Published:Updated:

கொரோனாவால் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு..! ரிசர்வ் வங்கி தகவல்...

குடும்ப நிதி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப நிதி சேமிப்பு

S A V I N G

கொரோனாவால் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு..! ரிசர்வ் வங்கி தகவல்...

S A V I N G

Published:Updated:
குடும்ப நிதி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
குடும்ப நிதி சேமிப்பு

இந்தியர்களின் குடும்ப நிதி சேமிப்பு இந்த கொரோனா நோய்த்தொற்று கட்டத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குடும்ப நிதி சேமிப்பு என்பது மக்கள் தமது சேமிப்புக் கணக்குகள், காப்பீட்டுப் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் மொத்தமாக சேமிக்கும் தொகையைக் குறிப்பதாகும். இந்த வீட்டு நிதி சேமிப்பானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணிசமான பங்கைக் கொண்டது.

கொரோனாவால் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு..! ரிசர்வ் வங்கி தகவல்...

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நாட்டின் ஜி.டி.பி-யில் 21 சதவிகிதமாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு, செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவிகிதமாகக் குறைந்தது. அது டிசம்பர் காலாண்டில் 8.2 சதவிகித மாகக் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. சென்ற ஜூன் காலாண்டில் ரூ.8,15,886 கோடியாக இருந்த வீட்டு நிதி சேமிப்பு, செப்டம்பர் காலாண்டில் ரூ.4,91,906 கோடியாகவும், டிசம்பர் காலாண்டில் ரூ.4,44,583 கோடியாகவும் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இதுபோன்ற தரவுகளில் இருந்து அறிய முடிகிறது. ஒரு பக்கம் ஊரடங்கு காரணமாகப் பணவரவு குறைவது மற்றும் மற்றொரு பக்கத்தில் மிக அதிகமான விலைவாசி ஏற்றம் காரணமாக மக்களின் சேமிப்பு குறைந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கியின் தரவுகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலத்திலாவது இந்த சேமிப்பு உயரட்டும்!