Published:Updated:

ஆரம்ப முதலீடு ரூ.20,000; இன்றைய டேர்ன் ஓவர் ரூ.20,000 கோடி... அசத்தும் நிறுவனம்! | #திருப்புமுனை

இமாமி

எந்தத் தொழில் செய்யலாம் என யோசித்து குறைந்த நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் துறையான காஸ்மெடிக்ஸில் தடம்பதிக்க இருவரும் முடிவெடுத்தனர். ரூ.20,000 ஆரம்ப முதலீட்டில் 100 சதுர அடியில் கெம்கோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது...

ஆரம்ப முதலீடு ரூ.20,000; இன்றைய டேர்ன் ஓவர் ரூ.20,000 கோடி... அசத்தும் நிறுவனம்! | #திருப்புமுனை

எந்தத் தொழில் செய்யலாம் என யோசித்து குறைந்த நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் துறையான காஸ்மெடிக்ஸில் தடம்பதிக்க இருவரும் முடிவெடுத்தனர். ரூ.20,000 ஆரம்ப முதலீட்டில் 100 சதுர அடியில் கெம்கோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது...

Published:Updated:
இமாமி

இமாமி என்கிற நிறுவனத்தை, 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனால், போரோப்ளஸ், ஜண்டு பாம், பேர் அண்ட் ஹெண்ட்சம் உள்ளிட்ட பிராண்டுகள் இன்றைய இளைஞர்களிடம் படுபாப்புலர். இந்த பிராண்டுகள் அனைத்தும் இமாமி நிறுவனத்துக்குத்தான் சொந்தம் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

தற்போதைய ஸ்டார்ட் அப் உலகில் சரியான இணை நிறுவனர்கள் இருந்தால் மட்டுமே முதலீடு கிடைக்கும் என்பது தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். சொந்தத் தொழில் தொடங்குவது என்பது எப்போதும் ரிஸ்க் என்று சொல்லியே நாம் வளர்க்கப்பட்டிருப்போம். அதுவும் நண்பர்களுடன் இணைந்து கூட்டாகத் தொழில் என்பதெல்லாம் நடக்காத விஷயம். ஆனால், 1974-ம் ஆண்டிலே இரு நண்பர்கள் இணைந்து தொழில் தொடங்கியுள்ளனர். ராதே ஷியாம் அகர்வால் மற்றும் ராதே ஷியாம் கோயங்கா ஆகிய இருவரும் தொடங்கிய நிறுவனம்தான் இமாமி.

ராதே ஷியாம் அகர்வால், ராதே ஷியாம் கோயங்கா
ராதே ஷியாம் அகர்வால், ராதே ஷியாம் கோயங்கா

பெயர்கள் ஒரே குடும்பம் போல தோன்றினாலும் இருவரும் நண்பர்கள். ராதே ஷியாம் அகர்வாலின் குடும்பம் வசதியான குடும்பம்தான். தொழில்கள், நிலங்கள் என இவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், இவரின் அப்பா எடுத்த சில தவறான முடிவுகள் காரணமாகத் தொழிலில் கடும் நஷ்டம். இதனால் அனைத்துச் சொத்துகளையும் விற்க வேண்டிய சூழல். அதனால் பணம் குறித்த சிக்கல், கூட்டுக் குடும்பம் பிரிந்தது.

அப்பா, தொழிலில் தோல்வி அடைந்துவிட்டதால், தொழிலுக்குப் போகக் கூடாது என்பது ஒரு ரகம். ஆனால், அப்பா தோல்வி அடைந்த இடத்தில்தான் வெற்றி அடைய வேண்டும் என்பது இரண்டாவது ரகம். அதனால் தொழில் தொடங்க வேண்டும் என்னும் வேட்கை ஆர்.எஸ்.அகர்வால்க்கு இருந்துகொண்டே இருந்தது. சி.ஏ முடித்த பிறகு பிர்லா குழுமத்தில் கம்பெனி செகரெட்டரியாக வேலைக்குச் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து துணைத் தலைவர் என்னும் நிலைமைக்கு உயர்ந்தார்.

அதே நிறுவனத்தில் ஆர்.எஸ்.கோயங்கா முக்கியமான பொறுப்பில் இருந்தார். தொழில் குறித்து இருவர் மட்டுமே உரையாடுவார்கள். இது குறித்து குடும்பம் உள்ளிட்ட யாருக்கும் தெரியாது.

பிர்லா குழுமத்தில் ஐந்தாண்டுகள் முடிவுற்றபோது வேலையைவிட முடிவெடுத்தார் அகர்வால். அலுவலகம் கொடுத்த கார், வீடு இதர சலுகைகள் எனப் பல வசதிகள் இருந்தன. ஆதித்யா பிர்லாவிடம் ராஜினாமா கொடுத்தபோது, அவர் பதவி உயர்வு காத்திருக்கிறது எனக் கூறினார். ஆனால், ``உங்கள் ஆசியைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்’’ எனச் சொல்லி வேலையைவிட்டார்.

அதே சமயம், ``நாளைக்கு வந்து சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என ஆதித்யா பிர்லா கூறினார். ஆனால், ஓர் ஆண்டு செய்த வேலைக்கு ஒவ்வொரு வாரமும் செக் வழங்கப்பட்டது. ஆனால், எந்த செக்கையும் அவர் வங்கியில் டெபாசிட் செய்யவில்லை.

ஆரம்ப முதலீடு ரூ.20,000; இன்றைய டேர்ன் ஓவர் ரூ.20,000 கோடி... அசத்தும் நிறுவனம்! | #திருப்புமுனை

இந்த நிலையில், எந்தத் தொழில் செய்யலாம் என யோசித்து குறைந்த நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு இருக்கும் துறையான காஸ்மெடிக்ஸில் தடம் பதிக்க இருவரும் முடிவெடுத்தனர். ரூ.20,000 ஆரம்ப முதலீட்டில், 100 சதுர அடியில் கெம்கோ கெமிக்கல்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது.

எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் நடத்துவது சாதாரணம் விஷயமல்ல என்பது இந்த இருவருக்கும் நன்கு தெரியும். பெரிய அளவில் முதலீடு வைத்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் இந்திய சந்தையில் இருக்கும்போது அவர்களுடன் போட்டியிட வேண்டும் எனில், புதுமை இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் நிறையவே மெனக்கெட்டார்கள்.

இமாமி வேனிசின் க்ரீம் மற்றும் இமாமி டால்கம் பவுடர் எனும் இரு புராடக்ட்டுகளை அறிமுகம் செய்தார்கள். இதற்காக பிரான்ஸிஸ் இருந்து வாசனையும், பேக்கேஜிங் டிசைனை ஜப்பானில் இருந்து கொண்டு வந்தார்கள். இதனால் அடுத்த இரு ஆண்டுகளில் வானிஷிங் க்ரீம் 22% சந்தையைப் பிடித்து முதல் இடத்திலும் டால்கம் பவுடர் இரண்டாம் இடத்திலும் இருந்தது.

சொந்த வளர்ச்சி அல்லாமல் நிறுவனங்களை இணைத்துக் கொள்வதன் மூலமும் வளர்ச்சி அடைந்தது இமாமி. போரோப்ளஸ் மற்றும் ஹிமானி ஆகிய இரு நிறுவனங்களை இணைத்துக் கொண்டது. 100 ஆண்டுகளுக்குமேல் செயல்பட்ட ஹிமானி, கிழக்கு இந்தியாவில் பிரபலமான நிறுவனம். தவிர, கொல்கத்தாவில் ஆலையும் இருந்ததால், இந்த ஆலையை வாங்கியது இமாமி.

ஆரம்ப முதலீடு ரூ.20,000; இன்றைய டேர்ன் ஓவர் ரூ.20,000 கோடி... அசத்தும் நிறுவனம்! | #திருப்புமுனை
''கொல்கத்தாவில் இருந்து, எந்தப் பின்புலமும் இல்லாமல், ரூ.20,000 கோடிக்கு மேலான நிறுவனத்தைக் கட்டமைத்திருப்பது சாதாரண வெற்றி அல்ல. அது மிகப் பெரிய திருப்புமுனை!''

அடுத்த முக்கியமான நிறுவனம் ஜண்டு. இந்த குழுமத்தில் ஜண்டு பாம் உள்ளிட்ட நான்கு பிராண்டுகள் இருந்தன. சமீபத்தில்கூட டெர்மிகூல் பிராண்டினை வாங்கியது. இந்தப் பிரிவில் நைசில் முதலாவது இடத்திலும், நவரத்னா இரண்டாம் இடத்திலும், டெர்மி கூல் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள டெர்மி கூல் பிராண்டினை வாங்கியதைத் தொடர்ந்து முதல் இடத்துக்கு உயர்ந்தது.

அழகுசாதனப் பொருள்கள் என்றாலே பெண்களுக்கானது என்பதுதான் சந்தையின் எண்ணம். ஆனால், ஆண்களுக்கான அழகுசாதனப் பொருள்களே சந்தையில் இல்லை. சந்தையில் செய்யப்பட்ட ஆய்வில் விற்பனையாகும் பெண்களுக்கான அழகுசாதன பொருள்களில் 30% அளவுக்கு ஆண்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்தது.

இமாமியின் பிசினஸ் மேம்பாட்டுத் தலைவர் ஹரிகிருஷ்ணன் குப்தா, தென் இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும்போது பல ஆண்கள் பெண்களுகளுக்கான புராடக்டடு்களை பயன்படுத்தினார்கள் என்பதைக் கண்டறிந்தார். அதே போல, ஆந்திராவில் உள்ள பாய்ஸ் ஹாஸ்டல் அருகே இருக்கும் கடையில் அதிகளவுக்கு க்ரீம்கள் விற்பனையாகின. ஆனால், ஆண்கள் பெரும்பாலானவர்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை. மனைவி அல்லது சகோதரிகளின் புராடக்ட்டுகளையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். சந்தை இருக்கிறது, வாங்கும் திறன் இருக்கிறது. பொருளாதாரம் வளர்கிறது எனப் பல காரணங்கள் இருந்தாலும், ஆண்களுக்கான புராடக்ட் என எதுவும் இல்லை. 2005-ம் ஆண்டு வரை இதுதான் நிலை. அப்போதுதான் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் (Fair and handsome) அறிமுகம் செய்யபட்டது. இப்போது வரை இந்தப் பிரிவில் பல புராடக்ட்டுகள் இருந்தாலும் இமாமிதான் முதல் இடத்தில் இருக்கிறது.

BeautyCare
BeautyCare

இந்த பிராண்ட் தொடங்கும்போது போட்டியே இல்லை. அப்போது அந்தப் பிரிவில் முக்கியமான பிராண்ட் என்பது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பேர் அண்ட் லவ்லிதான். ஆனால், அந்த பிராண்டைவிட அதிக விலை நிர்ணயத்து விற்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

மேலும் ஃபேர் அண்ட் ஹேண்ட்சமில் பல புதிய புராடக்ட்டுகளைக் கொண்டு வந்தது. 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது இந்த பிராண்ட். ஆனால், 2019-ம் ஆண்டுக்குள் இமாமியின் மொத்த வருமானத்தில் 10% அளவுக்கு இந்த பிராண்ட் இருக்கிறது. எம்.பி.ஏ கல்லூரிகளில் ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் குறித்து கேஸ் ஸ்டடியைப் படிக்காமல் வெளியேற முடியாத அளவுக்கு சந்தையில் பல தாக்கத்தை ஏற்படுத்தியடுது.

தற்போது நிறுவனர்கள் இருவரும் தினசரி பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டனர். இவர்களின் இரு மகன்கள்தான் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர். மற்ற பன்னாட்டு எம்.எப்.சி.ஜி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இமாமி சிறியதுபோல தோன்றும். ஆனால். கொல்கத்தாவில் இருந்து, எந்தப் பின்புலமும் இல்லாமல், ரூ.20,000 கோடிக்கு மேலான நிறுவனத்தைக் கட்டமைப்பத்திருப்பது சாதாரண வெற்றி அல்ல. அது மிகப் பெரிய திருப்புமுனை!