Election bannerElection banner
Published:Updated:

IPO-ல் ரூ.1,000 கோடி திரட்டும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி... கடந்த நிதியாண்டு செயல்பாடு எப்படி?

ஐ.பி.ஓ
ஐ.பி.ஓ

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐ.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. பங்கு விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

தூத்துக்குடியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இது 100-வது ஆண்டு.

தற்போது இந்த வங்கி ஐ.பிகோ எனப்படும் பொதுபங்கு வெளியிடத் தயாராகிவிட்டது. 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியாக மாற்றப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இணையம் வழியாக நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வங்கியின் ஐ.பி.ஓ குறித்த தீர்மானமும் ஒன்றாகும். இதற்கு பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 2016-ம் ஆண்டே இந்த வங்கி ஐ.பி.ஓ வருவது குறித்து விவாதிக்கப் பட்டது. ஆனால், இந்த வங்கியில் பல காலமாக நிர்வாக ரீதியிலான சிக்கல் இருந்து வந்ததால், அப்போது பெரும்பாலான பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது 75% பங்குதாரர்கள் இந்த ஐ.பி.ஓ-வுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

அதனால், நடப்பு ஆண்டின் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் இந்த வங்கியின் ஐ.பி.ஓ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வங்கி ஐ.பி.ஓ-வுக்கான ஆவணங்களை 8 முதல் 10 வாரங்களுக்குள் செபி அமைப்பிடம் சமர்பிக்கும் என இந்த வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து 1,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்த வங்கி முடிவு செய்துள்ளது. பங்கு விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த வங்கியைப் பொறுத்தவரை, செயல்பாட்டில் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், பங்குதாரர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இதுவரை ஐ.பி.ஓ வெளியாகாமலே இருந்தது. தற்போது கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதால், ஐ.பி.ஓ வெளியாகிறது.

நிதிநிலை அறிக்கை!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 2020-21 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் இந்த வங்கி சிறப்பாகச் செயல்பட்டிருப்பதால், நிகர லாபம் கடந்த ஆண்டு (2019-20) ரூ.407.69 கோடியிலிருந்து நடப்பாண்டு ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 47.99% அதிகம் ஆகும்.

கடந்த நிதி ஆண்டில் ரூ.36,825.03 கோடியாக இருந்த இந்த வங்கியின் வைப்புத்தொகை, தற்போது ரூ.40,970.42 கோடியாக அதிகரித்துள்ளது. இது 11.26% உயர்வு ஆகும்.

பங்கு - Representational image
பங்கு - Representational image
ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு வாங்கி          லாபம் பார்ப்பது எப்படி? கவனிக்க வேண்டிய உத்திகள்...

இதேபோல, ரூ.65,061.21 கோடியாக இருந்த இந்த வங்கியின் மொத்த வணிகம் ரூ.72,511.45 கோடியாகவும், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை ரூ.9,518.05 கோடியிலிருந்து ரூ.11,685.27 கோடியாகவும், வட்டி இல்லா வருமானம் ரூ.526.45 கோடியிலிருந்து ரூ.644.17 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.995.05 கோடியிலிருந்து ரூ.1,202.04 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதன் வளர்ச்சி விகிதம் 20.80 சதவிகிதமாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் ரூ.1,319.51 கோடியிலிருந்து, ரூ.1,537.53 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு