Published:Updated:

`ஆயுள் காப்பீட்டு பாலிசி பிரீமியத்துக்கு தனி வரிச்சலுகை!' லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் கோரிக்கை

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்குக் கட்டும் பிரீமியத்தில், தனியே வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் கோரிக்கை விடுத்திருக்கிறது.

தற்போது, ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. பிராவிடெண்ட் ஃபண்ட், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் அசல் உள்ளிட்ட 16 வகையானவற்றுக்கு மொத்தமாக ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

இதனால், பெரும்பாலானோருக்கு இதர வரிச் சலுகைகள் போக (ரூ.1.5 லட்சம் முடிந்துவிடுகிறது) ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெற முடியாத நிலை காணப்படுகிறது.

நிரப்பு... மூடு... மறந்துவிடு... கடைப்பிடிக்கக் கூடாத ஆயுள் காப்பீடு அணுகுமுறை!

இந்த நிலையில், `ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்குக் கட்டும் பிரீமியத்தில், தனியே வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும்' என மத்திய நிதி அமைச்சகத்துக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் கோரிக்கை விடுத்திருக்கிறது. ஆயுள் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டங்களுக்கு கட்டும் பிரீமியத்தில், நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் தனியே வரிச் சலுகை அளிக்க வேண்டும்.

ஆயுள் காப்பீடு
ஆயுள் காப்பீடு

இதன்மூலம், நாட்டில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான லைஃப் இன்ஷூரன்ஸ் கவுன்சில் கோரிக்கை வைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு