Published:Updated:

இந்திய FinTech ஸ்டார்ட்அப் நிறுவனமான Groww-வில் முதலீடு செய்திருக்கிறார் சத்யா நாதெல்லா!

சத்யா நாதெல்லா
News
சத்யா நாதெல்லா

முன்னாள் ஃபிளிப்கார்ட் ஊழியர்களான லிலத் கேஷ்ரி, ஹர்ஷ் ஜெய்ன், இஷான் பன்ஸால் மற்றும் நீரஜ் சிங் ஆகியோரால் தொடங்கப்பட்டது Groww.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா, பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்ட FinTech ஸ்டார்ட்அப்பான Groww-வில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. Groww நிறுவனத்தின் துணைநிறுவனர்களில் ஒருவரான லலித் கேஷரி இந்தச் செய்தியினைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய ட்விட்டர் பதிவில், "உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவரை முதலீட்டாளராகவும், ஆலோசகராகவும் பெறுகிறது Groww. இந்தியாவில் நிதிச்சேவைகளை வழங்கி வரும் எங்களுடன் அவர் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார் லலித்.

Groww
Groww

முன்னாள் ஃபிளிப்கார்ட் ஊழியர்களான லிலத் கேஷ்ரி, ஹர்ஷ் ஜெய்ன், இஷான் பன்ஸால் மற்றும் நீரஜ் சிங் ஆகியோரால் 2016-ஆம் ஆண்டு Groww நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான தளமாகத் தொடங்கப்பட்ட Groww, பின்னர் மியூச்சுவல் ஃபண்ட், ஸ்டாக், IPO, டிஜிட்டல் கோல்டு மற்றும் ETF ஆகியவை அனைத்திலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒரே தளமாக மேம்படுத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் தான் முதலீட்டாளர்களிடமிருந்து 251 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1,800 கோடி ரூபாய்) நிதி திரட்டியது Groww. செக்கோயா கேப்பிடல் இந்தியா, Y காம்பினேட்டர், ரிப்பிட் கேப்பிட்டல், டைகர் குளோபல் மற்றும் ஐகானிக் க்ரோத் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் Groww-வில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில் தான் முதலீட்டாளராகவும், ஆலோசகராகவும் Groww-வுடன் இணைந்திருக்கிறார் நாதெல்லா. ஆனால், அந்த நிறுவனத்தில் நாதெல்லா எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார், இந்தியாவில் வேறு எந்த ஸ்டார்ட்அப்பிலாவது நாதெல்லா முதலீடு செய்திருக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்தியாவில் ஸெரோதா, அப்ஸ்டாக்ஸ் மற்றும் பேடிஎம் மணி ஆகிய நிறுவனங்கள் Groww-வுக்கு போட்டி நிறுவனங்களாக இருக்கின்றன.