Published:Updated:

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22... பொய் அல்ல; உண்மையும் அல்ல!

ஆய்வறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22... பொய் அல்ல; உண்மையும் அல்ல!

ஆய்வறிக்கை

Published:Updated:
ஆய்வறிக்கை
பிரீமியம் ஸ்டோரி
ஆய்வறிக்கை

இந்தியப் பொருளாதாரம், மிக வலுவான நிலையை நோக்கி வேகமாக நகர்கிறது... 11 அத்தியாயங்கள் கொண்ட 413 பக்கப் பொருளாதார ஆய்வறிக்கை 2021-22, பல்வேறு புள்ளி விவரங்கள், அட்டவணைகள், ஒப்பீடு களுடன் சொல்ல வருகிற செய்தி இதுதான்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இதில் சொல்லப்பட்டுள்ள சில விவரங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளன. மொத்த நுகர்வுகள் 7% அதிகரித்துள்ளது; குறிப்பாக, அரசுச் செலவுகள் கூடி இருக்கின்றன. ஏற்றுமதி நிலவரம் வலுவாக உள்ளது; உள்நாட்டு சந்தைத் தேவை அதிகரிப்பு மற்றும் சர்வதேச விலையேற்றம் காரணமாக இறக்குமதியும் அதிகரித்துள்ளது. அரசு வருவாய் அதிகரித்ததன் விளைவாக, 2020-21-ல் மிகுந்திருந்த நிதிப் பற்றாக்குறை, 2021-22-ல் கணிசமாகக் குறைந்து உள்ளது. தேவை மேலாண்மையைவிடவும் அளிப்பு மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது; அநாவசியக் கட்டுப்பாடுகள் நீக்கம், பின்தேதியிட்ட வரி விதிப்பு ரத்து, தனியார் மயமாக்கலில் தீவிரம், உற்பத்தி சார் ஊக்குவிப்பு உள்ளிட்ட ‘அளிப்பு’ பக்க சீர்திருத்தங்கள் நல்ல பலனைத் தந்துள்ளன.

அரசின் மூலதனச் செலவுகள் அதிகரித்து, வீடு கட்டும் திட்டத்தால் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடந்தன.

கொரோனாவுக்கான எதிரான தடுப்பூசி இயக்கம் அரசின் மாபெரும் சாதனையாகப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கு ஆற்றியதால், 18 வயதுக்கு மேற்பட்டவர் களில் 93% முதல் தவணையும், 70% இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள் ளனர். இது ஒரு வியக்கத்தகு சாதனைதான்.

பணவீக்கத்தைப் பொறுத்தமட்டில், டிசம்பர் 2021-ல், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் 5.6% இருந்தது; மொத்த விலைக் குறியீட்டு எண், இரட்டை இலக்கத்தில் இருந்து குறைந்த பாடில்லை. இவையெல்லாமே உண்மை யாகவோ, உண்மைக்கு நெருக்கமாகவோ இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், தொடர்ந்து சொல்லப்படுகிற ‘கணிப்புகள்’ – நம்மை ‘மிரள வைக்கின்றன.’

இந்தியப் பொருளாதாரத்தின் (GDP) வளர்ச்சி 2021-22-ல் 9.2 சதவிகிதமாக இருக்கலாம்; வேளாண்துறை 3.9%, தொழில்துறை 11.8%, சேவைத்துறை 8.2% வளர்ச்சி பெறும் என்கிறது அறிக்கை. கடந்த ஆண்டில் தொழில்துறை 7%, சேவைத்துறை 8.4% சரிவைக் கண்டன. தற்போது, கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சி எட்டப்பட்டுவிட்டது என்று இந்த அறிக்கை சொல்வது எப்படி என்று தெரிய வில்லை. 2021-22-ல் தொழில் முதலீடுகள் 15% அதிகரிக்கும் என்கிற அறிக்கை, தனியார் முதலீடுகள் இன்னமும் முழுமையாக மீண்டுவரவில்லை என்பதையே காட்டுகிறது.

மிக சுவாரஸ்யமான புள்ளிவிவரம் (அட்டவணை 8) நமது கவனத்தை ஈர்க்கிறது. கொரோனாவின் உச்சத்தில் (2020) மிக மோசமான பொருளாதாரச் சரிவை சந்தித்த நாடுகளில் ஸ்பெயின் (10.8%) மெக்சிகோ (8,2%) ஆகியவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வீழ்ச்சி கண்டது. அப்போது சீனா மட்டுமே 2.3% வளர்ச்சி ‘காண்பித்தது’. இந்த நிலையில், 2023-க்கான கணிப்பில், உலகின் மிக அதிக வளர்ச்சி இந்தியாவில் (7.2%) இருக்கும்; சீனாவின் வளர்ச்சி 5.2% அளவே இருக்கும் என்கிறது இந்த அட்டவணை. பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்தவர்கள், ஊதியம் குறைக்கப்பட்டவர்கள், சுயதொழில் பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேர் ‘பெருந்தொற்றுக்கு முந்தைய’ பொருளாதார நிலையை அடைந்திருக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22... பொய் அல்ல; உண்மையும் அல்ல!

பொய்த் தோற்றம் தரும் உண்மைகள்...

கடுமையான நிதி நெருக்கடி இன்னமும் தொடர்வதாகவே தெரிகிறது. புதிய வேலை வாய்ப்பு கள், பழைய ஊதியம், சிறு வணிக நிறுவனங்களின் வியாபாரப் பெருக்கம், மக்களிடையே நிலவும் தாராளப் பணப்புழக்கம் என எதுவுமே பிரகாசமாக இருப்பதற் கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்த நிலையில், அரசின் பொருளா தார ஆய்வறிக்கை எதன் அடிப் படையில் அபார வளர்ச்சி குறித்த கணிப்புகளை முன்வைக்கிறது என்று புரியவில்லை. ஆதாரமற்ற கணிப்பு, அடிப்படையற்ற நம்பிக்கையை இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை விதைத்திருக்கிறது. அறிக்கை பொய் சொல்லவில்லை. ஆனால், உண்மை மிகைப்படுத்தப் படும்போது அது பொய்த்தோற்றம் தரத் தொடங்கிவிடுகிறது. உண்மையை உள்ளபடி பிரதிபலிக் கும் யதார்த்தமான அறிக்கையாக இது இருந்திருந்தால் நன்றாக இருந் திருக்கும். பரவாயில்லை, அறிக்கையின் ‘நம்பிக்கைகள்’ மெய்யானால், எல்லாருக்கும் மகிழ்ச்சிதானே?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism