Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வெளிநாட்டு பங்கு முதலீடு: செபி அதிரடி முடிவு..!

மியூச்சுவல் ஃபண்ட் ( mutual fund )

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய விதித்திருந்த தடையை தற்போது நீக்கியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வெளிநாட்டு பங்கு முதலீடு: செபி அதிரடி முடிவு..!

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய விதித்திருந்த தடையை தற்போது நீக்கியுள்ளது.

Published:Updated:
மியூச்சுவல் ஃபண்ட் ( mutual fund )

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய விதித்திருந்த தடையை தற்போது நீக்கியுள்ளது.

இந்திய முதலீட்டாளர்களிடம் வெளி நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி பெற்றனர். என்றாலும் இந்திய மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தையில் அதிகபட்சமாக 7 பில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் ஏறக்குறைய 55 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய செபி அனுமதி வழங்கியிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய முதலீடுகள்

இந்த உச்சவரம்பு அளவு முதலீட்டை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் எட்டின. இதன் காரணமாக புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு புதிய அனுமதி கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட்
வேல்யூ மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால் கடந்த 5 மாதங்களாக இந்திய பங்கு சந்தை உட்பட உலகில் உள்ள அனைத்து முன்னணி பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. சராசரியாக 20 முதல் 30 சதவீத சரிவை அனைத்து பங்கு சந்தை குறியீடுகளும் சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களில் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட் கட்டமைப்பின் சார்பாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி கோரப்பட்டது.

தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு மீண்டும் 7 பில்லியன் டாலர் என்ற உச்ச வரம்பு வரை முதலீட்டினை மேற்கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அனுமதி அளித்துள்ளது. அதனால் இந்திய முதலீட்டாளர்கள் தற்போது மீண்டும் உலக சந்தைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கரன்சி நிலவரங்கள்

வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்யும் பொழுது கரன்சி நிலவரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால் உலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவு அதிகரிக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை வழங்க வாய்ப்பளிக்கும். பொதுவாக தொடர்ந்து டாலர் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்ந்து வருவதால் முதலீட்டு அளவு உயர்வு மற்றும் டாலர் மதிப்பு உயர்வு ஆகிய இரட்டை பலன்கள் வெளிநாட்டு குறியீடுகளின் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

என்றாலும் அனைத்து வெளிநாட்டு பங்கு சந்தைகளும் எப்போதும் சிறப்பாக செயல்படும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. குறிப்பாக ஜப்பானின் முக்கிய குறியீடுகள் கடந்த 30 ஆண்டுகளாக நெகட்டிவ் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு உதாரணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் ஜப்பான் பங்குச் சந்தையில் 1990களில் முதலீடு செய்திருந்தால் 30 ஆண்டுகள் ஆன பிறகும் அதிக லாபம் கிடைத்து இருக்காது. அதனால் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நிச்சய லாபம் கிடைக்கும் என்று ஒரேடியாக நம்பி விடவும் முடியாது.

நீண்ட கால முதலீடு

கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தை கடுமையான கரடியின் பிடியில் சிக்கியுள்ளது. முதலீட்டின் முக்கிய அளவுகோல்களில் ஒன்று அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காமல் இருப்பது ஆகும். அதனால் நமது முதலீட்டின் ஒரு பகுதியை இந்திய பங்குச்சந்தைகளில் மட்டுமில்லாது வெளிநாட்டு பங்குச் சந்தைகளிலும் வைத்திருப்பது நீண்டகால நோக்கில் லாபம் தரும்.

அதனால் வெளிநாட்டு பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் தற்போது தகுதி வாய்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து தமது முதலீட்டை மேற்கொள்ளலாம்.