என்னவென்று நன்றாகவே தெரிந்திருக்கும். 5ஜி என்ற அதிவேக இணைய சேவை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் அடுத்தடுத்து 5ஜி சேவையைச் சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளன.

5ஜி அறிமுக விழாவில் பிரதமர் மோடியுடன் முகேஷ் அம்பானி
5ஜி அறிமுக விழாவில் பிரதமர் மோடியுடன் முகேஷ் அம்பானி

முதல்கட்டமாக 5ஜி அலைக்கற்றையை அதிக ஏலத்தில் எடுத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோ தொடங்கியதும் இந்திய டெலிகாம் துறையே ஆட்டம் கண்டது.

ஜியோவின் மலிவு விலை சேவை, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு நெருக்கடியானது நாமறிந்ததுதான். இப்போது மீண்டும் 5ஜி சேவையை அதிரடியாக அறிமுகப்படுத்துகிறது ரிலையன்ஸ். தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் முதல் கட்ட 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதுவும் இந்த நகரங்களுக்கு இலவச வெல்கம் ஆஃபருடன் வருகிறது 5ஜி. இந்த நகரங்களில் அக்டோபர் 5-ம் தேதி முதல் 5ஜியின் பீட்டா ட்ரயல் வெர்ஷனை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்கிறது.

5ஜி வருகை
5ஜி வருகை

இந்தத் திட்டத்தின் கீழ் 5ஜி சேவையைப் பெறும் மாநிலத்தின் பயனாளர்களுக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜிகாபைட் வேகம் கொண்ட 5ஜிபி இன்டர்நெட் டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் சென்னை ஏன் இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் தொகை, மொபைல் பயன்பாடு, டேட்டா நெட்வொர்க் தேவை என எந்த வகையில் பார்த்தாலும் சென்னையைத்தான் டெலிகாம் நிறுவனங்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், சென்னையைப் புறக்கணித்துவிட்டு வாரணாசி போன்ற நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை
சென்னை

அதேபோல் பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன்மூலம் தென்னிந்திய நகரங்கள் புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது? முகேஷ் அம்பானி பதில் சொல்வாரா?