சாதனைகளை நிகழ்த்த வயது தடையல்ல என்பதெல்லாம் சரிதான். ஆனால், வயது என்ன ஆகிறது என்பதை யெல்லாம் தாண்டி, தனக்கு என்ன தெரியும், தான் நினைப்பதைச் செய்து வெற்றி பெற மனமும் உடலும் ஒத்துழைக்குமா என்றெல்லாம் யோசித்து களத்தில் இறங்க வேண்டும். இல்லையென்றால், மதுரையைச் சேர்ந்த சங்கர பாண்டியன் நிலைதான் வந்துசேரும் (பெயர், ஊர் மாற்றப் பட்டுள்ளது). அவருக்கு அப்படி என்ன சிக்கல் என்பதை அவரே சொல்லக் கேட்போம்.

“எனக்கு வயது 61. வங்கியொன்றில் பணியாற்றி மூன்று ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றேன். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கடந்த ஆண்டு முதல் வேலை பார்த்து வருகிறான். ஆனாலும், நான் ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சிகரமாக ஆக்கிக் கொள்ளத் தெரியாமல் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கிறேன்.

எனக்கு சின்ன வயது முதலே பெரிய முதலாளி ஆக வேண்டும் என ஆசை. என் நண்பர் ஒருவர் 45 வயதிலேயே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு, துணிச்சலாகத் தொழிலில் இறங்கி பெரிய மில் ஓனராகிவிட்டார். அவரைவிட பிசினஸ் ஆர்வம் எனக்கு அதிகம் இருந்தும் வேலையை விட்டுவிட்டு ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது.

நான் ஓய்வு பெற்ற சமயத்தில் என் நண்பரை எதேச்சையாகச் சந்தித்தேன். ‘தொழிலில் ஜெயிக்க வயது ஒரு பொருட்டே அல்ல, சரியான திட்டம் இருந்தால் போதும்’ என அவர் சொன்னது என் மனதில் தூங்கிக் கிடந்த பிசினஸ் ஆசையை மீண்டும் தட்டியெழுப்பி ஓடச் செய்துவிட்டது. ‘எக்ஸ்போர்ட் பிசினஸில் இறங்கினால் ஈஸியா ஜெயிக்கலாம்’ என்று டிவி-யில் ஆலோசகர் ஒருவர் சொல்ல, உடனே களத்தில் இறங்கினேன்.

‘எக்ஸ்போர்ட் பிசினஸில் நிறைய நெளிவுசுழிவுகளை அறிந்தால்தான் ஜெயிக்க முடியும். இப்படித் திடீரென இறங்க வேண்டாம்’ என என் மகனும் மகளும் எச்சரித்தார்கள். ஆனால், நான் எதையும் காதில் போட்டுக்கொள்ள வில்லை. லோக்கலில் சில விவசாய விளைபொருள்களை வாங்கி சில நாடு களுக்கு ஏற்றுமதி செய்தேன். கொஞ்சம் லாபம் வரவே, எனக்கு தைரியம் வந்துவிட்டது. அதிரடியாகப் பெரிய லெவலில் இறங்கினேன். சேமிப்பில் இருந்த 15 லட்சம் ரூபாயையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி பர்ச்சேஸ் செய்து பல நாடுகளுக்கும் அனுப்பினேன்.

நான் அனுப்பிய பொருள்களில் பெரும்பாலானவை தரமானதாக இல்லை எனத் திரும்ப அனுப்பப்பட்டன. ஆறே மாதங்களில் எனக்கு ரூ.12 லட்சம் இழப்பு ஏற்பட்டுப்போனது. மீண்டும் வட்டிக்குக் கடன் வாங்கி ரூ.10 லட்சத்தைப் போட்டேன். மீண்டும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. திரும்பத் திரும்ப கடன் வாங்கி முயற்சி செய்ததில் இன்றைக்கு மொத்தமாக ரூ.14 லட்சம் வரை கடனாகிவிட்டது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகிறேன். நான் நஷ்டப்பட்ட விஷயம் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரியாது. சொன்னால் குடும்பத்தில் பிரச்னை வெடிக்கும் என்ற பயம். திரும்பவும் ரூ.5 லட்சம் கடனை வாங்கிப்போட்டு விட்டதையெல்லாம் பிடித்து விடலாம் என்றுகூடத் தோன்றுகிறது.

சேர்த்து வைத்த பணமெல்லாம் போய், இன்று 14 லட்சம் கடனுக்கு வட்டி செலுத்தி வரும் சூழலில் இருக்கிறேன். என் மனைவிடம் உள்ள நகைகளை விற்றால், ரூ.10 லட்சம் தேறும். ஆனால், என் கடன் விஷயத்தை என் மனைவி யிடம் சொல்ல அச்சமாக இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் மகன் தலையில் கடனைச் சுமத்தவும் மனம் வரவில்லை. குடியிருக்கும் வீடு தவிர வேறு சொத்துகள் இல்லை. உடலும் மனமும் சோர்ந்துபோய்விட்டது. இந்தச் சிக்கலிலிருந்து நான் மீண்டு வர நல்லதொரு வழியைக் காட்டுங்கள்.”

இனி இவருக்கான நம்முடைய ஆலோசனைகள்...

“ஓய்வுக்காலத்தில் பிசினஸ் ஆரம்பிக்கக் கூடாது என்பதில்லை. ஆனால், ஆரம்பிக்கும் தொழிலில் நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது என ஆராய்வது மிக முக்கியம். நன்கு பரிச்சயமான தெரிந்த தொழில்களைத் தேர்வு செய்வது ரிஸ்க்கைக் குறைக்க உதவும்.

உதாரணமாக, வங்கிப் பணியில் பணியாற்றிய நீங்கள், அனுபவத் தைக் கொண்டு லோன் பெற்றுத் தருதல் உள்ளிட்ட ஃபைனான் ஷியல் சர்வீஸ் சார்ந்த தொழிலில் இறங்கியிருந்தால், உங்களுக்குச் சிக்கல் வந்திருக்காது. இந்தத் தொழிலுக்குப் பெரிய முதலீடும் அவசியமில்லை. தெரியாத துறையில் இறங்குகிறீர்கள் எனில், தகுந்த ஆலோசகரை நியமித்துக்கொள்ள வேண்டும். அல்லது ஆரம்பிக்கும் தொழிலில் நல்ல அனுபவம் மிக்கவரை பங்குதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பணியாற்றும் காலத்தில் பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களே தவிர, ஏற்றுமதி தொழிலில் ஈடுபட வேண்டும் என நினைக்க வில்லை. நீங்கள் ஓய்வுபெற்ற பிறகுகூட என்ன பிசினஸ் செய்வது என்பது குறித்த தெளிவான இலக்கோ, திட்டமோ இல்லை. எதேச்சையாக உங்கள் நண்பரைப் பார்த்த பிறகு, அதிரடியாகக் களத்தில் இறங்கி யுள்ளீர்கள். அதுதான் உங்கள் தோல்விக்குக் காரணம்.

என்ன தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்பதை டிவியில் பார்த்து முடிவு செய்தேன் என நீங்கள் சொல்வது வியப்பாக உள்ளது. நாம் பார்க்கும் கேட்கும் விஷயங்கள் நமக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர, எடுத்த எடுப்பில் பல லட்சம் ரூபாயைப் போட்டு ஆரம்பிக்கும் தொழில் சார்ந்த முடிவை எடுக்க உதவாது.

ஒரு பெட்டிக்கடை வைக்கவே பல நுட்பங்களை ஆராய வேண்டும் என்கிறபோது, கடல் போன்ற ஏற்றுமதித் துறையில் துளி அனுபவமும் இல்லாமல் ஓய்வுக்கால நிதியை முதலீடு செய்ததுடன், கடன் வாங்கியும் கையைச் சுட்டுக்கொண்டு உள்ளீர்கள்.

உங்கள் நண்பர் மில் ஓனராக ஜெயித்தார் என்றால், தொழிலில் அவருக்கான தெளிவு, பின்புலம், மெனக்கெடல், அனுபவமிக்க வர்களின் அறிவைப் பயன் படுத்திக்கொள்ளுதல் என நிறைய அம்சங்களை அவர் செய்திருப்பார். அப்படி எதுவுமே செய்யாமல் அவரைப் போல, வெற்றி கிடைக்க வேண்டும் என எப்படி நினைத்தீர்கள்..? சரி, நடந்த தவறுகளைச் சரி செய்து கடன் சிக்கலில் இருந்து மீண்டுவரும் வழிகளைப் பார்ப்போம்.

