Published:Updated:

25 ஆண்டுகள் கடந்த ரிட்டயர்மென்ட் ஃபண்டுகள்: வருமானம் எப்படி இருந்தது?

retirement plan

ஓய்வுக் காலத்துக்கான இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இரட்டை இலக்க வருமானத்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம்தான். இந்த இரு ஃபண்டுகளும் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.12% மற்றும் 11.48% வருமானம் கொடுத்திருக்கின்றன.

25 ஆண்டுகள் கடந்த ரிட்டயர்மென்ட் ஃபண்டுகள்: வருமானம் எப்படி இருந்தது?

ஓய்வுக் காலத்துக்கான இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இரட்டை இலக்க வருமானத்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம்தான். இந்த இரு ஃபண்டுகளும் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.12% மற்றும் 11.48% வருமானம் கொடுத்திருக்கின்றன.

Published:Updated:
retirement plan

இந்தியாவில் இரு ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளன. அந்த ஃபண்டுகள் கொடுத்துள்ள வருமானம் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா என்கிற விவரங்களைப் பார்ப்போம்.

ஓய்வுக் காலத்துக்கான இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடந்த 25 ஆண்டுகளில் இரட்டை இலக்க வருமானத்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம்தான். இந்த இரு ஃபண்டுகளும் ஆரம்பம் முதல் தலா ஆண்டுக்கு சராசரியாக 10.12% மற்றும் 11.48% வருமானம் கொடுத்திருக்கின்றன.

ஓய்வுக் காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட்
ஓய்வுக் காலத்துக்கான மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முக்கிய பிரிவான ஹைபிரிட் ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில் இந்த ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானம் அதையொட்டியே இருக்கின்றன. இந்த ஃபண்டின் முதலீட்டு பூட்டுக் காலம் (Lock-in) குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது ஓய்வுக் கால வயது, எது முந்துகிறதோ அது எடுத்துக்கொள்ளப்படும்.

 25 ஆண்டுகளைக் கடந்த ஓய்வுக் கால ஃபண்ட் திட்டங்களாக யு.டி.ஐ ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் (UTI Retirement Benefit Plan), ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான் (Franklin India Pension Plan) ஆகியவை உள்ளன.

வருமானம் எப்படி?

25 ஆண்டுகள் கடந்த ரிட்டயர்மென்ட் ஃபண்டுகள்: வருமானம் எப்படி இருந்தது?

யு.டி.ஐ ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் :

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம்தான் ஓய்வுக்கால செலவுகளுக்குத் தேவைப்படும் தொகையை சேர்க்கும் விதமாக இன்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன் முதல் மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வுக்கால முதலீட்டுத் திட்டத்தை யு.டி.ஐ ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் என்கிற பெயரில் ஆரம்பித்தது.

retirement plan
retirement plan

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு ஹைபிரிட் ஃபண்டாக உள்ளது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.15%  வருமானம் கொடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.3,634 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட பல முறை அதிக வருமானம் கொடுத்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 12% வருமானம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையை 6.6% மற்றும் 9.15% வருமானம் கொடுத்திருக்கிறது.

ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான்

இந்த ஃபண்ட் ஓய்வுக்கால செலவுகளுக்கு பணம் சேர்க்கும் நோக்கத்தோடு 1997-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 11.5% வருமானம் கொடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.446 கோடி நிர்வகிக்கப்படுகிறது. செலவு விகிதம் 2.28% ஆக உள்ளது. 

Pension Scheme
Pension Scheme

பல முறை அதன் பெஞ்ச் மார்க் ஆன நிஃப்டி 500 குறியீட்டை விட அதிக வருமானம் கொடுத்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 7.50% வருமானம் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 6.30% மற்றும் 9.40% வருமானம் கொடுத்திருக்கிறது.

 ரிட்டயர்மென்ட் என்பது பெயரில் இருக்கிறது என்பதற்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தேவையில்லை. அதேநேரத்தில், முதலீட்டில் ரிஸ்க்கே எடுக்க வேன்டாம் என நினைப்பவர்கள் இந்த ரிட்டயர்மென்ட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

இந்த ஃபண்ட் இரு ஃபண்டுகளின் சிறப்பு அம்சம், இவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு வருமானவரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வருமான வரியை மிச்சப்படுத்த திட்டமிடுபவர்கள் மற்றும் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புவர்கள் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.  இந்த ஃபண்டுகளில் 40 சதவிகிதம் நிறுவனப் பங்குகளிலும் மீதி கடன் சந்தை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப்படுவதால் வரி விதிப்பு என்கிறபோது கடன் ஃபண்டுகளின் கீழ் வருகிறது. அதனால், ஆதாயத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக பணவீக்க சரிக்கட்டலுக்கு 20% கட்டினால் போதும்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்.!

அதேநேரத்தில் முதலீட்டுக் காலம் சுமார் 10 - 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க முடியும், வரிச் சலுகையும் வேண்டும் என்பவர்கள் பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீட்டில் செய்யலாம்.

டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளின் வருமானம் கடந்த மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டுகளில் முறையே 22 - 42% மற்றும் 14 - 24% ஆக உள்ளது. மூன்று ஆண்டுகள் மட்டுமே லாக் இன் கொண்ட இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80 பிரிவின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது. மேலும், நீண்ட கால மூலதன ஆதாய வரியில், நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ. 1 லட்சம் வரிக்கும் வரி இல்லை. இதற்கு மேற்படும் மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.