Published:Updated:

ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்: வீழ்ச்சியில் பங்குச்சந்தை; உயரும் தங்கம் விலை!

Stock (Representational Image) ( Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay )

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் சூடுபிடித்துள்ளதால் பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்: வீழ்ச்சியில் பங்குச்சந்தை; உயரும் தங்கம் விலை!

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில் பங்குச் சந்தையில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் சூடுபிடித்துள்ளதால் பங்குச் சந்தையில் சரிவு காணப்படுகிறது.

Published:Updated:
Stock (Representational Image) ( Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay )

பங்குச் சந்தையில் பட்டியலான நிறுவனங்களின் நிதி நிலை வெளிவந்துகொண்டிருந்த நிலையில், பட்ஜெட்டுக்குப் பிறகு ஏற்றம் கண்டுவந்த பங்குச் சந்தையில் வாரத்தில் முதல் நாளான இன்று கடும் சரிவு காணப்படுகிறது.

காதலர் தினமான இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு முதலீட்டாளர்களின் உற்சாகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo: Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,250 புள்ளிகளுக்கும்மேல் இறக்கம் கண்டுள்ளது. ஆட்டோமொபைல், வங்கி, எஃப்.எம்.சி.ஜி, மெட்டல், பவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறை குறியீடுகளும் 2-3 சதவிகித இறக்கத்தில் உள்ளன.

ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக சரிவைச் சந்தித்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பங்குச் சந்தையின் இத்தகைய கடும் இறக்கத்துக்கான காரணம் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும் இருந்துவருகிறது.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உறுப்பினராவதற்கு உக்ரைன் விரும்புகிறது. ஆனால், அண்டை நாடான ரஷ்யா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேலும் உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராக ஒரு லட்சத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை ஆயுதங்களுடன் உக்ரைன் எல்லையில் நிறுத்தியிருக்கிறது. உக்ரைனும் ரஷ்யா மீது எதிர் தாக்குதல் நடத்த தயாராகிவருவதாகத் தெரிகிறது. இதனால் எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் இருநாடுகளுக்கிடையே நிலவுகிறது.

இந்த இரு நாடுகளின் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் செயல்பட்டுவருகிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை
share market

இதனால் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. பங்குச் சந்தைகள் இறக்கம் கண்ட நிலையில் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளைத் தங்கத்தில் குவித்துவருகின்றனர்.

இதனால் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1884 டாலருக்கு உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு அவுன்ஸ் 24 டாலராக உயர்ந்துள்ளது. போர் பதற்றம் மட்டுமல்லாமல் கச்சா எண்ணெய்யின் விலையும் அதிகரித்துவருவதால் தங்கம், வெள்ளி உலோகங்களின் விலை வரும் வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism