Published:Updated:

ஶ்ரீதர் வேம்புவின் சாதனை... பில்லியன் டாலர் நிறுவனமாக மாறிய ஜோஹோ..!

ஸ்ரீதர் வேம்பு

தற்போது பெரும் தொழில் வளர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள ஜோஹோ நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு வேகமான நெட்வொர்க்கை வழங்க ஐந்தாண்டுகளில் உலகம் முழுவதும் 100 பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் நிறுவி செயல்படுத்த உள்ளது.

ஶ்ரீதர் வேம்புவின் சாதனை... பில்லியன் டாலர் நிறுவனமாக மாறிய ஜோஹோ..!

தற்போது பெரும் தொழில் வளர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள ஜோஹோ நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு வேகமான நெட்வொர்க்கை வழங்க ஐந்தாண்டுகளில் உலகம் முழுவதும் 100 பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் நிறுவி செயல்படுத்த உள்ளது.

Published:Updated:
ஸ்ரீதர் வேம்பு

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தக் காலத்தில், சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிரபல இந்திய சாஃப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன், 2021-ம் ஆண்டு வருடாந்தர வருவாயில் 1 பில்லியன் டாலர் மைல்கல்லை எட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,000 கோடிக்கு மேல் ஆகும். ஜோஹோ நிறுவனத்தின் இந்த வளர்ச்சி சாப்ட்வேர் உலகில் அதன் போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜோஹோ | Zoho
ஜோஹோ | Zoho

மேலும், இந்திய ஐ.டி பிசினஸ் ஆண்டுக்கு ஆண்டு 77% அடிப்படையில் வளர்ந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிசினஸில் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தாலும், இந்திய பிசினஸ் மிக வேகமாக வளர்ந்து வருகிறது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த  நிறுவனத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக இந்தியா மாறலாம்’’ என ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ ஶ்ரீதர் வேம்பு தெரிவித்திருக்கிறார்.

ஜோஹோ நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிசினஸ் செய்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் 80 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஜோஹோ நிறுவனம் பிசினஸ் புராடக்ட்ஸ்களாக, பிசினஸ் சாப்ட்வேர், கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் சாப்ட்வேர், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஜி.எஸ்.டி புகார் சார்ந்த மென்பொருள் எனப் பல மென்பொருள் சேவைகளை அளித்து வருகிறது.

ஶ்ரீதர் வேம்புவின் சாதனை... பில்லியன் டாலர் நிறுவனமாக மாறிய ஜோஹோ..!

ஜோஹோ நிறுவனத்தின் வருடாந்தர பயனர் மாநாடான `ஜோஹாலிக்ஸ் இந்தியா’ நிகழ்ச்சியில் பேசிய சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு,  ``2021-ம் ஆண்டைவிட 2022-ம் ஆண்டில் உலக நிதி வளர்ச்சி குறைந்திருந்தாலும் எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு போர்ட்போலியோ மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் நாங்கள் சேவை வழங்கியது நிறுவனத்துக்கு லாபம் பெற உதவியது. தரமான சாஃப்ட்வேர்களை மலிவு விலையில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை வழங்கினோம்; வரும் காலங்களிலும் வழங்குவோம்” என்று பேசி இருக்கிறார்.

ஜோஹோ நிறுவனம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் 11,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் லாபகரமாக இயங்கி வருகிறது.

ஸ்ரீதர் வேம்பு | ஜோஹோ | Zoho
ஸ்ரீதர் வேம்பு | ஜோஹோ | Zoho

ஜோஹோ அதன் மென்பொருள்களுக்கு சொந்த டேட்டா சென்டர்களைக் கொண்டுள்ளது. இதுவரை உலகெங்கிலும் 12 மையங்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியாவில் இரண்டு மையங்கள் அடங்கும்.

மென்பொருள்களில் நெட்வொர்க் இயங்குவதற்காக இதுவரை 14 நெட்வொர்க் பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் (PoPs) கொண்டுள்ளது. தற்போது பெரும் தொழில் வளர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள ஜோஹோ நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு வேகமான நெட்வொர்க்கை வழங்க ஐந்தாண்டுகளில் உலகம் முழுவதும் 100 பாயின்ட்ஸ் ஆஃப் பிரசன்ஸ் நிறுவி செயல்படுத்த உள்ளது.

மேலும், பிளாக் செயின் மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியில் நமது இந்திய மொழிகளை உள்ளடக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கோவிட்டுக்கு முன் சென்னை, தென்காசி ஆகிய இரு இடங்களில் செயல்பட்டுவந்த இந்த நிறுவனத்தின் அலுவலகம் தற்போது மதுரை, கோவை, திருச்சி எனப் பல ஊர்களிலும் செயல்பட்டு வருவதுடன், இதன் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 11,000-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது!