Published:Updated:

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி; ₹18,600 கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை பாதிப்பு!

State Bank of India
News
State Bank of India ( Vikatan )

ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கினாலும் வங்கிகளுக்கு இடையேயான பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. இது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் தனியார்மயமாக்குதல் குறித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ.18,600 கோடி மதிப்பிலான காசோலை பரிமாற்றம் செய்யப்படாமல் வங்கியிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளைத் தனியார் மயமாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

காசோலை
காசோலை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தப் பேச்சுவார்தை பலன் அளிக்காததால் நேற்றும் இன்றும் நாடு தழுவிய அளவில் முழுமையான போராட்டத்தை நடத்த முடிவு செய்தது வங்கிச் சங்கங்களின் கூட்டமைப்பு எனப்படும் UFBU.

இதையொட்டி எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தைப் பற்றி முன்பாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இருந்தும் பல ஆயிரம் கோடி ரூபாய் பண மற்றும் காசோலை பரிமாற்றம் தடைபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், ``வியாழக்கிழமை அன்று நடந்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.18,600 கோடி மதிப்பிலான காசோலை பரிமாற்றம் தடைபட்டுள்ளது" என்று கூறினார். மேலும் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.

வெங்கடாசலம்
வெங்கடாசலம்

ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கினாலும் வங்கிகளுக்கு இடையேயான பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டது. இது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் அமைப்பின் (AIBOC) பொது செயலாளர் சௌம்யா தத்தா கூறியதாவது, ``நாடு முழுவதும் 1,00,000 பொதுத்துறை வங்கிக் கிளைகளில் வேலை பார்க்கும் 7,00,000 வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் பிடிவாதப் போக்கால் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது’’ என்று கூறினார்.

புதன்கிழமை அன்று தமிழக அமைச்சர் துரைமுருகன் வங்கிகள் தனியார்மயமாக்குதலை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.