Election bannerElection banner
Published:Updated:

Suryoday SFB IPO: சூப்பர் லாபம் தருமா சூர்யோதய் பங்கு விற்பனை?

சூர்யோதை எஸ்.எஃப்.பி
சூர்யோதை எஸ்.எஃப்.பி

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது!

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் இந்த வங்கியின் பங்குகளை வாங்க நினைக்கிறவர்கள் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்தப் புதிய பங்கு வெளியீட்டின்மூலம் இந்த வங்கியானது ரூ.581 கோடியைத் திரட்டப்போகிறது. இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் வசமிருக்கும் 1.09 கோடி பங்குகளையும், 81.50 லட்சம் புதிய பங்குகளையும் இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் வெளியிடுகிறது. இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்.டி.எஃப்.சி ஹோல்டிங்ஸ், கஜா கேப்பிடல், கோட்டக் மஹிந்திரா லைஃப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்கள் சூர்யோதய் எஸ்.எஃப்.பியில் ஏற்கெனவே முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

IPO
IPO

இந்த வங்கியானது இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது முதல் நிலை நகரங்களில் இந்த வங்கிக் கிளை அமைக்கத் தேவைப்படும் நிதிக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட உள்ளது.

இந்த வங்கியின் ஒரு பங்கு விலை ரூ.303 - 305 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் குறைந்தபட்சம் 49 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய பங்கு வெளியீட்டில் இந்த வங்கிப் பங்கை வாங்கலாமா, கூடாதா என்பது பல நிறுவனங்களில் பல விதமான ஆலோசனை தந்துள்ளது. எல்.கே.பி செக்யூரிட்டீஸ் நிறுவனம் ''இந்த நிறுவனப் பங்கை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்'' எனச் சொல்லி இருக்கிறது.

சூர்யோதை எஸ்.எஃப்.பி
சூர்யோதை எஸ்.எஃப்.பி

சில நிறுவனங்கள், இந்தப் பங்கின் மூலம் அதிகம் லாபம் கிடைக்காவிட்டாலும் நீண்ட காலத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்க பரிசீலிக்கலாம் என்று சொல்லி இருக்கின்றன.

ஆனால், கே.ஆர்.சோக்‌ஷி, பிரபுதாஸ் லீலாதர் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பங்கு வெளியீட்டில் இந்தப் பங்கினை வாங்குவதைத் தவிர்க்கலாம் என்று சொல்லி இருக்கின்றன.

இந்தப் பங்கு வெளியீடு தொடங்கிய முதல் நாளான இன்று 42% அளவுக்கு இந்தப் பங்கினை வாங்க விண்ணப்பம் வந்துசேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு