Published:Updated:

மும்பையை விஞ்சும் சென்னை; தமிழக விமான நிலையங்களில் அதிகரிக்கும் தங்கக் கடத்தல்; என்ன காரணம்?

தங்கம்
News
தங்கம்

2018-2019 நிதி ஆண்டில் மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த தங்கப் பறிமுதல்களிலேயே பெரியதாகும். ஆனால் 2020 முதல் சென்னை விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் அதிகரித்துள்ளது.

கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவதில் மும்பையை விஞ்சிவிட்டது நம் சென்னை. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ராஜ்ய சபாவில் நடந்த கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த நவம்பர் மாதம் வரை சென்னையில் 130 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச தங்கம் ஆகும்.

Airport (Representational Image)
Airport (Representational Image)
AP Photo/Shafkat Anowar

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னைக்கு அடுத்த இடத்தை கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் பிடித்துள்ளது. இங்கே பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 128 கிலோ ஆகும்.

டெல்லி விமான நிலையத்தில் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அளவில் சிறிய விமான நிலையமாக இருந்தாலும், டெல்லிக்கு நிகராக திருச்சி விமான நிலையத்தின் மூலம் 78 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

2018-2019 நிதி ஆண்டில் மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த தங்கம் பறிமுதல்களிலேயே பெரியதாகும். ஆனால், 2020 முதல் சென்னை விமான நிலையத்தில் தங்கப் பறிமுதல் அதிகரித்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்தினால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு நிறைய தடைகள் ஏற்பட்டதால், 2020-2021 நிதியாண்டில் தங்கம் பறிமுதல் குறைந்து காணப்பட்டது.

Gold (Representational Image)
Gold (Representational Image)

ஆனால், கேரள எம்.பி பிரிட்டாஸ், தங்கக் கடத்தல் அதிகமானதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது நிதி அமைச்சர் தெளிவாக பதில் அளிக்கவில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கடத்தப்பட்ட தங்கத்தின் மிக சிறிய அளவுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், வளைகுடா மற்றும் தென் கிழக்கு நாடுகள் இந்தியாவின் தென் மாநிலங்களுக்கு மிக அருகில் இருப்பதால், இங்கே தங்கக் கடத்தல் அதிகமாக நடக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசிய சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டோம்.

``கடத்தல் தங்கம் இடைத்தரகர்கள் மூலம் சந்தைக்குள் நுழைகிறது. இப்படி கடத்தி வரப்படும் தங்கம் மிகக் குறைந்த விலைக்குதான் வாங்கப்படுகிறது. மேலும், இந்தத் தங்கத்திற்கு இறக்குமதி வரி, ஜி .எஸ்.டி போன்ற வரிகள் கட்டப்படுவதில்லை. இப்படி சந்தைக்குள் நுழையும் தங்கம், நேர்மையான வியாபாரிகளுக்கு போட்டியாக அமைகிறது.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

தென் இந்தியாவின் மையமாக சென்னை இருக்கிறது. அதனால் தங்கக் கடத்தல் இங்கே அதிகமாக நடக்கிறது. இங்கே உள்ள சுங்க அதிகாரிகள் அதை திறம்பட கண்டுபிடிப்பதால் சென்னை விமான நிலையத்தில் அதிகமாக பறிமுதல் செய்யப்படுகிறது'' என்று கூறினார்.

தங்கத்திற்கு என்று மோகம் குறையுமோ, அன்றுதான் தங்கக் கடத்தலும் குறையும். ஆனால், தங்கதுக்கான மோகம் நம் நாட்டில் குறைய வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!