பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அதிகரிக்கும் வட்டி... வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது எப்படி?

வீட்டுக் கடன் இ.எம்.ஐ
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன் இ.எம்.ஐ

வீட்டுக் கடன் இ.எம்.ஐ

நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் பலருக்கும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கவே செய்யும். காரணம், வாடகை வீட்டில் நம் விருப்பப்படி வசிக்க முடியாது. இந்தச் சூழலில் கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்று நினைப்பது நியாயம்தான்.

ஆனால், இப்போது தொடர்ந்து கடன்களுக் கான வட்டி அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி 0.50% ரெப்போ வட்டியை உயர்த்திவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் 1.4% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஆகிய நிறுவனங்கள் வட்டி விகிதத்தை ஏற்கெனவே உயர்த்திவிட்டன. தொடர்ந்து அடுத்தடுத்து வங்கிகள் வட்டியை உயர்த்த முனைந்துள்ளன. இதனால் வீட்டுக் கடன் வாங்குவோருக்கான வட்டி அதிகமாகும். அது கணிசமான சுமையை கடன் வாங்குவோரின் பட்ஜெட்டில் உருவாக்கும். இந்த வட்டி உயர்வு நடவடிக்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 6% வரை வட்டி விகிதம் உயர வாய்ப்புண்டு என்கிறார்கள் நிபுணர்கள்.

அதிகரிக்கும் வட்டி... வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது எப்படி?

தற்போது உயர்த்தப்பட்டுள்ள 50 அடிப்படை புள்ளிகள் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 ஆண்டு காலத்துக்கான வீட்டுக் கடனில் என்ன தாக்கத்தை உண்டாக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தால், கடனுக்கான மாதாந்தரத் தவணை ரூ.1,545 அதிகரிக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வந்து, அதைக் கட்டுக்குள் வைக்க ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே வந்து ரெப்போ விகிதம் 6 சதவிகிதத்தை எட்டினால் வீட்டுக் கடனுக்கான வட்டி 2.5% வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது 5.4% ரெப்போ விகிதத்தில் வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி 7.9 சதவிகிதமாக உள்ளது எனில், ரெப்போ விகிதம் 6 சதவிகிதமாக அதிகரிக்கும்போது வீட்டுக் கடன் வட்டி 8.5% வரை உயரும்.

தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், குடியிருப்புகளை வாங்குவதற்கான டிமாண்ட் குறையும். மக்களின் வீடு வாங்குகிற சென்டிமென்ட் பாதிக்கும். இதனால் குறுகிய காலத்துக்கு வீடு விற்பனை குறைவாக இருக்கும். இத்தகைய சூழலில், வீட்டுக் கடன் சார்ந்து என்ன முடிவெடுக்கலாம் என்கிற குழப்பம் எல்லோருக்குமே இருக்கும். இத்தகைய சூழலில், கடன் வாங்குபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி அதற்கு இ.எம்.ஐ செலுத்தி வருபவர் எனில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதால், பதற்றம் அடையத் தேவையில்லை. வீட்டுக் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலானவை. எனவே, பல வட்டி விகித ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை.

இவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று, கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை அதிகப்படுத்துவது அல்லது மாதாந்தர இ.எம்.ஐ தொகையை அதிகப்படுத்துவது. இதில், கடன் செலுத்தும் காலத்தை அதிகப்படுத்தினால் இ.எம்.ஐ அதிகப் படுத்துவதைக் காட்டிலும், அதிக வட்டி தர வேண்டிவரும்.

அதிகரிக்கும் வட்டி... வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது எப்படி?

வட்டி விகிதம் உயர்ந்து வருவதால், கைவசம் போதுமான தேவைக்கு மீறி உபரி நிதி இருந்தால், கடனை விரைந்து கட்டி முடிக்கலாம். எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதை அசலில் கட்டி குறைத்தால் கடன் செலுத்தும் காலம் குறையும். இதன் மூலம் கடன் மீது செலுத்தும் வட்டியை வெகுவாகக் குறைக்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அனைவருமே அவ்வப் போது வருகிற போனஸ், முதலீடு அல்லது சேமிப்பு ரீதியில் வரும் முதிர்வுத் தொகை போன்றவற்றை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதைவிட கடனை அடைக்க பயன்படுத்தலாம்.

இன்னொரு தேர்வும் உள்ளது. தற்போதுள்ள கடனின் நிலுவைத் தொகையை மாற்றவும் செய்யலாம். உங்களுடைய கடன் செலுத்தும் வரலாறு சிறப்பாக இருக்கும்பட்சத்தில், வேறு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கணிசமான வட்டி குறைப்புக்குக் கோரலாம். தற்போதுள்ள வட்டியைவிட குறைந்த வட்டி தரும் வங்கிகளுக்கு உங்களுடைய நிலுவைக் கடனை மாற்றிக்கொள்ளலாம்.

வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள இந்தச் சூழலில், புதிதாக வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடுவோர் என்ன செய்ய வேண்டும்? கடன் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் கவனத்துடன் வேண்டும்.

வட்டிவிகிதம் எப்போதுமே உயர்ந்துகொண்டே இருக்காது, அதே சமயம், மிகக் குறை வாகவும் இருக்கும் என எதிர் பார்க்க முடியாது. அதிகரிக்கும் வட்டி ஒரு கட்டத்தில் குறைய ஆரம்பிக்கும். அப்போது குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்கும்.

கடன் மீது நீங்கள் செலுத்தும் மாதாந்தர இ.எம்.ஐ தொகை யானது, உங்களுடைய நிகர மாத வருமானத்தில் 30 - 40 சதவிகிதமாக இருக்கும் அளவுக்கு கடனைத் திட்ட மிடுங்கள். இ.எம்.ஐ 30 - 40 சதவிகிதத்துக்கு மிகாமல் இருந்தால்தான் அன்றாடத் தேவைகளுக்கான செலவு களுக்கும், அவசர நிதி தேவை களுக்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும்.

இந்த வட்டி விகித உயர்வு நடவடிக்கைக்கு முன்பே கடன் வாங்குவதற்கான வேலைகள் முடிந்திருந்தால் மீண்டும் ஒரு முறை கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதியை அணுகி வட்டி விகிதம் மற்றும் கடன் செலுத் தும் காலம் இரண்டையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான கடன் அப்ரூவல் கடிதத்தில் உள்ள விவரங்கள் முக்கியமல்ல. உங்களுக்குக் கடன் தொகை வழங்கப்படும்போது என்ன வட்டி விகிதம், கடன் செலுத் தும் காலம் உள்ளிட்ட விவரங்கள் என்னவாக இருக் கிறது என்பதுதான் முக்கியம். எனவே, கவனமாக இருந்து கடன் வழங்கும் நிறுவனத்திடம் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்!