Published:Updated:

`வாட்ஸ் அப், மெசஞ்சர்'க்கு மட்டும் விதிவிலக்கா... அரசிடம் டெலிகாம் நிறுவனங்கள் கேள்வி

மொபைல் டவர்

டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையின் பெரும்பகுதியை இந்த ஓடிடி தளங்கள்தான் பயன்படுத்துகின்றன. இதற்காக அவை எந்தக் கட்டணமும் டெலிகாம் நிறுவனங்களுக்குச் செலுத்துவதில்லை.

`வாட்ஸ் அப், மெசஞ்சர்'க்கு மட்டும் விதிவிலக்கா... அரசிடம் டெலிகாம் நிறுவனங்கள் கேள்வி

டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையின் பெரும்பகுதியை இந்த ஓடிடி தளங்கள்தான் பயன்படுத்துகின்றன. இதற்காக அவை எந்தக் கட்டணமும் டெலிகாம் நிறுவனங்களுக்குச் செலுத்துவதில்லை.

Published:Updated:
மொபைல் டவர்

இந்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தொலைத்தொடர்பு மசோதா ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. அவற்றுக்கு டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பொருந்தாது என்ற நிலை இருப்பதால் அவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று டெலிகாம் நிறுவனங்கள் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்...
ஜியோ, வோடஃபோன், ஏர்டெல்...

இதுதொடர்பாக, செல்லுலார் ஆப்ரேட்டர்கள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, `பாரம்பரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் அதே தகவல் தொடர்பு சேவைகளை வாட்ஸ் அப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற ஓடிடி வகை சமூக வலைதளங்களும் வழங்கிவருகின்றன. ஆனால், டெலிகாம் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் எதுவும் இந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு விதிக்கப்படவில்லை.

2022 தொலைத்தொடர்பு மசோதாவில் ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், டெலிகாம் நிறுவனங்களும், ஓடிடி நிறுவனங்களும் வழங்கும் ஒரே மாதிரியான சேவைகளுக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

டெலிகாம் நிறுவனங்கள்தான் அலைக்கற்றைகளை விலை கொடுத்து ஏலம் எடுத்திருக்கின்றன. வெவ்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கும் உரிமைத் தொகை செலுத்த வேண்டும். ஆனால், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களுக்கு இந்தச் செலவுகள் எதுவுமே இல்லை.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்

டெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் இணைய சேவையின் பெரும்பகுதியை இந்த ஓடிடி தளங்கள்தான் பயன்படுத்து கின்றன. இதற்காக அவை எந்தக் கட்டணமும் டெலிகாம் நிறுவனங்களுக்குச் செலுத்துவதில்லை.

செலவுகளை மேற்கொண்டு சேவைகளை வழங்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, அதே வகையான சேவைகளை வழங்கும் சமூக வலைதளங்களுக்கு அதே கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவில்லை. இதனால் சமமான போட்டி வாய்ப்புக்கான சூழல் இல்லாத நிலை உள்ளது.

எனவே, ஒரே மாதிரியான சேவைகளுக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளது.

இணைய சேவை
இணைய சேவை

டெலிகாம் நிறுவனங்களின் இந்தக் கோரிக்கையை அரசு ஏற்குமா, எப்போது தொலைதொடர்பு வரைவு மசோதாவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பது போகப்போகத்தான் தெரியும்.