Published:Updated:

`ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!' - RBI அறிவிப்பால் ஏற்றத்தில் பங்குச் சந்தை

RBI
News
RBI ( Photo: Vikatan / Ashok kumar.D )

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த வேலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்க மே 2020-ல் கடைசியாக ரிசர்வ் வங்கி தனது வட்டியை மாற்றியது. கடந்த பல மாதங்களாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமலேயே உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கூடுகிறது. இதன்படி, ரிசர்வ் வங்கி கொள்கைக் கூட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளான இன்று, ரெப்போ விகிதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

ஏனெனில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ஆர்.பி.ஐ கடந்த எட்டு நிதிக் கொள்கை கூட்டங்களில் எவ்விதமான வட்டி மாற்றங்களையும் செய்யாமல் தொடர்ந்து ஓரே நிலையில் வைத்துள்ளது.

சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தற்போது இன்று ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலோ அல்லது ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலோ பெரும் மாற்றத்தை அது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று மும்பையில் நடந்த நடப்பு நிதி ஆண்டுக்கான ஒன்பதாவது நிதிக் கொள்கை கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி ஏற்படுத்தவில்லை.

கூட்டத்தின் முடிவில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர், ``வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகத் தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாக நீடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த வேலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை அதிகரிக்க மே 2020-ல் கடைசியாக ரிசர்வ் வங்கி தனது வட்டியை மாற்றியது. கடந்த பல மாதங்களாக ரெப்போ விகிதம் மாற்றப்படாமலேயே உள்ளது.

வட்டி விகிதம்
வட்டி விகிதம்

ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ?

ரிசர்வ் வங்கியிடம் மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி விகிதம். ரெப்போ வட்டி விகிதம் ஏற்ற இறக்கத்திற்கேஏற்ப சாதாரண மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் மாறுபடும். அதே போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டிதான் ரிவர்ஸ் ரெப்போ. இந்த வட்டி விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைப்பார்கள். அதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆண்டில் சில்லரைப் பணவீக்க விகிதம் 5.3 சதவிகிதமாகவும், ஜி.டி.பி வளர்ச்சியானது 9.5% என்கிற அளவில் இருக்கும் என கணித்திருப்பதால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் பங்குச் சந்தை முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ் 851 புள்ளிகளும், நிஃப்டி 242 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் ஆகிவருகிறது.