Published:Updated:

இனியாவது விழித்துக்கொள்வோம்..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

இனியாவது விழித்துக்கொள்வோம்..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த குடிமக்களின் சார்பில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார் கார்த்திகா அசோக் என்கிற வழக்கறிஞர். ‘‘மூத்த குடிமக்கள் வங்கி எஃப்.டி-யின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தையே நம்பி இருக்கிறார்கள். ஆனால், வங்கி எஃப்.டி-க்கான வட்டி மிகவும் குறைந்து விட்டது. இதனால், அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்’’ என்று வாதிட்டார் வழக்கறிஞர். இந்த வழக்கை அக்கறையுடன் விசாரித்த நீதிபதிகள், ‘‘மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், இது மத்திய அரசின் முடிவு என்பதால், இதில் தலையிட முடியாது’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

கொடிது கொடிது இளமையில் வறுமை என்பது எந்த அளவுக்குச் சரியோ, அதே அளவு சரி, கொடிது கொடிது முதுமையில் வறுமை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, காலம் முழுக்கக் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைத்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தது நம் முந்தைய தலைமுறை. ஆனால், இன்றைய தலைமுறைக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. குறையும் வட்டி வருமானத்துக் கேற்ப தங்கள் அத்தியாவசியமான செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். இதனால், வட்டி வருமானம் அதிகம் கிடைக்கும் திட்டங்களைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய தலைமுறை அனுபவிக்கும் இந்தக் கொடுமையிலிருந்து எதிர்காலத் தலைமுறை கற்றறிய வேண்டிய விஷயம் ஒன்று நிச்சயமாக இருக்கிறது. அது, ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதியைச் (Retirement corpus) சேர்க்க பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரும் முதலீடுகளில் இளமைக் காலம் முதல் முதலீடு செய்யத் தொடங்குவது. மண், பொன் என்கிற இரண்டு முதலீடுகளை மட்டுமே முந்தைய தலைமுறையினர் மிக முக்கியம் என்று இருந்துவிட்டார்கள். வேறு முதலீட்டு வழிகளும் அவர்களுக்குத் தெரியவில்லை.

முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத ஒரு வரப்பிரசாதம் இனிவரும் தலைமுறையினருக்கு இருக்கிறது. அதுதான், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. இந்த இரண்டிலும் யார் வேண்டுமானாலும் எளிதாக முதலீடு செய்ய முடியும். தவிர, நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி வருமானமும் கிடைக்கும் என்பதால், இன்றைய இளைஞர்களில் சிலர் இதில் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP)மூலம் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடாகும் தொகை ரூ.10,000 கோடியை எட்டுமளவுக்குத் தற்போது உயர்ந்திருப்பதே இதற்குச் சான்று.

இனிவரும் தலைமுறையினரில் இன்னும் அதிகமானவர்கள் இந்த முதலீட்டைத் தங்கள் மொத்த முதலீட்டின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்வதன் மூலமே ஓய்வுக்காலத்தில் போதிய அளவு பணம் இல்லையே என்கிற கவலை இல்லாமல் இருக்க முடியும்! வயதான காலத்தில் போதிய அளவு பணம் இல்லையே எனப் பரிதவித்து நிற்பதைவிட, நம் பணத்தைப் பல மடங்கு பெருக்குவதில் இனியாவது விழிப்புடன் செயல்படுவோம்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism