Published:Updated:

சிறுகடன்கள்... மாதத் தவணை செலுத்துவதில் முன்னேற்றம்..! பொருளாதாரம் மேம்படுகிறதா..?

கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்

L O A N

சௌ.சிவகுமார்

பொதுவாக, நாட்டின் பொருளாதார நிலையும் தனிநபர்களின் நிதிநிலையையும் பிரதிபலிப்பதாக சிறு கடன்கள் (retail loans) இருக்கின்றன. சிறு கடன்கள் அதிகமாக வாங்கப்படுகின்றன அல்லது அவற்றின் தவணைகள் சரியான தேதியில் கட்டப்படுகின்றன எனில், நாட்டின் பொருளாதார நிலையும் தனிநபர்களின் நிதிநிலையும் மேம்பட்டிருக்கிறது எனலாம்.

கடன்
கடன்

கொரோனா பாதிப்பால் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்ற சிறுகடன்களைத் திரும்பச் செலுத்துவதில் பலரும் தவணைக் கட்டத் தவறினார்கள். இப்போது நிலைமை சீராகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நம் நாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் பேங்க் போன்றவற்றில் சிறு கடன்களைத் தாமதம் இல்லாமல் கட்டுவது சுமார் 97 சதவிகிதமாக உள்ளது. இந்த நிலை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்குகளில் சுமார் 93 சதவிகிதமாக உள்ளது. ஏறக்குறைய கோவிட் 19 வைரஸ் பரவலுக்கு முந்தையை நிலைக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரானா ஊடரங்கு கிட்டத்தட்ட முழுவதும் விலக்கிக்கொள்ளப் பட்டிருக்கும் நிலையில் நாட்டின் வணிகம், தொழில், பொருளாதார நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன. இதனால், வரும் மாதங்களில் சிறு கடன்களைத் திரும்பக் கட்டுவதில் நிலைமை இன்னும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.