Published:Updated:

மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏர் இந்தியா; மீண்டு சாதிக்குமா?

டாடா - ஏர் இந்தியா

ஏர் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கியதே டாடா குழுமம்தான். 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டாடா குழுமம் தொடங்கிய நிறுவனம், 1953-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டு, 69 வருடங்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் டாடா குழுமத்திடமே வந்திருக்கிறது.

மீண்டும் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏர் இந்தியா; மீண்டு சாதிக்குமா?

ஏர் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கியதே டாடா குழுமம்தான். 1932-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், டாடா குழுமம் தொடங்கிய நிறுவனம், 1953-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டு, 69 வருடங்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் டாடா குழுமத்திடமே வந்திருக்கிறது.

Published:Updated:
டாடா - ஏர் இந்தியா

டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று ஒப்படைத்தது இந்திய அரசாங்கம். டாடா குழுமத்தின் டாலேஸ் பிரைவேட் லிமிடெட்தான் இனி ஏர் இந்தியாவின் புதிய முதலாளியாக இருக்கும். ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை அரசாங்கத்திடம் இருந்து டாடா நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், ஏர் இந்தியா என்ற நிறுவனத்தைத் தொடங்கியதே டாடா குழுமம்தான். 1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டாடா குழுமம் தொடங்கிய நிறுவனம், 1953-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தேசியமயமாக்கப்பட்டு, 69 வருடங்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் டாடா குழுமத்திடமே வந்திருக்கிறது.

Air India
Air India

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூ.70,000 கோடி நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை செயல்படுத்த முடியாமல் அதை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது பல தனியார் நிறுவனங்கள் கேட்டு இறுதியாக டாடா குழுமம் வாங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் 11, 2021 அன்று ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு வழங்க மத்திய அரசாங்கம் விருப்ப ஒப்பந்தத்தை (Letter of Intent) வழங்கியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் 100% பங்கினை டாடாவுக்கு விற்பனை செய்ய அரசு உறுதி செய்தது. இந்த நிலையில், ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியா டாடா குழுமத்தின் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த 18,000 கோடி ரூபாயில், ரூ.2700 கோடியைப் பணமாகவும், ரூ.15,300 கோடிக்கு ஏர் இந்தியாவின் கடனை எடுத்துக்கொள்வது என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதைப் பற்றிப் பேசியுள்ள முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துஹின் காந்த் பாண்டே, ``எல்லாப் பங்குகளும் டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. இனி டாலேஸ்தான் ஏர் இந்தியாவின் புதிய முதலாளி” என்றார்.

ரத்தன் டாடா
ரத்தன் டாடா

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள தொழிலதிபர் ரத்தன் டாடா, ``குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்றால் என்ன என்று தன் செயல்பாட்டின் மூலம் நிரூபித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலின் மீது பிரதமர் வைத்திருக்கும் நம்பிக்கையே இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்திற்குக் காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு டாடா குழுமத்திடம் ஏர் ஆசியா மற்றும் விஸ்தாரா என்று இரண்டு விமான நிறுவனங்கள் இருந்தன. இப்போது ஏர் இந்தியாவும் சேர்ந்திருப்பதால், டாடா குழுமம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.