பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வந்தாச்சு போலி வங்கி... உங்கள் பணம் பத்திரம்... உஷார் மக்களே உஷார்!

போலி வங்கி
பிரீமியம் ஸ்டோரி
News
போலி வங்கி

மோசடி

போலி ரூபாய் நோட்டு களைக் கண்டுபிடிக்க எலெக்ட்ரானிக் மெஷின் கண்டுபிடிக்கப்பட்ட காலம் போய், இப்போது போலி வங்கிகளை எப்படி கண்டு பிடிப்பது என்கிற காலத்துக்கு வந்திருக்கிறோம். ஏற்கெனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பெயரில் போலியாக வங்கி நடத்திய கும்பல் சிக்கிய கதை ஊரறிந்ததுதான். தற்போது ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட்’ என்ற பெயரில் சென்னை யைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கிளை களைத் தொடங்கி மோசடி யில் ஈடுபட்டுள்ளார்.

அசல் வங்கியைப் போலவே, மென்பொருள், பில்லிங் மெஷின், பாஸ்புக் பிரின்டிங் மெஷின் எனப் பக்காவாக வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் இருக்கும்படி திட்டமிட்டு இந்தக் கிளைகளை நடத்தி வந்திருக்கிறார். வங்கியில் கணக்குத் தொடங்கி பணத்தை டெபாசிட் செய் தால் எளிதில் கடன் கிடைக் கும் என்றும், இந்தப் போலி வங்கிகள் கூறிவந்திருக் கின்றன. தங்க நகைக் கடன், விவசாயக் கடன் என ஏழை, நடுத்தர விவசாயிகளைக் குறி வைத்து இந்த வங்கிக் கிளைகள் செயல்பட்டிருக் கின்றன.

வந்தாச்சு போலி வங்கி... உங்கள் பணம் பத்திரம்... உஷார் மக்களே உஷார்!

ரிசர்வ் வங்கியின் அனுமதி எதுவும் பெறாமல் இந்த வங்கி இயங்கிவருவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து சென்னை குற்றவியல் காவல்துறை சந்திரபோஸைக் கைது செய்தது. இந்த வங்கி மொத்தமாக மோசடி செய்த தொகை எவ்வளவு என விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது போன்ற போலி வங்கிகளால் இனியும் மக்கள் மோசடிக்கு உள்ளாகாமல் இருப்பது எப்படி என்று சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கியின் தென்மண்டல பொது மேலாளர் மணியன் கலிய மூர்த்தியிடம் பேசினோம்.

“வங்கி அதிகாரி என்று சொல்லி மொபைலில் பேசி மோசடியில் ஈடுபட்டவர் களைத்தான் இதுவரை பார்த் திருக்கிறோம். போலியாக வங்கியே தொடங்கி மோசடி யில் ஈடுபடுவார்கள் என்று ரிசர்வ் வங்கிகூட எதிர்பார்த்திருக்காது. இனிதான் இதை யெல்லாம் தடுப்பது எப்படி என்று ரிசர்வ் வங்கி யோசிக்கும்.

ஏற்கெனவே கூட்டுறவு வங்கிகளில் நடக்கும் மோசடி கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகுதான் ரிசர்வ் வங்கியின் கீழ் அவற்றைக் கொண்டுவரும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது வங்கியே போலி எனில் அவற்றைக் கண்டறிய உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி இப்போது தான் மேம்பட்டுவருகிறது. அந்த வளர்ச்சியுமேகூட முழுமையாகப் படித்தவர்களுக்கே பிடிபட வில்லை. ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், வதந்தி களையும் பொய்யான செய்திகளையும் பரப்புவதில் முதல் இடத்தில் இருக்கிறது. மொபைலை ஊர்வம்பு பேச பயன்படுத்துகிறார்களே தவிர, நல்ல விஷயங் களைத் தேடிப் படித்து, விழிப்புடன் இருக்க மக்கள் நினைப்பதில்லை.

மணியன் கலியமூர்த்தி
மணியன் கலியமூர்த்தி

வங்கிகளின் நம்பகத்தன்மை அறிய வங்கிகளின் இணையதளத்தில் ‘கிளைகளின் லொகேஷன்’ வசதி வழங்கப்பட்டிருக்கும். அதில் குறிப்பிட்ட வங்கிக் கிளையின் முகவரி விவரங்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிலும், புதிதாகத் திறக்கப்பட்ட கிளைகளின் விவரங்கள் இணையதளத்தில் அப்டேட் செய்யப்படாமல்கூட இருக்கலாம். புதிதாக ஒரு கிளை தொடங்கப்படுகிறது எனில் ஏற்கெனவே நீங்கள் கணக்கு வைத்திருக்கிற, சேவைகளைப் பெற்று வருகிற கிளையில் புதிய கிளை பற்றிய விவரங்களைச் சொல்லி ‘கிராஸ் செக்’ செய்துகொள்ள வேண்டும். உறுதியாகத் தெரியும்வரை புதிய வங்கிக் கிளையில் கணக்குத் தொடங்கவோ பணப் பரிவர்த்தனை செய்யவோ வேண்டாம்.

போலி வங்கி எனில், பணப் பரிவர்த்தனை செய்யும்போது உங்களுக்கு வழக்கமாக வருகிற மெசேஜ், மெயில் போன்றவை வராது. தவிர, ரிசர்வ் வங்கியும் அரசும், பதிவு செய்யப்பட்ட வங்கிகளின் விவரங்களையும் அவற்றின் கிளைகளின் விவரங் களையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது ஃபோரமில் பதிவேற்ற வேண்டும். நிதி மோசடி தொடர்பான புகார்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையெல்லாம்தான் மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்” என்றார்.

புதிய வங்கிகளில் உறுப்பினராகும் முன் இனி மிக மிக உஷாராக இருப்பது அவசியத்திலும் அவசியம்!