நீங்கள் மேற்கொண்டு கடன் வாங்க வேண்டாம். முதலில் இந்த பிசினஸை நிறுத்திவிட்டு, வெளியே வாருங்கள். உங்கள் மனைவி, மகனிடம் உங்கள் நிலையை எடுத்துச் சொல்லுங்கள். இதுதான் உங்கள் பிரச்னையைத் தீர்க்க முதல் வழி. அடுத்து, கடன் கொடுத்தவர் களிடம் பேசி வட்டியைத் தவிர்த்து அசலை மட்டும் செட்டில்மென்ட் செய்ய முயற்சி எடுங்கள். மனைவியிடம் பேசி தேவைக்குப் போக உள்ள நகைகளை விற்றும், பற்றாக்குறைக்கு மகன், மகளிடம் அவர்கள் பெயரில் லோன் எடுத்துத் தரச் சொல்லியும் பணத்தைத் திரட்டி கடனைச் செலுத்தி முடியுங்கள்.

இயல்பாகவே தொழில் ஆர்வம் இருப்பதால், உங்களால் நீங்கள் பழகிய துறையில் சிறப்பாகச் செயல்பட முடியும். எனவே, வங்கிகள் நிதி நிறுவனங்களோடு இணைப்பை உருவாக்கிக் கொண்டு ஃபைனான்ஷியல் கன்சல்டிங் சர்வீஸ் சார்ந்த பணிகளை எடுத்துச் செய்யுங்கள்.

மக்களிடம் இதற்கான தேவை இருப்பதால், உங்களால் சிறப்பான வருமானத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த வருமானத்தைக்கொண்டு பிள்ளைகள் வாங்கித் தந்த கடனைக் கட்டி முடியுங்கள். இன்னும் முனைப்புடன் திட்டமிட்டுச் செயல்பட்டால் இந்தத் துறையில் பெரிய அளவில் ஜெயிக்கலாம். முடிந்தவரை ஓய்வுக்காலத்தை சுமையாக்கிக்கொள்ளாமல் அமைத்துக் கொள்வது நல்லது.”

தொகுப்பு: கா.முத்துசூரியா

நீங்களும் கடன் சிக்கலில் சிக்கித் தவிக்கிறீர்களா..? உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் finplan@vikatan.com மெயிலுக்கு அனுப்புங்கள். கடனிலிருந்து மீண்டுவரும் ஆலோசனைகளைப் பெறுங்கள். தொலைபேசி எண் மிகவும் முக்கியம்.

அவசியம் அறிய வேண்டிய ஐந்து பாடங்கள்!

1. இளமைக் காலத்தில் ரிஸ்க் எடுக்க முடியும். ஓய்வுக் காலத்தில் பிசினஸ் ஆரம்பிக்கும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம்.

2. பிசினஸ் முடிவுகளை எடுக்கும்போது குடும்ப உறுப்பினர்களை ஆலோசித்துச் செயல்பட வேண்டும்.

3. சிக்கல் உருவாகிவிட்டதை அறிந்தபிறகு குடும்பத்தினரிடம் உண்மை நிலையைச் சொல்வதே பாதுகாப்பானது.

4. ஓய்வுக்காலத்துக்கான நிதியைத் தொழிலில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது தவறு.

5. பிசினஸில் ஜெயிக்க ஆசை, ஆர்வம் மட்டும் போதாது; அனுபவம் மிக முக்கியம்.

பிட்ஸ்

கடந்த பிப்ரவரியில் நிறுவனங் களின் வாங்குதல் மற்றும் இணைத்தல் நடவடிக்கைகள் மூலம் 4 பில்லியன் டாலர் (ரூ.28,000 கோடிக்குமேல்) அளவுக்கு நடந்துள்ளது. டாடா நிறுவனம் பிக் பாஸ்கெட்டில் ரூ.1,357 கோடி முதலீடு செய்திருப்பது முக்கிய விஷயமாகும்!