Published:Updated:

`பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை!' - அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு

பென்ஷன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

`பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த பரிசீலனை!' - அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

Published:Updated:
பென்ஷன்

புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்குப் பின்பு குடும்பத்துக்கு அத்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது.

 பென்ஷன்
பென்ஷன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது; பணிக்கொடை, மருத்துவ காப்பீடு போன்ற எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்த இந்தப் புதிய பங்களிப்பு திட்டத்தை எதிர்த்து, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சுமார் 19 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்  நடைமுறைப்படுத்தி அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதற்கு பதில் அளித்து நிதித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால கிருஷ்ணன் கடிதம் எழுதினார். அதில், ``1.4.2003-லிருந்து அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதில் 6 லட்சம் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டனர்.

பென்ஷன்
பென்ஷன்

ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை வல்லுநர் குழு ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், கூடிய விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசாணைகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism