Published:Updated:

``இளநீர் ஜூஸ்; பாரம்பர்ய உணவு...’’ - வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு சாதிக்கும் விருதுநகர் இளைஞர்!

வெயிலை சமாளிக்க இயற்கை ஜூஸ்

கோடை வெயிலை சமாளிக்க எவ்வாறான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என டிப்ஸ் தருகிறார் விருநகரில் இயற்கை முறையில் ஜூஸ் தயாரித்து வழங்கும் இளைஞர்.

``இளநீர் ஜூஸ்; பாரம்பர்ய உணவு...’’ - வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு சாதிக்கும் விருதுநகர் இளைஞர்!

கோடை வெயிலை சமாளிக்க எவ்வாறான இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என டிப்ஸ் தருகிறார் விருநகரில் இயற்கை முறையில் ஜூஸ் தயாரித்து வழங்கும் இளைஞர்.

Published:Updated:
வெயிலை சமாளிக்க இயற்கை ஜூஸ்

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் மே 4-ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. "உச்சியைப் பிளக்கும் வெயிலுக்கு, உடல்சூட்டை எங்குகொண்டு தணிப்பது என பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்". கத்திரி வெயிலுக்கு முட்டுக்கொடுக்க, இளநீர், பிரெஸ் ஜூஸ், குளிர்பானம் உள்ளிட்ட நீர் ஆகாரங்கள் கடைகளில் இளைப்பாறுதலுக்கு ஈமொய்க்கிறது மக்கள் கூட்டம். இப்படியான சூழ்நிலையில் கோடை வெயிலை சமாளிக்க செயற்கை ரசாயன கலப்பின்றி இளநீரில் இயற்கை முறையில் ஜூஸ் தயாரித்து வழங்குகிறார் விருதுநகரைச் சேர்ந்த அருண் தங்கராஜ். விருதுநகர் எம்.ஜி.ஆர்.சிலை சந்திப்பு அருகே கோவில்பட்டி செல்லும் சாலையில் செயல்படுகிறது இவர் நடத்தும் கொக்கோ பிரஷ் ஜூஸ் கடை.

அருண் தங்கராஜ்
அருண் தங்கராஜ்

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு சுயதொழிலில் நல்ல லாபம் சம்பாதித்து வரும் அவரிடம், இயற்கை முறை தயாரிப்பு குறித்து பேசினோம், "எங்க குடும்பத்தோட பாரம்பரிய தொழிலே ஹோட்டல் பிசினஸ்தான். அதனால நானும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிட்டு வேலைக்காக கடந்த 2010-ல் வெளிநாடு போயிட்டேன். வெளிநாட்டுலேயும் ஹோட்டல் வேலைதான். இருந்தாலும் வருஷா, வருஷம் வெக்கேசனுக்கு மனைவி, குழந்தைகளோட சொந்த ஊரான விருதுநகருக்கு வந்துருவோம். அப்படி வந்துட்டு போகும்போதெல்லாம் சொந்த ஊர்ல ஹோட்டல் வச்சு தொழில் நடத்தணும் ஆசை வரும்.

அப்போதெல்லாம் தகுந்த நேரம் வரும்போது செய்யலாம்னு வெளிநாட்டுக்கு போயிடுவேன். அப்படி ஒரு சமயம் தைரியமா முடிவெடுத்து 2020-ல் வெளிநாட்டில் வேலையை விட்டுட்டு சொந்த ஊருக்கே வந்து செட்டில் ஆயிட்டேன். எங்க அப்பா, சாப்பாடு ஹோட்டல் நடத்துன்னு சொன்னாரு. எனக்கு வெறுமனே சாப்பாடு ஹோட்டல் நடத்துறதுல விருப்பமில்லை. நம்ம ஊரு கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி, மக்கள் விரும்புகிற மாதிரியான ஒரு பிசினஸ் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். அதுவும் இயற்கை முறையில இருக்கணும்னு நினைச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போ எனக்குள்ள தோணுன ஐடியாதான் இந்த பிரஸ் ஜூஸ். இளநீர்ல 12 வகைக்கும் மேலான ஜூஸ் தயார் பண்ணி வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தேன். சம்மர்ல, உடல் சூட்டை தணிக்க இளநீர் அருகம்புல் ஜூஸ், இளநீர் கற்றாழை ஜூஸ், இளநீர் அத்திப்பழ ஜூஸ்னு தயார் பண்ணி தருவேன். சீசன் நேரத்துல இளநீர் மாம்பழ ஜூஸூம் கடையில கிடைக்கும். ஜூஸ்ல எந்த விதத்திலும் சுவைக்காக ரசாயனம் கலக்கிறது இல்லை. இனிப்பு சுவைக்காக 'சீனி' கூட நான் பயன்படுத்த மாட்டேன். இளநீர் எடுத்து, அதோடு வாடிக்கையாளர்கள் விரும்புற பழத்திலிருந்து சாறு பிழிந்து கூடவே இனிப்புக்காக தேன் கலந்து ஜூஸ் கொடுப்பேன்.

அதனால என்னோட கடைக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருக்கு. 2020 மார்ச் மாசம் தான் கடை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச 10 நாள்ல வாடிக்கையாளர் கூட்டம் வரிசையில் நிற்கிற அளவுக்கு பிசினஸ் நல்ல பிக்கப் ஆச்சுது. ஆனா அடுத்த ஒரு சில நாட்களிலேயே கொரோனா 'லாக்டவுன்' போட்டாங்க. அதுல கடையை க்ளோஸ் பண்ணேன். அந்த லாக்டவுனை நான் சத்தியமா எதிர்பார்க்கல. இப்பத்தானே கடைய ஆரம்பிச்சோம், அதுக்குள்ள இப்படி ஒரு அடியா-னு ரொம்பவே சோர்ந்து போயிட்டேன்.

தேங்காய்பால் பேரீட்சை ஜூஸ்
தேங்காய்பால் பேரீட்சை ஜூஸ்

இருந்தாலும் ஆரம்பிச்ச தொழிலை அப்படியே விட்டுடக்கூடாதுனு பொறுமையா இருந்தேன். அந்தநேரத்துல என்னோட சேமிப்பு பணத்தை வச்சுத்தான் எங்க வயித்துபாட கழிச்சோம். எப்ப, அரசாங்கம் பார்சலுக்கு கடையைத் திறக்கலாம்னு சொன்னாங்களோ உடனே சுறுசுறுப்பா வந்து கடை வேலையை ஆரம்பிச்சேன். அப்போ கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள்லாம் 'நீங்க எப்ப கடையை திறப்பீங்கனு ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தோம்'னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

இது எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருந்துச்சு. சேமிப்பில் இருந்த பணமெல்லாம் கரைஞ்சு மறுபடியும் ஜீரோவிலிருந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். பார்சல் ஜூஸ் போட்டு கொடுக்க முடியாத அளவிற்கு வாடிக்கையாளர்கள் வந்துகிட்டே இருந்தாங்க. இத சமாளிக்க ஊருக்குள்ள கிளை நிறுவனம் ஆரம்பிச்சேன். அதுவும் நல்லா போச்சுது. முதல் லாக்டவுன் முடிஞ்சு கடையெல்லாம் ரீ-ஓப்பன் பண்ணவும் புதுசா ஆரம்பிச்ச கிளை கடையில வியாபாரம் 'டல்' ஆகிடுச்சு. அதனால கொஞ்சம் லாஸ் ஆச்சு. அந்தக் கடையை 'க்ளோஸ்' பண்ண வேண்டியதாயிடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கடையிலேயே ஜூஸ் வெரைட்டி காமிக்க ஸ்பெஷலாக தேங்காய்ப்பாலில் ஜூஸ் செய்ய ஆரம்பிச்சேன். தேங்காய் பால் மாதுளை ஜூஸ், தேங்காய் பால் அன்னாசி பழ ஜூஸ், தேங்காய் பால் திராட்சை ஜூஸ், தேங்காய்பால் சிவப்பு கொய்யா பழ ஜூஸ், தேங்காய் பால் பேரீட்சை ஜூஸ் செஞ்சி கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சுது. இப்ப என் கடையில அதிகமா சேல்ஸ் ஆகுறது தேங்காய் பால் பேரீட்சை ஜூஸ் தான். அந்த அளவுக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு. இதுக்கு வாடிக்கையாளருக்கு தான் நன்றி சொல்லனும். இதற்காக பொள்ளாச்சியிலிருந்து இளநீர் வாங்குறேன்.

கொள்முதல் செலவு போக மாசம் 30 ஆயிரம் ரூபா எனக்கு லாபம் கிடைக்குது. லாபத்திலிருந்து 15 ஆயிரத்தை இரண்டு பேருக்கு சம்பளம் பிரிச்சு கொடுத்திடுவேன். மீதிப் பணத்தை வங்கியில் எதிர்காலத் தேவைக்காக சேர்த்து வைக்கிறேன். மனசு நிம்மதியா இருக்கு. ஆரம்பத்துல இந்த பிசினஸ்ல மக்கள் நம்மள ஏத்துபாங்களானு டவுட் இருந்துச்சு. ஆனா, மிகப்பெரிய அளவுக்கு நம்பிக்கை கொடுத்து என்னை அடுத்தக் கட்டத்துக்கு நகர வச்சிருக்காங்க. ஆமா, இப்போ அடுத்ததா தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை சமைச்சி கொடுக்குற மாதிரி புதுசா ஹோட்டல் ஆரம்பிச்சிருக்கேன்.

இயற்கை ஜூஸ்
இயற்கை ஜூஸ்

கம்பு தோசை, கேழ்வரகு, திணை, உளுந்தங்களி, கோதுமை, சாமை, கொள்ளு, முடக்கத்தான் இப்படி பாரம்பரிய முறையில சாப்பாடு கொடுத்துட்டு வர்றேன். இதுக்கு காரணம் எங்க அம்மா! ஒருமுறை, விருதுநகர்ல ஒரு கடையில கம்பு தோசை சாப்பிட்டேன். அவ்ளோ ருசியா இருந்துச்சு. பாரம்பரிய தானியத்துல இவ்வளவு ருசியா ஒரு உணவை கொடுக்க முடியுமானு? ரொம்ப ஆச்சரியப்பட்டேன். அன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வந்து அந்த உணவகத்தில் சாப்பிட்ட சாப்பாடு பற்றி ரொம்ப சிலாகித்து எங்க அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தேன்.

கொஞ்சம் பொறுனு, என்னை உட்காரவச்சுட்டு எங்க அம்மா கிச்சனுக்குள்ள போயிடுச்சு. ஒரு 20 நிமிஷத்துல திரும்பி வரும்போது ஒரு தட்டுல தோசை எடுத்துட்டு வந்து இத சாப்பிட்டு பாருனு சொன்னாங்க. ம்ம்.. நானும் சாப்பிட்டேன். அய்யோ, அவ்ளோ ருசி, அவ்வளவு நேரமும் நான் எந்த தோசையை பற்றி சிலாகிச்சு பேசினேனோ அதே கம்பு தோசையத்தான் எங்க அம்மா சுட்டு கொடுத்திருக்காங்க. அதைச் சாப்பிட்டதுல காலையில நான் ஹோட்டல்ல சாப்பிட்ட ருசிய மறந்துட்டேன்.

எப்படிமா, இத இவ்ளோ ருசியா உன்னால பண்ண முடிஞ்சிதுனு கேட்டப்போ, "கம்பு வாங்கி அது கூட வேறு எதையும் சேர்க்காம அப்படியே அரைச்சி மாவெடுத்து அதுல தோசை ஊத்துனா வந்துற போகுது. அத விட்டுட்டு, ரெடிமேடா கிடைக்கிற கம்பு மாவோட தோசை மாவை கலந்து கடையில சுட்டு தர்ற தோசையில நீ என்ன ருசி பாத்தியோ"னு சிம்பிளா சொல்லிட்டு உள்ள போயிட்டாங்க. அப்ப தோனுச்சு எனக்கு இந்த பாரம்பரிய உணவு ஹோட்டல் பிசினஸ். அதுல இருந்து வெளியில சாப்பிடுற பழக்கமே கிடையாது. எங்க அம்மாகிட்ட இருந்து பாரம்பரிய உணவுகள் பற்றி ஒவ்வொரு கைப்பக்குவத்தையும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். அப்படி உருவானது தான். இந்த பாரம்பரிய உணவு ஹோட்டல்.

இந்த ஹோட்டல்ல உணவுகளை சமைச்சி கொடுக்கிறதுதான் நான். ஆனா என்னோட மாஸ்டர் செஃப், எங்க அம்மாதான். இந்த உணவுகளலெல்லாம் நாம வீட்டுலயே செய்யக்கூடியதுதான். ஆகையால, வெயில் காலத்துல நாளுக்கு நாள் கூடுற‌ வெப்பத்தை சமாளிக்க சிக்கன் உள்பட ரெடிமேடா கிடைக்கிற எண்ணெய் உணவுகள் இல்லாம, இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்தை கடைபிடிச்சா கட்டாயம் உடம்புல எனர்ஜி குறையாம பாத்துக்கலாம், ஆரோக்கியமாகவும் வாழலாம்" என்றார் புன்சிரிப்புடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism