Published:Updated:

ரிலையன்ஸ் நிறுவன உரிமைப் பங்கு விலை கிடுகிடு உயர்வு... உற்சாகத்தில் முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.53,124 கோடியைத் திரட்டத் திட்டமிட்டிருந்தார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆனால், எதிர்பார்த்தைவிட 1.6 மடங்கு விண்ணப்பங்கள், ரிலையன்ஸ் ரைட்ஸ் பங்குகள் வேண்டும் என்று வந்தன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் காட்டில் அடைமழைதான் என்று சொல்ல வேண்டும். காரணம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு ரிலையன்ஸ் பார்ட்லி பெய்ட் (Reliance Partly Paid) பங்கு விலை நல்ல லாபம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் பிபி பங்கு கடந்த திங்களன்று பங்குச் சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கியது. ரூ.684.25-க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை, அதிகபட்சமாக ரூ.731 வரை உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது ரூ.713.30-ஆக வர்த்தகமானது. இந்த விலை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், முகேஷ் அம்பானிக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.

Reliance Jio
Reliance Jio
இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.53,124 கோடியைத் திரட்டத் திட்டமிட்டிருந்தார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆனால், எதிர்பார்த்தைவிட 1.6 மடங்கு விண்ணப்பங்கள், ரிலையன்ஸ் ரைட்ஸ் பங்குகள் வேண்டும் என்று வந்தன. அதாவது, ரூ.84,000 கோடி மதிப்புக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன.

15 பங்குக்கு ஒரு பங்கு..!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்கள் 15 பங்குகளை வைத்திருந்தால் 1 பங்கு உரிமைப் பங்காக வாங்கிக் கொள்ளலாம். இதற்கான விலை பங்கொன்றுக்கு ரூ.1,257 என்றும், ரிலையன்ஸ் பங்கின் விலையிலிருந்து 14% தள்ளுபடி விலையில் இந்த உரிமைப் பங்கு தரப்படும் என்கிற அறிவிப்பு வர, பலரும் இந்த உரிமைப் பங்குக்கு விண்ணப்பித்தனர். இந்தப் பங்கு வெளியீட்டின்மூலம் ரூ.53,124 கோடியைத் திரட்டத் திட்டமிட்டிருந்தார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. ஆனால், எதிர்பார்த்தைவிட 1.6 மடங்கு விண்ணப்பங்கள், ரிலையன்ஸ் ரைட்ஸ் பங்குகள் வேண்டும் என்று வந்தன. அதாவது, ரூ.84,000 கோடி மதிப்புக்கு விண்ணப்பங்கள் வந்துசேர்ந்தன.

நேற்று கச்சா எண்ணெய்... இன்று, தகவல் தொழில்நுட்பம்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான தொழிலாக இருந்தது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு. தற்போது கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், இதன்மூலம் ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்மூலம் ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் லாபம் இனிவரும் காலத்தில் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை போட்டிபோட்டு வாங்கி முதலீடு செய்திருக்கின்றன. ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்பதன்மூலம் குறுகிய காலத்தில் ரூ.1,00,000 கோடி அளவுக்கு நிதி திரட்டியிருக்கிறார் முகேஷ் அம்பானி. இவற்றையெல்லாம் பார்த்த சிறு முதலீட்டாளர்கள் ரிலையன்ஸின் ரைட்ஸ் வெளியீட்டிலும் பங்கு பெற்று, எதிர்கால லாபத்தில் ஒருபகுதியை அனுபவிக்க விரும்பினர். எனவே, தான் எதிர்பார்த்ததைவிட அதிகமான முதலீடு வந்துசேர்ந்திருக்கிறது.

Share Price
Share Price

அதிகரித்த பங்குகள்... இந்த ரைட்ஸ் வெளியீடுமூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் வைத்திருந்த பங்குகளின் எண்ணிக்கை உயரவே செய்திருக்கிறது. ரைட்ஸ் வெளியீடு வருவதற்கு முன்பு முகேஷ் அம்பானியிடம் 75 லட்சம் பங்குகள் இருந்தன; ரைட்ஸ் வெளியீட்டுக்குப் பிறகு முகேஷிடம் இருக்கும் ரிலையன்ஸ் பங்குகளின் எண்ணிக்கை 80.5 லட்சம் பங்குகளாக உயர்ந்துள்ளன.

இதேபோல, முகேஷின் மனைவி மற்றும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகளின் பேரில் தலா 0.55 மில்லியன் பங்குகள் கிடைத்துள்ளன. இதன்மூலம் ரிலையன்ஸின் புரொமோட்டர்கள் என்கிற முறையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸில் வைத்திருக்கும் பங்குகள் 50.07 சதவிகிதத்திலிருந்து 50.29 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

mukesh ambani
mukesh ambani
ரிலையன்ஸ் உரிமைப் பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு என்ன பயன்?

உயர்ந்தது ரிலையன்ஸ் பங்கு!

கடந்த ஒரு மாத காலத்தில் ரிலையன்ஸின் ஒரு பங்கின் விலை ரூ.175 வரை அதிகரித்திருக்கிறது. அப்படியானால், ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு