Published:Updated:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... இந்தியா சந்திக்கப்போகும் பாதிப்புகள்..!

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

பொருளாதாரம்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... இந்தியா சந்திக்கப்போகும் பாதிப்புகள்..!

பொருளாதாரம்

Published:Updated:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.70 வரை சரிந்தது. இது வரலாற்றில் மிகப் பெரும் வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளது. இது மேலும் சரிந்து 78 என்கிற நிலையை அடையுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப் பின் வீழ்ச்சிக்கு என்ன காரணம், இதனால் என்னென்ன பாதிப்புகள் உருவாகும் என்பது பற்றி ஃபாரெக்ஸ் மற்றும் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த சந்தையாக மாறிய பிறகு, வர்த்தக நடைமுறை களுக்காகப் பொதுவான நாணயமாக அமெரிக்க டாலர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கிடையே நிகழும் ஒவ்வொரு புவி அரசியல் சார்ந்த சம்பவங்களும், வர்த்தக முடிவுகளும் கணிசமான தாக்கத்தை அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தும். இதிலிருந்து தப்பிப்பது என்பது சவாலான காரியம்.

சமீபத்தில் கொரோனாவுக்குப் பிறகு, தொடர்ந்து சர்வதேச வர்த்தகத்திலும், கமாடிட்டி சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக் கின்றன. ஒருபக்கம் ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம், இன்னொரு பக்கம் பணவீக்க உயர்வு. இவை இரண்டின் காரணமாகவும் ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி... இந்தியா சந்திக்கப்போகும் பாதிப்புகள்..!

அமெரிக்க ஃபெடரல் வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, சர்வதேச சந்தையில் டாலருக் கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் டாலர் இண்டெக்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் 95 - 100 எனும் வரம்பில் இருந்த நிலையில், தற்போது 104 என்ற நிலையை நெருங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியச் சந்தை யிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளி யேறிக்கொண்டே இருக்கின்றன.

இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டது. வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப் படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இதையொட்டி, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியிருக் கிறது. ரூபாய் மதிப்பு சரிவு அதிகமாக இருப்ப தால், அதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தன்னிடமிருந்த டாலர்களைக் கணிசமாக விற்க ஆரம்பித்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77.70 வரை சரிந்த நிலையில், ரிசர்வ் வங்கி டாலர்களை விற்ற பிறகு, அது சற்று மீண்டு 77.41 எனும் அளவுக்கு வந்தது.

தற்போது ரிசர்வ் வங்கியிடம் 600 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய செலாவணி ரிசர்வ் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவைக் குறைக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து டாலர்களை விற்கும் என்று சொல்ல முடியாது. சந்தை நகர்வுகளுக்கு ஏற்பவே ரிசர்வ் வங்கி தன் னுடைய முடிவுகளைக் கவனமாக எடுக்கும். எனவே, ரூபாய் மதிப்பு சரிவைக் குறைப்பதில் ரிசர்வ் வங்கியின் பங்கு குறைவுதான்.

ஆனால், அரசின் கையில்தான் பெரும்பான்மையான பங்கு இருக்கிறது. இந்தியாவின் வர்த்தகம் என்பது பற்றாக் குறையில்தான் இருந்து வருகிறது. அதாவது, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள், சேவைகளுக்கு நாம் டாலரை வழங்க வேண்டும். எனவே, ரூபாய் மதிப்பு சரிவைச் சமாளிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஆனால், இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் பொருள்கள், சேவைகள் பற்றாக்குறை ஏற்பட்டால், அவற்றின் விலை மேலும் உயரும். எனவே, தற்போது இறக்குமதியைக் குறைக்காமல், ஏற்றுமதியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். புதிய சந்தைகளை அடையாளம் காண வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். பிற நாடுகளுடனான வர்த்தக உடன்படிக்கைகளைத் திட்டமிட வேண்டும். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து சவாலான சூழலையே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது. காரணம், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஒரு பக்கம் எனில், இந்திய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அளவும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. அதே போல், அரசுக் கடன் பத்திரங்கள், கம்பெனி கடன் பத்திரங்கள் போன்றவற்றி லிருந்தும் முதலீடுகள் வெளியேறுகின்றன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம் போன்ற கமாடிட்டிகளின் விலை குறைந்திருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரியும்போது இங்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, தங்கம் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்பிருக்காது. சொல்லப்போனால் பணவீக்கம் காரணமாகவும், ரூபாய் வீழ்ச்சியின் காரணமாகவும் இவற்றின் விலை உயரவே வாய்ப்பு அதிகம். மேலும், பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரலாம். உதாரணம், சமையல் எரிவாயுவின் விலை 1,000 ரூபாயை நெருங்கியுள்ளது.

வாகன உதிரிபாகங்கள், எலெக்ட்ரானிக் உதிரிபாகங்கள் போன்றவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றின் விலையும் உயரும். அதிக அளவில் இறக்குமதி செய்யக்கூடிய சமையல் எண்ணெய் விலையும் கணிசமாக உயரும். வெளிநாடுகளில் படிப் பவர்களின் செலவுகள் அதிகரிக் கும். வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்ல விரும்புபவர்களின் செலவுகள் அதிகரிக்கும். இது போன்ற பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி யானது பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. இறக்கத்தின் போக்கில்தான் சந்தையின் நகர்வுகள் உள்ளன. தொடர்ந்து மேலும் இறங்க வாய்ப்பு அதிகம். மியூச்சுவல் ஃபண்டுகளிலும் கடன் சார்ந்த ஃபண்டுகள் பாதிப்புக்கு உள்ளாகும்” என்றார்.

மிக சவாலான நிலையில் தான் நாட்டின் பொருளாதாரம் இருந்துவருகிறது. தற்போது அரசு அதைச் சமாளிக்கும் வகையிலான நடவடிக்கை களைத் திட்டமிட வேண்டும். இல்லை எனில், அதன் பாதிப்பை ஒவ்வொரு சாமான்யரும்தான் சுமக்க வேண்டியிருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism