Published:Updated:

வரி கட்டுபவரா நீங்கள்?அக்டோபரிலிருந்து இந்தத் திட்டத்தில் சேர முடியாது... அரசு அதிரடி அறிவிப்பு

வருமான வரி

என்.பி.எஸ் மற்றும் அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்களில் 5.33 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் ரூ.7.4 லட்சம் கோடி சேமிப்பு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இருக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மட்டும் 3.739 கோடியாக உள்ளது.

வரி கட்டுபவரா நீங்கள்?அக்டோபரிலிருந்து இந்தத் திட்டத்தில் சேர முடியாது... அரசு அதிரடி அறிவிப்பு

என்.பி.எஸ் மற்றும் அடல் பென்சன் யோஜனா ஆகிய திட்டங்களில் 5.33 கோடி பேர் சந்தாதாரர்களாக இருக்கின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் ரூ.7.4 லட்சம் கோடி சேமிப்பு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இருக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மட்டும் 3.739 கோடியாக உள்ளது.

Published:Updated:
வருமான வரி

வரி கட்டுபவர்கள் யாரும் அரசின் இந்தத் திட்டத்தில் சேர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தின்படி வரி செலுத்துபவராக இருக்கும் ஒரு நபர் அரசின் ஓய்வூதியத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் சேர அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இன்று சேமிப்பு செய்யவும் முதலீடு செய்யவும் பல விதமான திட்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு. ஏனெனில், ரிஸ்கும் குறைவு, பாதுகாப்பான முதலீடு, வரி சலுகை, எல்லாவற்றுக்கும் மேலாகக் குறைந்த வருமானம் என்றாலும் நிலையானதாகக் கிடைக்கும். அது போன்ற திட்டங்களில் ஒன்று அடல் பென்சன் யோஜனா.

பென்ஷன்
பென்ஷன்

2015 - 16-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்துக்குப் பின்பு பயனளிக்கும் விதமாகக் கொண்டு வரப்பட்டது. அரசின் இந்த ஓய்வீதிய திட்டமானது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. வயது மற்றும் பென்சன் தொகையைப் பொறுத்து இதற்கான மாத சந்தா தொகை ரூ.42 முதல் ரூ.1,454 வரை செலுத்த வேண்டிவரும்.

இத்திட்டத்தில் 60 வயது முதல் ஆயுள் வரை கணக்குதாரருக்கும், அதன் பிறகு, அவரின் வாழ்க்கை துணைக்கும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதாந்தர பென்சன் தொகை கிடைக்கும். இருவரின் இறப்புக்குப் பிறகு, வாரிசுக்கு ரூ.1.70 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரை தொகுப்பு நிதியாக வழங்கப்படும்.

வரி
வரி

18 வயதில் இத்திட்டத்தைத் தொடங்கினால் 60 வயதுக்குப் பிறகு, மாதம் ரூ.1,000 பென்சன் பெறும் திட்டத்துக்கு மாத சந்தா ரூ. 42 மட்டுமே. ரூ.5,000 மாத பென்சன் பெற மாதம் ரூ.210 மட்டும் செலுத்தினால் போதும். 40 வயதில் இத்திட்டத்தைத் தொடங்கினால் 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.1,000 பென்சன் பெறும் திட்டத்துக்கு மாத சந்தா ரூ. 291 மட்டுமே. ரூ.5,000 மாத பென்சன் பெற மாதம் ரூ.1,454 செலுத்த வேண்டும். ஒவ்வொரு வயதினருக்கும் மாத சந்தா தொகை பென்சன் தொகையைப் பொறுத்து மாறும்.

அரசின் ஓய்வூதிய திட்டங்களான என்.பி.எஸ் மற்றும் அடல் பென்சன் யோஜனா இரண்டிலும் 5.33 கோடி பேர் சேமிப்பு செய்து வருகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் ரூ.7.4 லட்சம் கோடி சேமிப்பு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இருக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மட்டும் 3.739 கோடியாக உள்ளது.

அடல் பென்சன் யோஜனா
அடல் பென்சன் யோஜனா

இந்நிலையில் அக்டோபர் 1 முதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் வரி கட்டுபவர்கள் சேர முடியாது. வருமான வரி சட்டத்தின் கீழ் வரி செலுத்தும் யாரும் இந்தத் திட்டத்தில் சேர அனுமதி இல்லை.

அப்படி அக்டோபருக்குப் பிறகு வரி செலுத்துவோர் யாரும் இந்தத் திட்டத்தில் இணைந்தது தெரியவந்தால் அந்தக் கணக்கு மூடப்பட்டு அதில் சேமிக்கப்படும் தொகை சந்தாதாரிடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.