Published:Updated:

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலித்தால் வழக்கு தொடுக்கலாம்!

எஸ்.சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சரோஜா

சேவைக் கட்டணம்

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம் வசூலித்தால் வழக்கு தொடுக்கலாம்!

சேவைக் கட்டணம்

Published:Updated:
எஸ்.சரோஜா
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.சரோஜா

இனிமேல் ஹோட்டல்களில் சாப்பிட்ட பின் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம். இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு தலில், ஹோட்டல்களில் சாப்பிடும் மக்களிடம் உணவுக்கான கட்டணத்துடன் சேர்த்தோ, வேறு பெயர்களிலோ சேவைக் கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலித்தால், அதை நீக்கச் சொல்லலாம். ஹோட்டல்கள் அதை நீக்காவிட்டால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலில் சொல்லப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு தொடுப்பது தொடர்பாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் அமைப்பின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் எஸ்.சரோஜாவிடம் கேட்டோம்.

எஸ்.சரோஜா
எஸ்.சரோஜா

‘‘2016-17 காலகட்டத்திலேயே மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் சேவை வரி குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், கட்டாயப்படுத்தி நுகர்வோரிடம் சேவை வரி வாங்கக் கூடாது. மக்கள் விருப்பப் பட்டால் கொடுக்கலாம். மக்களுக்கு விருப்ப மில்லை எனில் கொடுக்காமலும் இருக்கலாம் என அறிவித்தது. மக்களில் பெரும்பாலானோர் கட்டண ரசீதைக் கவனிப்பதில்லை. இந்நிலையில், தொடர்ந்து ஹோட்டல்கள் சேவை வரியை வசூலிப்பதால், தற்போது இது குறித்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹோட்டல்களில் சேவை வரி விதிக்கப்பட்டால், மக்கள் அதை நீக்கச் சொல்லலாம். நீக்க மறுக்கும்பட்சத்தில் தேசிய நுகர்வோர் உதவி எண் 1915-ஐ அழைத்து புகார் செய்யலாம்.

முறையற்ற முறையில் வணிகம் செய்வதாக, உரிய கட்டண ரசீதைக் கொடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கும் பதிவு செய்யலாம். ஆன்லினிலும் புகார் தெரிவிக்கும் வசதி உள்ளது. வழக்கு தொடுக்க நினைப் பவர்கள் ஒரு வழக்குரைஞரின் உதவியுடன் வழக்கைத் தாக்கல் செய்யலாம்’’ என்றார்.