Published:Updated:

பங்குச் சந்தை முதலீடு... நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட லாபம் பார்ப்பது எப்படி?

முதலீடு

கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், பணவீக்கத்தைவிட சில சதவிகிதம் அதிகமான வருமானம் கிடைக்கும் திட்டங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே... என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு... நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட லாபம் பார்ப்பது எப்படி?

கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், பணவீக்கத்தைவிட சில சதவிகிதம் அதிகமான வருமானம் கிடைக்கும் திட்டங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே... என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

Published:Updated:
முதலீடு

இன்றைக்கு எல்லோருடைய எதிர்பார்ப்பு என்ன? கையில் உள்ள பணத்துக்கு பணவீக்கத்தைவிட கொஞ்சம் அதிகமான வருமானம் கிடைக்க வேண்டும். அதே சமயத்தில், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழந்துவிடக் கூடாது என்பதுதானே!

இதற்கு எதில் முதலீடு செய்யலாம், அப்படிப்பட்ட ஒரு முதலீட்டில் முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்கிற கேள்விகள் எல்லோர் மனதிலும் உண்டு.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்

இன்றைய தேதியில், பணவீக்கம் என்பது 7 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. ஆனால், எஃப்.டி போன்ற மூலதனத்துக்கு உத்தரவாதம் தரும் திட்டங்கள் மூலம் 5.5% வட்டி மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், பணவீக்கத்தைவிட சில சதவிகிதம் அதிகமான வருமானம் கிடைக்கும் திட்டங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.

முதலீட்டாளர்களின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற மாதிரியான ஒரு கூட்டத்தை நாணயம் விகடனும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடத்தவுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`இ.டி.எஃப் & இன்டெக்ஸ் ஃபண்ட் லாபங்கள்’ என்கிற தலைப்பில் ஜூம் இணையதளம் மூலம் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இ.டி.எஃப் (Exchange Traded Fund) மற்றும் இன்டெக்ஸ் ஃபண்டுகள் என்றால் என்ன, யாரெல்லாம் இதில் முதலீடு செய்யலாம், இந்தத் திட்டத்தில் நீண்ட காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு, இந்தத் திட்டத்தில் விதிக்கப்படும் வரி விதிமுறைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லப்படும்.

பணவீக்கம்
பணவீக்கம்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு பிராந்திய மேலாளர் ஜீவன் தரியன் கோஷி, நிதித் துறை நிபுணர் ஏ.கே.நாராயண் ஆகியோர் இ.டி.எஃப் & இன்டெக்ஸ் ஃபண்ட் பற்றி விளக்கமாகப் பேசவிருக்கிறார்கள்.

கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம்தான். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை https://bit.ly/NV-ICICIPru சொடுக்கி பதிவு செய்துகொள்வது அவசியம்!

நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட அதிக லாபம் தரும் திட்டம் குறித்து இலவசமாகவே விளக்கிச் சொல்லும் இந்தக் கூட்டத்தில் விகடன் வாசகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.