Published:Updated:

பணப்புழக்கத்தை அதிகரிக்க மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்கிறதா ரிசர்வ் வங்கி?

மக்களின் வாங்கும் திறனையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் விதமாக இந்த ஆண்டில் ஆறாவது முறையாக, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், வரும் டிசம்பர் மாதத்தில் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

நாட்டின் பொருளாதார நிலை மந்தமாகும்போதெல்லாம் அதைச் சரிசெய்வதற்காக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை (ரெப்போ விகிதம்) குறைப்பது வழக்கம். நடப்பு ஆண்டில் இதற்கு முன்னதாக 5 முறைகள் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதில் மொத்தம் 135 அடிப்படைப்புள்ளிகள் குறைக்கப்பட்டன. எனினும் பொருளாதார மந்த நிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவிகிதமாக ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்தது. கடந்த 2013ம் ஆண்டுக்குப்பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் காலாண்டின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மேலும் சரிவடைந்து 4.7 சதவிகிதமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தொடர்ச்சியாக 6 காலாண்டுகளாக இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்திக்கவுள்ளது.

எனவே, இதைச் சரிக்கட்ட, மக்களின் வாங்கும் திறனையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும்விதமாக இந்த ஆண்டில் ஆறாவது முறையாக, ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், வரும் டிசம்பர் மாதத்தில் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிச்செய்யப்பட்டால், ஒரே ஆண்டில் அதிக முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்திருப்பது இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால் வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, நாட்டின் பொருளாதாரம் மேம்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.